Jump to content

User:Sri sai baba temple dindigul

From Wikipedia, the free encyclopedia
ஸ்ரீஷிர்டி சாய்பாபா – வாழ்க்கை வரலாறு
Developer(s)Wikimedia Foundation
Stable release
Varies by operating system (see below)
Operating systemAndroid, iOS, Windows Mobile
WebsiteSee below for individual operating systems.
Direct download site
Information and resources: Help:Mobile access
Wikipedia, on Android
Stable release
2.3.152-r-2016-08-18 / August 18, 2016; 8 years ago (2016-08-18)
Preview release
2.4.156-beta-2016-09-19[1] / September 19, 2016; 8 years ago (2016-09-19)
Operating systemAndroid
Size
  • Stable: 11.41MB
  • Beta: 11.47MB
Websiteplay.google.com/store/apps/details?id=org.wikipedia
android-builds.wmflabs.org
Wikipedia, on iOS
Stable release
5.3.1 / December 2, 2016; 7 years ago (2016-12-02)
Operating systemiOS
Size32.4MB
Websiteitunes.apple.com/app/wikipedia-mobile/id324715238
Wikipedia, on Windows 8/Server, and later
Initial release31 May 2012 (2012-05-31)
Stable release
10 / March 14, 2014; 10 years ago (2014-03-14)
Operating system
PlatformWindows Runtime
Size766.68 KB - 808.16 KB
Websitewww.microsoft.com/en-us/store/apps/wikipedia/9wzdncrfhwm4
         ஸ்ரீஷிர்டி சாய்பாபா – வாழ்க்கை வரலாறு

இக்கோயில் இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்தது G. நாகராஜராமன் - பாண்டிய வேளாளர் மற்றும் பாண்டிய குல வம்சாவளிகளின் வாரிசுகளால் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் (முத்தனம் பட்டி புதூர் கிழக்கு) கிராமத்தில்

நிர்மாணிக்கப்பட்ட முதல் ல் இது என்கிறார்கள்.

           அருள்மிகு ஸ்ரீஷிர்டி சாய்பாபா
     அருள்மிகு ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள்
           அருள்மிகு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்

கோயி

வெகுகாலமாக சிதலாமகிக் கிடந்த கோயில். G. நாகராஜராமன் - பாண்டிய வேளாளர் மற்றும் பாண்டிய குல வம்சாவளிகளின் வாரிசுகளின் முன்முயற்சியில், இக்கோயில் புணருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது இக்கோயில்.

                                       கர்ப்பக்கிரஹத்தில், 
                                       மூல கடவுளாக : 
                      1)அருள்மிகு ஸ்ரீஷிர்டி சாய்பாபா அமைந்துள்ளனர்.
                                     உப கடவுளர்களாக: 
         1)அருள்மிகு ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் அமைந்துள்ளனர் 
                  (பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்), 
                     2)அருள்மிகு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆகியோர்அமைந்துள்ளனர் 
 ஷீரடி சாயிபாபா மூல மந்திரம்

“ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய, ஜெய சாய்”

என்ற மூல மந்திரத்தை சொல்பவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் நிச்சயம் பெறுவார்கள்.

                         ஆக்கம்: G.நாகராஜராமன்

பாபாவின் சில உன்னத தரிசனங்கள்

ஓம் சாய் ராம்

பிறப்பு: செப்டம்பர் 28, 1838 இடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா பணி: இந்திய குரு இறப்பு: 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு ஸ்ரீ ஷிர்டி பாபா மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். நாட்டுரிமை: இந்தியன்

           34.1.ஷிர்டிசாய்பாபா அவதாரம்

சீரடி சாயி பாபா, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர்.  ஷிர்டிபாபாவின் தாய், தந்தை யார்? சொந்த ஊர் எது? இயற்பெயர் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை என்று சொல்வதுண்டு.  எனினும் கீழ்கண்ட சரித்திரமும் பாபா பெற்றோர் பற்றிப் பேசப்படுகிறது.

