User:Udaiyanpattikaran
நாங்களும் எங்கள் தாத்தாக்களும்
வீரம் உழைப்பு,நேர்மை இதை மட்டுமே கொண்ட ஓர் சமூகம்.தலைவணங்காத தன்மை அடி வயிறை கலங்கவைக்கும் ஆளுமை.இப்படியும் ஓர் காலத்தில் நம்மூரில் வாழ்ந்தார்கள் என நினைக்கும் போது நம்முள் ஓர் கர்வம் வரத்தான் செய்கிறது. Wwe super star jhon cenavai நாம் அறிவோம் அவரின் ஜட்டி அளவை கூட நாம் அறிவோம் அதை சொல்வதில் ஓர் அற்ப மகிழ்ச்சி வேறு. ஆனால்,எத்தனை தலைமுறை தாத்தாக்களின் பெயர் நமக்கு தெரியும்?அதுகூட வேண்டாம் நம் தாத்தாவுடன் எவ்வளவு நிமிடம் பேசி இருப்போம்?அவர்களுக்காக நாம் எவ்வளவு நேரம் செலவு செய்திருப்போம்? நாம் வயதில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என தெரியுமா?நேற்று கிர்க்கெட் இன்று பேஸ்புக் நாளை இன்னும் ஒன்று இப்படியே சென்றுகொண்டே இருந்தால் நாளைய தலைமுறைக்கு நாம் யாரென்று தெரியாமலேயே போய்விடும் நண்பா.
அண்டர்டேகர் ஜன்சீன
இவர்களை விட இரு மடங்கு நம் தாத்தாக்கள் இருந்தார்கள் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?நினைத்தாலே அடி வயிறு கலங்கத்தான் செய்கிறது. இருந்தார்கள் இப்போது அவர்களின்எச்சங்களாக இன்னும் சிலர் இருக்கிறார்கள்.ஆனால் இன்று அவர்களை கற்பனை என்று சொல்லவைக்கும் நமது இன்றைய தலைமுறை இளைஞரின் தோற்றம்.எதனால் இது நடந்தது?
இன்றைய தலைமுறை மீது தப்பில்லை நமக்கு அவர்களின் வாழ்ககை சொல்லப்படவில்லை.நமக்கு சரியான வாய்ப்பும் கொடுக்கபடவில்லை,பணம் சம்பாதிப்பது எப்படிஎன்று கற்றுகொடுதார்களே தவிர உடம்பை பேணுவது எப்படி என்று சொல்ல மறந்து விட்டார்கள்.அல்லது அவர்களுக்கு விருப்பம் இல்லாது இருக்கலாம்.விளைவு இன்று நாம் பார்க்கிறோம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையன் ஏழாம் வகுப்பு பையன் போல் தோற்றம். நாம் பொதுவாக உனக்கு என்ன தெரியும் என கேட்டால் என்ன சொல்வோம்,சிலர் ஹார்ட்வேர் தெரியும் என்பார்கள்,சிலர் சாப்ட்வேர் தெரியும் என்பார்கள் இன்னும் சிலர் தேவையான அளவு தெரியும் என்று தனது அறிவை அறியாமையால் சொல்வார்கள்.இப்போது சொல்லுங்கள், விவசாயம் தெரியுமா?உங்கள் உணவை உங்களால் உற்பத்தி செய்ய முடியுமா?உங்களை உங்களால் தற்காத்துக்கொள்ள முடியுமா?நீங்கள் அருந்தும் தண்ணிரை உங்களால் பூமியிலிருந்து பெற முடியுமா?கேள்வி நீண்டு கொண்டே போகும் ஆனால் பதில் இல்லை. . இப்படியும் இருந்தார்கள் விவசாயம் செய்தார்கள் சந்தைபடுத்தி வளமான வாழ்வு வாழ்ந்தார்கள்.