User:Ilakkuvanar Thiruvalluvan/sandbox
புலம் பெயர் பறவைகள் (இடம் பெயரும் பறவைகள்) :பறவைகள் கால நிலைக்கேற்ப இடம் விட்டு இடம் மாறும் பழக்கம் உடையன.பறவைகளின் இடப் பெயர்ச்சி குறித்தும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தென்திசைக் குமரியாடி வடதிசைக் காவிரிபாடி
எனச்சத்திமுற்றப் புலவரும் இதனைக் குறிக்கிறார்.
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின்
என்னும் (புறநானூறு 67) அடிகள் 'வலசை' (Migration) பற்றிய குறிப்பை உணர்த்துகின்றது.
வலசை என்பது இடம் விட்டு இடம் பெயருதலைக் குறிக்கும் சொல்லாகும். இடம்விட்டு வேற்றிடம் செல்லும் பறவைகளையும் தம் இடம் விட்டு இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகளையும்
புலம் பெயர் பறவைகள் என்றும் வம்பப்புள் என்றும்
நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு முதலான சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
அலங்கல் அஞ்சினைக் குடம்பைப் புள்ளெனப் புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந்தாங்கு
என்னும் அகநாநூற்றுப் பாடல் (113) புலம்பெயரும் பறவையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
என்னும் புறநானூற்றுப்பாடல் (120)வரி இடம் பெயர்ந்து புதிய பறவைகள் வருவதையும் பழைய பறவைகள் இடம் பெயர்ந்து செல்வதையும் குறிப்பிடுகின்றது.
வதியும் பறவை என நாட்டிலேயே தங்கியுள்ள பறவைகள் குறிக்கப் பெறும்.
வதிகுருகு
எனக் குறுந்தொகைப் பாடல் (5) நாட்டிலேயே தங்கியுள்ள குருகு பற்றிக் குறிக்கும்.
கருத்து வழங்கல்; இலக்குவனார் திருவள்ளுவன்