           34.2.இந்து தம்பதியினர்-“கங்கா கவாடியா-தேவகிரி”

 மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ரி எனும் கிராமத்தில் கங்கா கவாடியா- தேவகிரி என்ற இந்து தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார் பாபா.  பாபா பிறந்த போது அவரது தந்தை இறைவனின் தரிசனத்திற்காக காட்டில் தவம் செய்ய புறப்பட்டார்.  இவர் சென்றதும் தேவகிரி பிறந்த குழந்தையை நடுக்காட்டில் விட்டு விட்டு கணவன் பின் சென்று விட்டார்.  பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என ஒரு கருத்து நிலவுகிறது.

          34.3. சாந்த் பட்டேல் முஸ்லிம் தம்பதியினர்

 அப்போது காட்டு வழியே வந்த சாந்த் பட்டேல் என்ற முஸ்லிம் தம்பதியினர் குழந்தையின் அழுகுரலை கேட்டு அந்த குழந்தையை எடுத்து வளர்த்தனர்.  சிறுவயாதான அந்த பாபாவின் செயல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.  தர்காவிற்கு செல்லும் அவன் சிவலிங்கத்தை வைத்து கீதை, வேதம், உபநிஷதங்கள் சொல்வான். சில சமயம் இந்து கோயிலுக்கு சென்று குரான் ஓதுவான்.  இதனால் இந்துக்களும், முஸ்லிம்களும் பாபாவை வெறுக்க தொடங்கினர்.  ஒரு முறை பாபா தன் பக்கத்து வீட்டு மாமி பையனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தன் வீட்டு பூஜையறையில் வைத்திருந்த சாளக்கிராம உருண்டையை பந்தயப் பொருளாக வைத்து விளையாடி பாபாவிடம் தோற்றான்.  பாபா சாளக்கிராமத்தை தன் வாயில் போட்டு விட்டான். வாயை திறந்தான். அப்போது கண்ணனின் வாயில் யசோதை கண்ட காட்சியை பாபாவின் வாயில் மாமி பார்த்தாள். மயங்கி விழுந்தாள்.  ஷிர்டி சாய்பாபா மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் ஷிர்டியில் மக்கள் காணத்தோன்றினார்.  பாபா 1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் ஷிர்டிக்கு வருகை புரிந்தார்.  ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.  அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை.  ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார்.  இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர்  இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக்கருதுகின்றனர்.

          34.4. தத்தாத்ரேயர்
 	

 தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய கடவுள் ஆவார்.  இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர்.  அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர்.  கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி.  குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள்.  இதனை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர்.  அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் யோசனை தெரிவித்தனர்.  அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி கேட்டனர்.  அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம்”, என்றனர்.  அனுசுயா கலங்கவில்லை.  அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு.  “கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்..” எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்.  உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகிவிட்டனர்.  தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. குழந்தைகளுக்கு பாலூட்டினாள்.  வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார்.  ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.  தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிசைக்கு வந்தனர்.  நடந்ததை கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர்.  அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி.  உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர்.  ரிஷியே உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும்.  இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி, மறைந்தனர்.  இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்த்ரியின் புதல்வர்.  ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார்.  அத்ரி மகரிஷி-அனுசூயை தம்பதியரின் மகனாக பிரம்மா, விஷ்ணு & மகேசன் ஆகிய மூவரின் ஒருங்கிணைந்த அம்சமாக தத்தாத்ரேயர் அவதார மகிமை போற்றப்படுகிறது.  சதுர்யுகத்தில் திரேதாயுகத்தின் ஆரம்ப காலத்தில் தத்தாத்ரேயர் அவதாரம் நிகழ்வுற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன.  தத்தாத்ரேயர் இன்றும் சூட்சுமமான யோக வடிவில் உலவி வருகிறார்.