இன்றும் ஊர்களில் அவர்கள் வெட்டிய கிணறுகள் அவர்களின் பெயரை காற்றில் கரைந்த கண்ணிர் துணியாய் இன்றும் சொல்லுகிறது,அவர்கள் தன்னை மட்டும் அல்லாது ஊருக்கே காவலாய் இருந்தார்கள்.அதை ஓர் ஆள் மட்டும் செய்யவில்லை ஊரில் உள்ள அனைத்து பெரும் செய்தார்கள்.அவர்களுக்கு சிலம்பு தெரியும்,குஸ்தி தெரியும்.இவர்களின் தோற்றம் ஆறடி உயரம் நூறு, முதல் நூற்றிஐம்பது கிலோ எடை கொண்டவர்களாக இருந்தார்கள்,ஓர் ஆட்டை ஓர் ஆள் சாப்பிடும் சக்தி கொண்டவர்களாக இருந்தார்கள். ஓர் தடவை மேலதனியம் சுத்துப்பட்டு கிராமம் அனைத்திலும்,திருடர்கள் திருடினார்கள்,ஆனால் உடையான்பட்டியில் மட்டும் மாட்டிகொண்டார்கள்,அவர்களைகோவில் துணில் ஓர் வாரம் கட்டிபோட்டு இனி எங்கள் தலைமுறையில் யாரும் இந்த ஊரில் திருடமட்டார்கள் என்று சத்தியம் வாங்கிகொண்டு விட்டார்களாம்,இது ஓர் சின்ன உதாரணம் மட்டும்தான்.அவர்கள் தங்களுக்காக மட்டும் இல்லை ஊருக்கே காவலாய் இருந்தார்கள்.
அவர்கள் தங்கள் தற்காப்பு கலையை அடுத்தவர்களுக்கும் சொல்லி கொடுத்தார்கள்.காமாட்சி தாத்தா சிலம்பாட்டத்தில் பேர்போனவர்.கருப்பையா தாத்தா வஸ்தா,குஸ்தியில் பேர்போனவர்.இப்படி எத்தனையோ தாத்தாக்களின் பெருமைகளை தெரியாமலே இழந்துவிட்டோம்,இனிமேலும் வேண்டாம் நண்பர்களே,..
நீ யார் ?உன் வம்சம் என்ன? உன் பாட்டன்,பூட்டன்,தாத்தான் எப்படி பட்டவர்கள்,என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா? இதை உங்களால் கூகுள் சேர்ச்சில் போய் தேட முடியாது நண்பா.
பெரியவர்களை மதிக்க கற்றுகொள்,அவர்களிடம் கொஞ்சம் நேரம் செலவுசெய்து கேள் நீ யாரென்று உன் வம்சம் என்னவென்று,சொல்ல்வார்கள் நீ யாரென்று கண்டிப்பாக உனக்கு புல்லரிக்கும். இப்போது இவரின் பையன் என்று உன்னை அறிமுகம் செய்து கொள்கிறாய்,உன் தாத்தாவை பற்றி நீ அறிந்தால் இவரின் பேரன் என்று அறிமுகம் செய்து கொள்வாய்.அவர்கள் வாழ்ந்த ஊரில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமைப்பட வேண்டும். அதே வேளையில் தவறவிட்ட தருணத்தை நினைத்து வருத்தப்படவும் வேண்டும்,
வாரியார் ஜீன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்,அது நம் மண்ணில் பிறந்த அனைவர்க்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம் நண்பா,...எப்படிஎன்றால் உன் தாத்தாவும் ஓர் வாரியார் தான்.ஆனால் அவர்கள் சந்தித்தது போரை அல்ல,ஓரு நூற்றாண்டின் பெரும் பஞ்சத்தை.
