User:Senthuryadav
வேளிர் வேள்பாரி
குறிப்பு : பாரி வேட்டை என்பதற்கும், வேள்பாரிக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை பாரி வேட்டை என்பதை ஒரு இன குழு கொண்டாடுவதால் அந்த பாரி என்ற சொல்லை பயன் படுத்தி வேள்பாரி என்ற ஆயர் குல மன்னனைய் சொந்தம் கொண்டாடுவது தவறு. அது மட்டுமின்றி பாரி வேட்டைக்கும் வேள்பாரிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை
வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த யாதவ குல குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவன். வேளிர் குலத்தின் எவ்வி குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர்.
இவன் இல்லறத்தேவி முல்லைக்குரிய இருத்தல்,நிமித்தம் கற்புத் தலைமையும், அவன் குல மகளிர் கல்விச் சிறப்பும், ஒழுக்கமும், பிறவும் உடன் கூறப்பட்டன.
" மன்ன னுயிர்த்தே மலர் தலை யுலகம்' (புறம்-186) என சான்றோர் கூறுதலும்
பாரி நாடு, பறம்புநாடு, பறநாடு எனவும், அவன் மலை, பறம்பு மலை எனவும், அம்மலைச்சுனை, பனிச்சுனை எனவும் சங்க நூல்களில் வழங்கப்படும். இவற்றைப் பாடிய புலவர், கபிலர், ஒளவையார், மிளைக்கந்தனர் நக்கிரனார் முதலியோர். இப்பாரி நாடு இருப்பது பாண்டி நாடு என.
"புரிசைப் புறத்தினிற் சேரனுஞ் சோழனும் போர்புரிய
இரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி வீங்கிவனைப் பரிசிற்கு நல்ல கவிபாடி னால் வரும் பாக்ய மென்றே
வரிசைத் தமிழ்புன பாரியும் பாண்டிய மண்டலமே"
எனவரும் பாண்டிமண்டல சதகமும் கபிலர் பாடிய"அளிதோ தானே பாரியது பறம்பே நளி கொண் முரசின் மூவிரு முற்றினும்"எனவும்(புறம்-109)
" கடந்தடு தானை மூவிருங் கூடி உடன் றனி ராயினும் பறம்பு கொளற் கரிதே"(புறம்-110.)எனவும் எனக்கூறுதலும்..
பாண்டிய நாட்டில் உள்ள பறம்புமலையே பாரிநாடு என மேற்கொண்ட பாடல்கள் மூலம் அறியலாம்.
பாரியிடம் மூவேந்தரும் வீழ்ந்தனர் என்பது வரலாறு ஆனால் சேரனும் சோழனுமே பாரியொடு பொருது தோற்றாரென்று கூறுவதன் காரணம் பாண்டி மண்டல சதகம் இயற்றிய புலவர் அம்மண்டலத்து வேந்தனை இழித் தற்கு மனமில்லாமையால் பாண்டியனை குறிக்காமல் இருந்திருக்கலாம்.
பறம்பு நாடு என்பது பறம்பு மலையைத் தலைமையாகக் கொண்ட நாடு என்பதாகும். பாண்டி நாட்டு, இப்பறம்பு எங்கு உள்ளது என ஆராய்ந்தால் இந்நாட்டுக் கொடுங்குன்ற மென்ற பிரான்மலையே பறம்புமலை எனவும் இம்மலைமங்கை நாதர் கோயிலில் அறுகான் மண்டபத்துக் கல்வெட்டில் " இந் நாட்டு அறுதூற்றுவ ளேரிப் பற்றிற் பாரீச்வரமும்" என்று பொறிக்கப்பட்டுள்ளது
"திணிநெடுங் குன்றந் தேன் சொரியும்மே(புறம்-109 )
என்ற கபிலர் பாட்டிற் கண்டவாறு இன்று இம்மலை தேன் சொரிவது காணலாம் நக்கிரனார், பாரி திம்பெரும் பைஞ்சுனை" (அகம்-78.) என்று கூறியவாறு தேன்சுனையையுடைமையுத் தெரியலாம். இம்மலையிற் தோன்றியோடும் நதி தேனாறு எனப்பெயர் சிறப்பிப்பதும் இம்மலையில் ' பாரி பலவுறு குன்றம் " (நற்றிணை, 253) என்றபடி பலாப்பழம் மிகவுண்டு. ஆனால் மூங்கில் தற்ப்போது மிக இல்லையேனும் கபிலர் கூறியவாறு வள்ளிக்கிழங்கும், தினையும், அவரையும் வரகும், எள்ளும், பிறவும் இம்மலையில் கிடைத்தன என சிறுபாணாற்றுபடையில்" பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்பறம்பு"எனவும், புறப்பாட்டில்(அடி-90-91.)
"கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும்பறம்பு"(புறம்-158.)
எனகூறியதற்கு சான்றாக ஆளுடைய பிள்ளையார் திருக்கொடுங்குன்ற பதிகத்தில்
"குளிரும் புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங்குன்றம்"எனவும்
"விரிசாரற் குருமாமணி பொன் மோடி ழி யருவிக்கொடுங் குன்றம்'
எனவும் பாடுவதாலும் , "கரியின்னின முதுவேய்களை முனிந்து குட்டாச்சுனை யவைமண்டிகின் றாடுங் கொடுங்குன்றம்"
என்பதனால், சுனையும் மூங்கிலுங் கூறுதல் காணலாம். "அளிதோ தானே பேரிருங் குன்றே"
என்பதற்கேற்பக் கொடுங்குன்றம் என்று பாடுதலும் நினைக.
குளத்தூர்ச்சேகரத்தைக் குன்று சூழ் நாடு' என்றும் (No. 121-125.). இதற்கடுத்த பறம்பூரைக் குன்றுசூழ் பறம்பூர் என்றும் (No. 151.). இந்நாட்டு மலையை குனறுசூழ் நாட்டு குடுமியான் மலை என்றும் இச்சாசனங்கள் வாயிலாகவும் அறியலாம் இந்நாட்டின் கோனார் சிறந்து விளங்கியதை
"தேனார் பொழில் சூழுந் தென்பரம்பை கோனார் குறிச்சியைக் கொண்டளித் தார்மானேய்மழுவின் படையானு மாதுமையும் போதும் விழவின் படியாக விட்டு"
என் சாசனப்பாடல் வாயிலாக பறம்பு நாட்டில் கோனார்கள் சிறந்து விளங்கிதை அறியலாம் .
"திருக்கொடுங்குன்றமுடைய நாயனார் க்குத் துவராபதிவேளார் கட்டின பூபாலபுரந்தரன் சந்திக்கு.... "உடலாகவிட்ட சுரபிநாட்டுத் திருக்காய்குடிப்பற்றில் கொற்றமங்கலமும், இந்நாட்டு அறுநூற்றுவனேரிப்பற்
றில் பாரீசுரமும்” என்று ஆயர்கள் இந்நாட்டில் சிறப்புற்று இருந்ததை துவராபதிவேளார்,ஆய்குடிபற்று என கல்வெட்டு வாயிலாக அறியதக்கது.