 தத்தாத்ரேயர், மும்மூர்த்திகளின் சொரூபமாதலால், மூன்று திருமுகங்களும் ஆறு திருக்கரங்களும் உடையவராக வழிபடப்படுகிறார்.  ஆறு திருக்கரங்களில், பிரம்ம தேவரை குறிக்கும் கமண்டலம்-ஜபமாலை, சிவபெருமானைக் குறிக்கும் திரிசூலம்-உடுக்கை, ஸ்ரீவிஷ்ணுவைக் குறிக்கும் சங்கு-சக்கரம் முதலியவற்றைத் தாங்கி அருளுகிறார்.  அவர் திருப்பாதங்களின் அருகில் இருக்கும் நான்கு நாய்களும் நான்கு வேதங்களைக் குறிக்கும்.  வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் ஒருவரே என்பதை, இந்த நான்கு நாய்களும் அவரது திருவடிகளின் அருகில் இருப்பது குறிக்கிறது.  ஸ்ரீதத்தரின் பின்புறம் இருக்கும் பசு, பூமி, படைப்புத் தொழிலையும் குறிக்கும்.  ஸ்ரீதத்தாத்ரேயர், மிகச் சிறு வயதிலேயே தம் இல்லம் விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைவதற்காக, பல்வேறு இடங்களுக்குச் சென்றார்.  கர்நாடகாவில் உள்ள கங்காபுரம் என்னும் ஊரில் பிரம்ம ஞானத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.  இவரது பத்தினி அனகா தேவி.  அனகாதேவி விரதம் மிகப் பிரபலமானது. இதைக் கடைபிடிக்கும் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.  உலகில் அவதரித்த சதாசிவபிரும்மேந்திரர், பாபா போன்ற பல மகான்கள் தத்தாத்ரேயரின் அவதாராமாக கருதப்படுகிள்றனர்..

 சில ஆண்டுகள் கழிந்தன சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார்.  பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார்.  அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது.  பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது.  கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது.  மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார்.  பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்.  சாந்த் பட்டேல், பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.  சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.  சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக ஷிர்டி சென்றபோது, பாபாவையும் தன்னுடன் ஷிர்டிக்கு அழைத்து சென்றார்.  பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி, அவரை சாமி என்று அழைத்தார்.

          34.5.பாபா ஷீரடி வாசம்

 ஏழு ஆண்டுகள் கழிந்தன. ஷிர்டி என்னும் கிராமத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இளைஞனாகத் தோன்றினார் பாபா.  இவரது சக்தி குறித்து அக்கிராம மக்கள்நெரிந்து கொண்டனர்.  ஒரு முறை சாந்த்படேல் என்பவர் தன் அண்ணன் மகன்திருமணத்திற்கு பாபாவை அழைத்து சென்றார்.  அங்குள்ள கந்தோபா சிவன் கோயில்பூஜாரி தன்னை மறந்து ஆவோ சாயி (சாயியே வருக) என அழைத்தார்.  திருமணம் முடிந்ததும் அனைவரும் ஊர்திரும்பி விட்டனர்.  ஆனால்பாபா அங்கேயே தங்கி விட்டார்.  அதுவரை பக்ரி என அழைக்கப்பட்ட அவர் பாபா என்றும் சாய் என்றும் அழைக்கப்பட்டார்.  அவ்வூரில் இருந்த மசூதியில் தான் பாபா தங்கினார்.  மூன்று ஆண்டுகளில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார் (இந்த இடத்தில் தான் பாபாவின் புனித சமாதி உள்ளது).  சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள்.  பாபா என்பது இந்தியில் `அப்பா‘ என்று பொருள்.  இரண்டும் இணைந்து `சாய்பாபா’ என்ற திருப்பெயரே நிலைத்துவிட்டது.  சாய்பாபா ஷிர்டியிலேயே தங்கிவிட தீர்மானித்தார்.  ஷிர்டியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது.  அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார்.  பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது.  ஷிர்டி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள்.  அதற்கு அவர் “நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே அனுமன்!” என்று கூறினார்.  ஆமாம்! அவர் இப்பூமியில் இறை அம்சம் கொண்டவராகவே அவதரித்தார்!  சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியைப் போல் வாழ்ந்தார் பாபா.