இது நடந்தது 17.18ஆம் நூற்றாண்டுகளில் ஆம் நண்பா , இது கட்டு கதை அல்ல,நடந்த உண்மை கதை.சுபபோகம் வாழ்ந்த மன்னர்களுக்கு நம் தாத்தாக்கள் சளைத்தவர்கள் அல்ல.ஆனால்சோம்பேறிகளும் அல்ல கடும் உழைப்பாளிகள்.ஓர் ஆளாய் ஓர் ஏக்கருக்கு தண்ணீர் பயிச்ச கூடிய அளவுக்கு வல்லமை கொண்டவர்கள்.இதில் என்ன ஆச்சிரியம் என்று நீங்கள் கேட்டால் என்னிடம் பதில் உண்டு.அந்த காலத்தில் மாடுகளை கொண்டு அறுபதுஅடி,என்பது அடி கேணியில் இருந்து தண்ணீர் பயிச்சுவர்கள்,ஆனால் மாடுகள் இல்லாமல் கையால் இறைத்து தண்ணீர் பயிச்சினர்கள் என்றால் சாதாரண விஷயமாக எனக்கு படவில்லை.
அதனால் தான் என்னவோ அவர்களின் சாப்பாட்டின் அளவும் அதிகமாகவே இருந்தது.ஒரு ஆடு வாங்கி தாமாகவே சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு மீதம் உள்ளதை உப்பு கண்டம் போட்டு aசாப்பிட்டு முடிக்கும் சக்திபெற்றவர்கள் என்று பார்த்தால் அதற்கு பின்னால் அவர்களின் உழைப்பு இருக்கிறது.அந்த காலத்தில் அவர்கள் சாப்பிட்டது அனைத்தும் சக்தி கொடுப்பதாகவே இருந்தது,அல்லாது தேர்ந்தோடுதர்கள்.நம் தாத்தாக்களின் சில சண்டியர் தாத்தாக்களும் உண்டு.அவர்கள் விரும்பி குடித்தது கள்ளாகவே இருந்தது.அதையும் ஒருமரத்து கள் ஒரேஆல் ஒரே நேரத்தில் குடிப்பார்கள்.உடம்பை காப்பதில் தனி கவனம் செலுத்தவில்லை என்றாலும் அவர்கள் உண்ணும் உணவு அப்படி இருந்தது.
இதெல்லாம் பஞ்சம் ஆரம்பிக்கும் முன்னால்,இதே நந்தன வருடத்தில் தான்,அரிசியை கோவணத்தில் ஒலித்து கொண்டு வந்து சமைத்து சாப்பிடும் நிலைமையும் வந்தது.ஆம் தாறுமாறான தட்பவெப்ப நிலை. பருவ மழை பொய்த்தது; கடும் வறட்சி. விவசாயம் பாதிப்பு; விளைச்சல் இல்லை... தென்னை மரங்கள் சரசரவென சாய்கின்றன; கால்நடைத் தீவனத்திற்குத் தட்டுப்பாடு; அணைகள் வறண்டன; இப்படி சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகளால், எங்கும் சோகம். பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் சென்றது என்பது வரலாறு; இது நிகழ்ந்தது சங்க காலத்தில்! ஒரு கொடிய பஞ்சம் 1876 - 78களில் ஏற்பட்டது. இதை, "தாது - ஈசு வருடப் பஞ்சம்!' என்று வரலாறு குறிப்பிடுகிறது. இப்பஞ்சத்தின் போது, மக்கள் பட்டினியால் வாடினர்; பட்டினிச் சாவுகளும் நிகழ்ந்தன. உண்ண உணவின்றி இலை, தழைகள், வேர் கிழங்குகளை உண்டு, மக்கள் பசியைப் போக்கினர். நோய் நொடிகளுக்கு இலக்காகி, மடிந்தனர்.தொண்டுள்ளம் கொண்டவர்கள், கஞ்சித் தொட்டிகள் தொடங்கி, மக்கள் பசிப் பிணியை அகற்றினர். அப்போது மியான்மர் (பர்மா) குருணை அரிசி பெற்று, மக்கள் பசி தீர்த்துக் கொண்டனர்.மழை இல்லை பட்டிதொட்டியெங்கும் பஞ்சம். (ஆதாரம்:- பேராசிரியர் ஒருவர் சொல்கிறார்... 