           34.6.இந்து முஸ்லீம் சிநேகம்

 பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர்.  மசூதியில் வேற்றுமை பாராட்டாமல் நுழைந்து இந்துக்களை இவரை வழிபட வைத்தது போலவே, மசூதியை மலர்களால் அலங்கரிக்க விரும்பிய முஸ்லீம் பக்தரை அந்த மலர்களை அருகிலிருந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்ய பணித்தது என்று பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர்.  அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்கள் “அவர் ஒரு மகான்” என்று போற்றினார்கள்.  சிறுவயதில் பாபாவை முகம்மதியப் பெரியவர் ஒருவர் வளர்த்து வந்தார்.  அந்தப் பெரியவர் பாபா மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார்.  பாபாவை விட்டுச் சிறிது நேரம் கூட பிரிந்து இருக்க மாட்டார்.  அப்படியிருந்த அவர் ஒருநாள் திடீரென்று இறந்து விட்டார்.

             34.7.சாய்பாபாவின் ஞானகுரு-கோபால்ராவ் தேஷ்முக்

 ஆதரவு இல்லாத நிலையில் இருந்த பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்றார்.  கோபால்ராவ் தேஷ்முக் திருப்பதி வெங்கடாசலபதி மீது தீவிர பக்தி கொண்டவர்.  மக்கள், இவரை மகா ஞானியாகவே கருதி போற்றி வந்தனர்.  குழந்தையான பாபாவைப் பார்த்த ஞானி கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.  பாபாவைத் தனது மகனைப் போலவே கருதி வளர்த்து வந்தார்.  பாபாவும் கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார்.  பாபா ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட கோபால்ராவ் தேஷ்முக் தீவிர ஏழுமலையான் பக்தர்.  அதனால் பாபாவிற்கு குரு அருளுடன் வெங்கடேசப் பெருமானின் அருளும் கிடைத்தது.  குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் பேரும் புகழுடனும் இருந்து வந்தது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை.அதனால் பொறாமை கொண்டனர்.  ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான்.  அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான்.  இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார்.  அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.  “என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்” என்று குருவிடம் பாபா கேட்டார்.  குரு மிகவும் மனம் கலங்கினார். அப்போது, “பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது.  நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன்.  அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்” என்று கூறினார்.

              34.8.ஞானகுரு கோபால்ராவ் தேஷ்முக். முக்தியடைதல்

 அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார்.  குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார்.  “ஐயா, இப்பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை.ஆனபடியால் இது பால் கறக்காது” என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன்.  இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார்.  குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார்.  என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது. பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார்.  பாலைப் பெற்றுக் கொண்ட குரு, “இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்” என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார்.

 அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான்.

 இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள்.  இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார். “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.  அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர்.  பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார்.  கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார்.  என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான்.  எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.  கோபால் ராவ்தேஷ்முக் ஸ்ரீவெங்கடேசப் பெருமானை வேண்டி, தாம் முன்பே கூறியதுபோல தவயோகம் செய்தார்.  தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார்.  தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா ஷிர்டி கிராமத்தை அடைந்தார்.

                    34.9.பாபாவின் புகழ்

 பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள்.  அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று ஷிர்டியில் வாழ்ந்து வந்தார்.  பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார்.  தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார்.  பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது.  பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர்.  அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினார்.  பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார்.  இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர்.  ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர்.  பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார்.  இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது.  பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர்.  ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக்கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார்.  பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா.  தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார்.  சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார்.  பாபா பஜனை யையும், பாடல்களையும் விரும்பினார்.  பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார்.  சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார்.  ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா.  ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார்.  தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார்.  அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார்.  பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார்.  பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார்.  பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.  மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார்.  பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா வும் (நம்பிக்கை), ஸபூரி யும் (பொறுமை) ஆகும்.  தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் ஊதி (விபூதி) யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா.  வாழ்வில் பொறுமையும், தன் மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார்.

             34.10.சாய்பாபா முக்தி (விஜயதசமி, OCTOBER, 1918)

 பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார்.

 அவர் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு ஸ்ரீ ஷிர்டி பாபா மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். தன் ஸ்தூல உடலை பிரிந்தார்.