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று! ஹிஸ்ட்டிரி ரிபீட்ஸ் - வரலாறு திரும்பும் என்கிற கோட்பாடு உண்மையானது... இன்று, பூமியின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான ஆழ் குழாய் கிணறுகளின் துளைகள்! நிலத்தடி நீர் மட்டம் கானல் நீரானது! தாறுமாறான தட்பவெப்ப நிலை. பருவ மழை பொய்த்தது; கடும் வறட்சி. விவசாயம் பாதிப்பு; விளைச்சல் இல்லை... தென்னை மரங்கள் சரசரவென சாய்கின்றன; குடிநீருக்கு விலை; கால்நடைத் தீவனத்திற்குத் தட்டுப்பாடு; அணைகள் வறண்டன; மின் பற்றாக்குறை... இப்படி சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகளால், தமிழகம் எங்கும் சோகம் காண்கிறோம். பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் சென்றது என்பது வரலாறு; இது நிகழ்ந்தது சங்க காலத்தில்! ஒரு கொடிய பஞ்சம் 1876 - 78களில் ஏற்பட்டது. இதை, "தாது - ஈசு வருடப் பஞ்சம்!' என்று வரலாறு குறிப்பிடுகிறது. இப்பஞ்சத்தின் போது, மக்கள் பட்டினியால் வாடினர்; பட்டினிச் சாவுகளும் நிகழ்ந்தன. உண்ண உணவின்றி இலை, தழைகள், வேர் கிழங்குகளை உண்டு, மக்கள் பசியைப் போக்கினர். நோய் நொடிகளுக்கு இலக்காகி, மடிந்தனர். நீதிபதி வேதநாயகம் பிள்ளை போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்கள், கஞ்சித் தொட்டிகள் தொடங்கி, மக்கள் பசிப் பிணியை அகற்றினர். இரண்டாவதாக, 1939 - 40களில், "கல் தட்டிப் பஞ்சம்' ஏற்பட்டது. இது, "வெகு தான்ய வருடப் பஞ்சம்' என்று சொல்லப்பட்டது. ஆடு, மாடுகளுக்குத் தீனி இல்லை. ரோடு போட, ஓடக்கல்லைத் தட்டி கூலி பெற்றனர் மக்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். மியான்மர் (பர்மா) குருணை அரிசி பெற்று, மக்கள் பசி தீர்த்துக் கொண்டனர். அப்போதும் கஞ்சித் தொட்டி தொடங்கி உணவளித்ததை நான் நேரில் கண்டுள்ளேன். மூன்றாவதாக, 2001 - 2002ல் பஞ்சம் ஏற்பட்டது. சித்ரபானு ஆண்டில் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், கால்நடைகளுக்குத் தீனி இல்லாத நிலைமை, தென்னை மரங்கள் சாய்ந்தன; சாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக, தற்போது சோற்றுப் பஞ்சமில்லை. இம்மூன்று பஞ்சங்களுக்கிடையே ஒரு பொதுவான தொடர்புள்ளதைப் பார்க்கலாம். அதாவது, ஒரு பஞ்சத்திற்கும் அடுத்த பஞ்சத்திற்கும் உள்ள இடைவெளி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள். 1876க்கும் 1939க்கு மிடையே, 63 ஆண்டுகள், 1939க்கும் 2002க்கு மிடையே, 63 ஆண்டுகள். எனவே, 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியில் மாற்றம் நிகழும் என்பது புலனாகிறது. வரலாற்றில் மாதம் மும்மாரி பொழிந்த காலமுண்டு; அது வெறும் கற்பனை அன்று. முன்பு இயற்கைச் சூழலில் சமச்சீர் நிலவியது. தற்போதைய நிலைமையே வேறு... மனிதனின் பேராசையும், விவேகமின்மையும் இயற்கை வளங்களை தீர்ப்பதன் மூலம், இயற்கைச் சமச்சீர் தொலைந்து விட்டது; தொலைக்கப்பட்டு விட்டது. எனவே, தாறுமாறான தட்ப வெப்ப நிலையும் சுற்றுச் சூழலில் சீர்கேடுகளும் நிலவுவதைக் காண்கிறோம். ஆகையால், மாதம் மும்மாரி பெய்த காலம் மலை ஏறி விட்டது. இயற்கையின் சமநிலை கெடுவதற்குக் காரணங்களாக, வானிலை ஆய்வாளர்கள் கூறுவது, ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பொத்தல், எல்னினோ, வானினா, குளோபல் வார்மிங் போன்ற அசாதாரண நிகழ்ச்சிகளாகும். இந்நிலை தொடர்ந்தால், ஒரு கால கட்டத்தில், இயற்கையான சுற்றுச் சூழல் மனித வாழ்க்கைக்குச் சாதகமாக இருப்பதற்கு பதிலாக, பாதகமாக அமையும். மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால், காற்று, நீர், மண் மூன்றும் மாசுபட்டு விட்டன. இதுவரை இலவசமாகக் கிடைத்து வரும் தூய காற்றும், எதிர்காலத்தில் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்; உருவாகிக் கொண்டிருக்கிறது. தற்போதைய மானிட சமுதாயம் எதிர்கால சந்ததியினரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் காலத்தில் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிறது. இயற்கையில் பயனுள்ள பலவற்றிலும் மழை மிகச் சிறந்தது. எனவே தான், அய்யன் வள்ளுவப் பெருந்தகை, தன் திருக்குறளில், வான் சிறப்பை கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக அமைத்துள்ளார். மழை இல்லையானால் மண்வளம் சுருங்கும், மக்கள் மன வளமும் சுருங்கும், தானமிருக்காது; தவமிருக்காது. தற்போது அந்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. நாகரிகத்தின் உச்சகட்டத்தை தொட்டுள்ள மனித சமுதாயம், சென்ற நூற்றாண்டுகளில் பல்வேறு மாறுதல்களைக் கண்டுள்ளது; இப்போதும் கண்டு கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் காணப் போகிறது. சுற்றுச் சூழலும், உயிரினமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒட்டி உறவாடுகின்றன. இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் செயல்படுகின்றன. எனவே, சுற்றுச் சூழலுக்கும், உயிரினத்திற்குமிடையே எப்போதும் சமநிலை நிலவு கிறது. இந்த சமநிலை பாதிப்படைந்தால், பல்வேறு விளைவுகள் இயற்கையில் நிகழும்; மனித வாழ்வே ஆபத்திற்கு உள்ளாகும். இயற்கைச் சூழலுக்கும், மனித சமுதாயத்திற்குமிடையே ஓயாத பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில், இயற்கை தான் வெல்லும் என்பது நியதி. இயற்கையுடன் நமக்குள்ள தாய் - சேய் உறவைக் காப்பாற்ற வேண்டும். சங்க கால இலக்கியமான அக நானூற்றுப் பாடல் ஒன்று இயற்கைச் சூழலைச் சிதைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது..