 சாய்பாபாவை அடக்கம் செய்யப்பட்ட இடம் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் எதிரே அவர் வாழும் காலத்திலேயே கட்ட ஆரம்பிக்கப்பட்டது.  சாய்பாபா தனது முக்திக்குப்பிறகு பிறகு இக்கோவிலில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பினார்.  அவரது விருப்பப்படியே அவரது முக்திக்குப் பிறகு இக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.  இவரது நினைவாக அவர் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் அவரது சமாதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

                 34.11.ஷிர்டி சாய்பாபா கோவில்

 ஷிர்டியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.  கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.  5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

                   34.12.ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்

 பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.  முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர்.  அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது.  அது அப்பொழுது எதற்கு வந்தது, என்று யாருக்கும் தெரியாது.  அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை.  உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர்.  இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.  உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள்.  சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.  சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது.  .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி - தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார்.  அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார்.  சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.


 பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது.

                 34.13.துவாரகா மயி (சாவடி)-அணையாத் தணல்

 துவாரகா மயியில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது.

 அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதி இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது.


 துவாரகா மயி மசூதியில் சாய்பாபா சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வந்தார்.  இந்த இடம் சாவடி என்றும் அழைக்கப்படுகிறது.  ஒவ்வொரு நாள் இரவும் தனது பக்தர்களை இங்கு சந்திப்பார்.  ஒரு முறை மசூதியில் விளக்கேற்ற வழக்கமாக எண்ணெய் தரும் வியாபாரி எண்ணெய் தர மறுத்துவிட்டதால் தண்ணீரிலேயே விளக்கெரிய வைத்தார்.  அன்று முதல் அவரது புகழ் மேலும் பரவியது.  ராமநவமி, சந்தனக்கூடு ஆகிய இந்து முஸ்லிம்விழாக்களை இவ்வூரில் நடத்தி வந்தார்.  இந்து சடங்குகள் அந்த மசூதியில் செய்யப்பட்டு வந்தது.  அவரை இந்துவா,முஸ்லிமா என் யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் மசூதியை பாபா “துவாரகா மயி” என அழைப்பார்.  துனி எனும் அணையாத அக்னியை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உதி என்ற சாம்பலை நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவார்.  ஷிர்டியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி, அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்திநடந்துகொண்டிருந்தது.


              34.14.இனிக்கும் வேப்ப மரம்

 ஷிர்டி திருத்தலத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.

 இந்த வேப்பமர இலைகள் சாய்பாபா அருளால் கசப்புத் தன்மையை இழந்ததாக கூறப்படுகிறது.


 பாபா ஷிர்டியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார்.  அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது.  இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.  பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.  மூன்று முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள்.  தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள்.

               34.15.ஷீலா கல்.

 பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது.  பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.  பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள்.  அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள்.

           34.16.நாழிக் கிணறு

 கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது.  நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.  இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா.

 அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

           34.17.நந்தா தீபம்.

 இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது.  பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது.  இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள்.  விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.  ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம்.  கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது.  அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.  அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் ஷிர்டிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது.  உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள்.  ஷிர்டி மண்ணை மிதித்தவர்களின் கஷ்டங்கள் விலகுகிறது.  அவர்களது மனக்கவலைகள் மறைகின்றன.  அவர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகுகிறது. ஆனந்தம் பொங்குகிறது.  இன்றும் லட்சோப லட்சம் குடும்பங்களில் ஷிர்டிபாபா ஆனந்தத்தை பொங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

              34.18.சாய்பாபா பயன்படுத்திய பொருட்கள்.

 பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.  அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர்.  தமது வயலில் விளைந்த கோதுமையில் ஒரு மூட்டையை பாலாஜி படேல் நிவாஸ்கர் என்ற பக்தர் பாபாவிற்கு தருவார்.  அதன் நினைவாக ஆண்டுதோறும் புதிதாக ஒரு மூட்டை கோதுமை வாங்குகிறார்கள்.  அதனைக்கண்ணாடி பீரோவில் வைக்கிறார்கள்.  கோலம்பா என்று ஒரு மண் பானை பாபா பிச்சை எடுத்து வந்த உணவை அதில் தான் போட்டு வைத்தார்.  அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் ஷிர்டியில் இப்போதும் இருக்கிறது.  சாயிபாபா மூன்று வழக்கங்களைக் கடைப்பிடித்தார்.

1)திருகையில் அரைப்பது, 2) சங்கு ஊதுவது, 3)மணியடிப்பது. 

 இதுபோல் 1)நெருப்பில் ஆகுதி செய்தல், 2)பஜனை, 3)தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன.  அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் “துனி” எனும் புனித நெருப்பில் போட்டு வந்தார்.  இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பல் “உதி” என்று அழைக்கப்பட்டது.  அவரைக் காணவரும் பக்தர்கள் ஷிர்டியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

            34.19. சாய்பாபாவின் சீடர்கள்.

 பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். 1. தாஸ்கணு மகாராஜ், 2. நாராயண கோவிந்த சந்தோர்க்கர், 3. ஹரிசீதாராம் தீட்சித், 4. ஸ்ரீஉபசானி பாபா, 5. கபர்தே, 6. அன்னாசாகேப் தபோல்கர், 7. மஹல்சாபதி, 8. நரசிம்ம சுவாமிஜி (தமிழ்நாடு)

 ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத் நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது.  நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும்.  உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும். மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.  நாடு முழுவதும் சாய்பாபாவின் தத்துவம் தழைத்தோங்கவும், சாய்பாபா வழிபாடு சிறப்புற்றுத் திகழவும் வழிவகுத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி.  அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.  சாய்பாபா மகா சமாதி அடைந்து பல வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, அவற்றைச் சுவைபட தொகுத்து நாட்டுக்கு வழங்கிய பெருமை அமரர் நரசிம்ம சுவாமிஜியை சேரும்.

              34.20.சாய்பாபாவின்-அறிவுரைகள்
    சாய்பாபா மக்களுக்கு உதவியது மட்டுமில்லாமல், மக்களுக்கு நல்ல அறிவுரைகளையும் கொடுத்துள்ளார்.

 ஓவ்வொரு மனிதனும் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கிறான். அப்போது பல கட்டங்களை தாண்டிச் செல்கிறான்.  மனிதன் உலகத்து பொருளின் மீது வைத்திருந்த ஆசையை அடக்கும் போது, அவன் முக்தி பெறுகிறான்.  மனிதன் பந்தபாசத்தை தவிர்க்கும் போது, விரக்தி அடைகிறான்.  மனிதன் ஆத்மாவை அறிந்து கொள்ளும் போது, அவன் தன்னைப் புரிந்து கொள்கிறான்.  மனிதன் உணர்வுகளைத் துறக்கும் போது, அவன் விசர்ஜனம் பெறுகிறான்.  மனிதன் உண்மையை நேசிக்கும் போது, அவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறான்.  மனிதன் மற்றவர்களுக்காக வாழும் போது, அவன் முதிர்ந்த மனப்பக்குவத்தை அடைகிறான்.  மனிதன் உடலையும் உள்ளத்தையும் அடக்கும் போது, அவன் தியானத்திலிருக்கிறான்.  மனிதன் தூய எண்ணத்தோடு செயல்படும் போது, அவன் அமைதியை நாடுகிறான்.  மனிதன் அமைதியான நிலையில் கடவுளை அடைவதற்கு ஒரு நல்ல குருவை தேடுகிறான்.  மனிதனுக்கு நல்ல குரு கிடைத்தவுடன், அவன் விவேகத்தை பெற்று கடவுளோடு இணைகிறான்.  மனிதன் என்பவன் உலகத்திலுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பிறகு கடவுளை நாடுகிறான்.மனிதன் கடவுளை தேடும் போது அவனுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையான மனிதனை அறிந்து கொள்கிறான். இந்த உண்மையே மனிதனை கடவுளோடு இணைக்கிறது.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளே கடவுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்தில் இறைவனை புரிந்து கொள்கிறான்.