இதை பற்றி முன்பாகவே ஒரு பதிவை இட்டுள்ளோம் ஒரு உதாரணதிற்காக மறுபடியும். )
ஆனால் நம்உரில்ஆண்களும்[தாத்தாக்கள்]பெண்களும் [பாட்டிகள்]செட்டியார் வீடுகளில் வேலைக்கு சென்றார்கள்.ஆண்கள் காட்டு வேலையும்,பெண்கள் வீட்டு வேலையும் செய்து ஊதியம் மற்றும் உணவு உண்டு காலத்தை ஓட்டினார்கள். அப்போது எது கிடைத்தாலும் விடுவதில்லையாம்,நத்தை,உமச்சி,உடும்பு,புறா,குருவி இன்னும் நிறைய வேட்டையாடி உயிர் பிழைத்தார்கள்.இன்று இந்த நந்தன வருடத்தை பற்றி கேட்டு பாருங்கள் உங்கள் தாத்தாக்களிடம் அல்லது பாட்டிகளிடம் அவர்கள் சொல்வார்கள் இன்னும் இதுபோல நீளமான கதைகளை.அவர்கள் இடத்தில் ஒரு அசார்த்திய துணிச்சல் இருந்தது.வாழ்கையை அதன் போக்கிலும்,தன் போக்கிலும் இயற்கையாக வாழ்ந்தார்கள்.
வலி வராமல் வலிமை வாரது எனக்கு என் தாத்தா எதுவும் செய்யவில்லை,கற்று கொடுக்கவில்லை என்று நினைக்காதே.உன் வாழ்வில் நீ எடுக்கும் ஒவ்வொரு துணிச்சலான முடிவிற்கும் முன்னடியாக இருந்தவர்கள் உன் தாத்தாக்கள் தான் என்பதை நினைவில் கொள் நண்பா..,அவர்கள் போராடியது இயற்கையோடு,நீ போராடுவது செயற்கையோடு,செயற்கையை விட இயற்கைக்கு வலிமை அதிகம் நண்பா.நிதானமாக யோசித்துப்பார் நீ உன் வாழ்கையில்எடுத்த துணிச்சலான முடிவுகள் எத்தனை.அதை எடுக்கும் முன்பு உன் மனநிலை எப்படி இருந்தது.அதில் எத்தனை முடிவுகள் எதோ பழக்கப்பட்டது போல் இருந்தது.யோசித்துபார் நண்பா நீ வேறுயாரும் அல்ல உன் தாத்தாவின் தாத்தாவாக கூட இருக்கலாம்.
ஏய் பெருசு ஏய் கிளவா என்று நீ சொல்லும் போது ஒரு கணம் யோசித்து பார் எத்தனை தலைமுறை பார்த்த கண்கள்.எத்தனை பாதைகளை கடந்த பாதங்கள்,எத்தனை சுமைகளை சுமந்த தோள்கள்,அவர்கள் சூரியன் போல் அவர்கள் காலையும் முடிந்து விட்டது,மதியமும் முடிந்து விட்டது,இப்போது astaஅஷ்டமத்தில் இருப்போரை எள்ளி நகை ஆடாதே.கணவன்,மனைவி,பிள்ளை என்று வைத்துகொண்டு குடும்பம் நடத்த முடியாமல் திணறும் போது,பத்து பேர்,இருபது பேர் கொண்ட குடும்பத்தை கட்டி காத்த அவர்களின் ஆளுமையை நினைக்கும் போது,அவர்களின் அனுபவ அறிவின் முன்னால் நாம் கால் தூசிதான்.
அவர்கள் வாழ்த்த வாழ்கையை நாம் ஒருபோதும் வாழ போவதில்லை,வாழவும் முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.உன் தாத்தாவை பற்றி உன் குழந்தையிடம் சொல்.அப்போதுதான் நாளை உன் மகன் உன் பேரனிடம் சொல்வான் உன்னை பற்றி.அதற்கு முன் உன் முன்னோர்களை போல நீ முன்னோடியாக இரு.என்றும் அவர்கள் உன் பக்கத்தில் இருகிறார்கள்,உன்னை வழி நடத்துகிறார்கள் நீ அவர்களை உண்மையாக நேசிக்கும் போது.
நீ அவர்களை உண்மையாக நேசி,அவர்கள் உனக்கு மகளாகவோ,மகனாகவோ பிறப்பார்கள் என்பது தான் உண்மை.