                34.21.ஸ்ரீஷிர்டி சாயிபாபா துதிகள்

சாய்பாபா இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

    1) ஸ்ரீஷிர்டி சாயிபாபாவின் காயத்ரி

ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே ஸர்வ தேவாய தீமஹி தந்தோ ஸர்வப்ரசோதயாத்

               	ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
               	சச்சிதானந்தாய  தீமஹி
              	தந்நோ சாய் ப்ரசோதயாத்


    2) ஸ்ரீசாயிபாபாவின் த்யான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம் த்வாரகா மாயீ வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் ஸாயி நாதம் நமாமி:

    3) ஸ்ரீஷிர்டி சாயிபாபாவின் மூல மந்திரம்

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”

    4)  ஸ்ரீசாயிநாதர் திருவடி மகிமை (தியானச்செய்யுள்)

ஸாயி நாதர் திருவடியே ஸம்பத்தளிக்கும் திருவடியே நேயம் மிகுந்த திருவடியே நினைத்ததளிக்கும் திருவடியே தெய்வ பாபா திருவடியே தீரம் அளிக்கும் திருவடியே உயர்வையளிக்கும் திருவடியே

              34.22. ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம்!

 ஷீரடி திவ்ய தேசத்தில் அருள்பாலித்து வரும் மகான் ஸ்ரீஷீரடி சாய்பாபா, தான் வாழ்ந்த காலத்தில் மூன்று பாதுகைகளை பயன்படுத்தினார்.  அதில் ஒன்று ஷீரடியில் உள்ளது.  மீதி(இரண்டு)பாதுகைகள் அவரது சீடர்களான 1) மஹல் சாபதியிடமும் (காண்டோபா கோவில் அர்ச்சகர்) 2) நானா சாகேப் நிமோன்கரிடமும் இருந்தது.  திரு.நானா சாகேப் நிமோன்கரின் நான்காம் தலைமுறை வாரிசு திரு.நந்தகுமார் ரேவன்நாத் தேஷ்பாண்டே தற்போது அந்த பாதுகையை பராமரித்து வருகிறார்.  அதை நாடு முழுவதும் பக்தர்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்லும்படி சில ஆண்டுகளுக்கு முன்பு (2009 ல்) பாபா உத்தரவிட, தற்போது திரு.நந்தகுமார் ரேவன்நாத் தேஷ்பாண்டே அதை பக்தர்களின் இல்லங்களுக்கு கொண்டு சென்று வருகிறார்.


 ஷீரடியில் கூட நமக்கு பாதுகையை தொட்டு வணங்க அனுமதி இல்லை.  மேலும் பகவானே பக்தர்களை தேடி வரும் வைபவம் இது என்பதால் ஷீரடி தரிசனத்தை போல் மகத்துவம் மிக்கது இந்த பாதுகா தரிசனம்.

             34.23. உங்கள் விதியை மாற்ற 10 வழிகள்!

உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும் என்று சொல்வார் ஷீர்டி சாய்பாபா.அது எப்படி? விடையையும் பாபாவே சொல்லியிருக்கிறார். 1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். 2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி, சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள். 3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். 4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள். முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள். 5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்பிடியுங்கள். 6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள். 7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உங்களாலான உதவியைச் செய்யுங்கள். 8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும் இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள். 9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள். 10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். ஆமாம். பாபா சொன்ன இந்தப் பத்து விதிகளையும் யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராது. விதியையே மாற்றியமைக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்று சொல்லி ஆசி வழங்குகிறார் பாபா.

                34.24.பாபா கூறிய பல ஸ்ருதி வார்த்தைகள்

 என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன்.  செய்வது மட்டுமல்ல, அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன்.  என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்ப்ட்டால் கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும்.  என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப் பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன்.

 பகவான் சாயிநாதனின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.

 ஓம் சாயி நமோ நம: ஸ்ரீ சாயி நமோ நம ஜெய ஜெய சாயி நமோ நம: சத்குரு சாயி நமோ நம

34.25.ஷீர்டி சாய்பாபா 108 போற்றி

ஓம் சாயிநாதனே போற்றி ஓம் சீரடி உறைந்தவனே போற்றி ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி ஓம் அன்பு வடிவானவனே போற்றி ஓம் அறிவுறுத்துபவனே போற்றி ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி ஓம் உலகைக் காப்பவனே போற்றி ஓம் உவகை தருபவனே போற்றி ஓம் உளமதை அறிபவனே போற்றி ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி ஓம் விட்டலின் வடிவே போற்றி ஓம் சுவாமியே போற்றி ஓம் அப்பனே போற்றி ஓம் பாபா போற்றி ஓம் பாதமலரோன் போற்றி ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி ஓம் அறத்தை போதித்தவனே போற்றி ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி ஓம் ராமானந்த சீடனே போற்றி ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி ஓம் வேதம் புரிந்தவனே போற்றி ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி ஓம் அபயம் தருபவனே போற்றி ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி ஓம் நற்குணனே போற்றி ஓம் விற்பபன்னனே போற்றி ஓம் பொற்பாதனே போற்றி ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி ஓம் மகத்துவமானவனே போற்றி ஓம் மங்கள ரூபனே போற்றி ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி ஓம் நீதியை புகட்டினன் போற்றி ஓம் கொடைக் குணத்தோனே போற்றி ஓம் நிறை குணத்தோனே போற்றி ஓம் குறை தீர்ப்பவனே போற்றி ஓம் மறை அறிந்தவனே போற்றி ஓம் மாண்பு பொருந்தினை போற்றி ஓம் மாதவத்தோனே போற்றி ஓம் அபயக் கரத்தோனே போற்றி ஓம் அமரர்க்கோனே போற்றி ஓம் அகம் உறைபவனே போற்றி ஓம் அசகாய சூரனே போற்றி ஓம் அசுர நாசகனே போற்றி ஓம் அசவுகர்ய நாசகனே போற்றி ஓம் அணுவணுவானவனே போற்றி ஓம் அமுத விழியோனே போற்றி ஓம் அரங்க நாயகனே போற்றி ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி ஓம் அருவமானவனே போற்றி ஓம் ஆதாரமானவனே போற்றி ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி ஓம் ஆபத்பாந்தவனே போற்றி ஓம் இக பரசுகம் அருள்பவனே போற்றி ஓம் இச்சா சக்தியே போற்றி ஓம் கிரியா சக்தியே போற்றி ஓம் ஞான சக்தியே போற்றி ஓம் இமையவனே போற்றி ஓம் இங்கித குணத்தினனே போற்றி ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி ஓம் இருள் நீக்குவோனே போற்றி ஓம் ஈகை கொண்டவனே போற்றி ஓம் ஈடில்லா புகழோனே போற்றி ஓம் ஈர நெஞ்சினனே போற்றி ஓம் உலகைக் காப்பவனே போற்றி ஓம் உமாமகேசுவரனே போற்றி ஓம் உயிராய் நிற்பவனே போற்றி ஓம் உவகை அளிப்பவனே போற்றி ஓம் உண்மைப் பொருளானவனே போற்றி ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி ஓம் எல்லையில்லாப் பொருளே போற்றி ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி ஓம் ஐயம் களைபவனே போற்றி ஓம் ஒப்பில்லாதவனே போற்றி ஓம் ஓங்கார ரூபனே போற்றி ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி ஓம் ஓளடதமானவனே போற்றி ஓம் சாகித்யம் அருள்பவனே போற்றி ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி ஓம் சுத்த ஆனந்தனே போற்றி ஓம் சூதறுப்பவனே போற்றி ஓம் சூனியம் களைபவனே போற்றி ஓம் செம்மலரடியோனே போற்றி ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி ஓம் ஞானச் சுடரொளியே போற்றி ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி ஓம் சச்சிதானந்தனே போற்றி ஓம் பண்பின் வடிவானவனே போற்றி ஓம் பலம் அருள்வோனே போற்றி ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி ஓம் தீவினைகள் போக்குவோனே போற்றி ஓம் நன்மைகள் தருபவனே போற்றி ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி ஓம் அன்னை வடிவினனே போற்றி ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி ஓம் மகாயோகியே போற்றி ஓம் மகத்துவமானவனே போற்றி ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி ஓம் நிர்மல வடிவினனே போற்றி போற்றி  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&