Jump to content

User:SbkTnj

From Wikipedia, the free encyclopedia

தி.ஜ.ரங்கநாதன் (1961 1974 )

இவர் திங்களூர் ஜெகத்ரட்சகன் ரங்கநாதன் தஞ்சை மாவட்டம் திங்களூரில் பிறந்தவர். சிறந்த எழுத்தாளர். சிறுகதை கட்டுரை மொழிபெயர்ப்பு குழந்தை இலக்கியம் ஆகிய துறைகளில் தனக்கென தனியிடம் பெற்றவர். புகழ்பெற்ற மஞ்சரி இதழில் தொடக்கம் முதல் 25 ஆண்டுகள் அவ்விதழின் ஆசிரியராக இருந்தவர். பல ஆங்கில நூல்களின் சுருக்கப்பட்ட வடிவத்தை மஞ்சரி இதழில் வழங்கியவர். சமரச போதினி சுதந்திரச் சங்கு ஜெயபாரதி ஊழியன்,ஹனுமான் சக்தி உள்ளிட்ட பல இதழ்களில் பணிபுரிந்தவர். இவருடைய சிறுகதை படைப்புகள்:

1. சந்தனக் காவடி (1938)by

2.நொண்டி க் கிளி (1949)  

3.காளி தரிசனம்

4 மஞ்சள் துணி( 1955 )  

5 விசை வாத்து (1960 )

இவரால் மொழிபெயர்க்கப்பட்ட பல கதைகள் லெனின் கதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டு வாழ்க்கையைப்பிரதிபலிக்கும் தெளிந்த கதைகள் ,சரளமான தமிழ் நடை, கதாபாத்திரங்களின் சிந்தனை, பேச்சு, நடப்பு இவையெல்லாம் கதைகள் உண்மையாக நடந்தவை யோஎன்ற நினைவை எழுப்பும் அமைப்பு, வாழ்க்கையின் ஏதாவது ஒரு அம்சத்தில் ஒளியை வீசும் சிறுகதை க்கோப்பு என்று இவருடைய சிறுகதைகளை மதிப்பிடுகிறார் பேராசிரியர் சீனிவாசராகவன் .(பக்கம் 33 தி ஜ ர )தி.ஜ.ர.வின்குணச்சித்திர சித்திரங்களேஅவரது இலக்கியமாகமாறி இருக்கிறதுஅதாவதுதி ஜ ர வின் வாழ்க்கையே இலக்கியமாகி இருக்கிறது என்கிறார் பழஅதியமான்.(பக்கம் 30தி ஜ ர)

தி.ஜ.ர. வின்வாழ்க்கையும் எழுத்துப் பணியும் பற்றிய சிறப்புகளை சாகித்திய அகாதமிவெளியீடான இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில்வந்த தி.ஜ.ரங்கநாதன்நூலில்(2004) விரிவாகக் காணலாம்.~~~~

24.6.21 வை. மு. கோதைநாயகி-(1901-1960)

○சென்னையில் 1901 இல் திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் ஐந்தரை வயதில் ஒன்பது வயது வை மு பார்த்தசாரதிக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார் திருமணத்துக்குப்பின் தெலுங்கு மொழி எழுத ப்படிக்க க்கற்றுக்கொண்டார் .முறைப்படி பள்ளி சென்று படிக்கவில்லை என்றாலும் தானே முயன்று கற்றார் இவருடைய விடாமுயற்சியின் சாதனை இவரை ஜகன்மோகினி இதழாசிரியராக,சிறுகதை ஆசிரியராக ,புதின ஆசிரியராக ,இசை அரசியாக,சமூக  தேவகி யாக,சமூகத்துக்கு அடையாளம் காட்டியது.இவருடையமுதல் படைப்பு இந்திர மோகனா நாடக வடிவம்பெற்றது .எழுத உதவியவர் உதவியவர் தோழி பட்டம்மாள் .விடுதலைப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த வை மு கோதைநாயகி இந்தியப் பெண்கள் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தவர் தன் இதழ் வாயிலாகவும் தன் படைப்புகள் வாயிலாகவும் இசை வாயிலாகவும் தமிழ் பெண் எழுத்தாளர் வட்டத்தையும் தமிழ் பெண் வாசகர் வட்டத்தையும் பெண் இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய சாதனையாளர் .

இவர் படைப்புகள் புதினங்கள்  -வைதேகி முதலாய 115 புதினங்கள் .

○சிறுகதைத் தொகுப்புகள் -மூன்று வைரங்கள்  ,சரச ராஜன் கதம்பமாலை ,பட்ச மாலிகா ,சுடர் விளக்கு ,பெண் தர்மம் முதலியன நாடகம் -அருணோதயம் ,இந்திர மோகனா .

○முப்பத்தைந்து ஆண்டுகள்இவர் ஜகன்மோகினி என்ற இதழை த்தொடர்ந்துநடத்தியுள்ளார்.

○பி . ஸ்ரீ ,கவியோகி சுத்தானந்த பாரதி ,மாஸ்தி வெங்கடேஸ்வரஅய்யங்கார், ராஜாஜி ,சோமசுந்தர பாரதி ,டி கே சி ,வரகவி சுப்ரமணிய பாரதியார் ,ராஸ்ரீ தேசிகன் போன்றோர் இவ்விதழில் தொடர்ந்து எழுதியுள்ளனர் குகப்ரியை ,வசுமதி இராமசாமி ,ஜானம்மாள் ,எஸ் அம்புஜம்மாள் ,குமுதினி போன்ற பெண் எழுத்தாளர்களும் ஏகே செட்டியார் ,வி ஆர் எம் செட்டியார் ,கொனஷ்டை,ஜே ஆர் ரங்கராஜுபோன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இந்த இதழுக்குத்தம் பங்கை அளித்தனர். நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் பெண்ணுரிமையும் பெண் விடுதலையும் எந்த அளவு ஒலித்துள்ளது என்பதை அறியஜகன்மோகினி இதழ்கள்மிகப்பெரிய பதிவுகளாகநமக்கு க்கிடைத்துள்ளனஎன்று பாராட்டுகிறாஙர் முனைவர் இரா பிரேமா .(இந்திய இலக்கிய சிற்பிகள் வை மு கோதைநாயகி (பக்கம் 76 )வை மு கோதைநாயகி வாழ்க்கையும் இலக்கியப் பணிகளும் சமூக சிந்தனைகளும் பற்றிய விரிவை இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வந்திருக்கும் வை. மு .கோதைநாயகி (சாகித்திய அகாதமி வெளியீடு 2001 )என்ற நூலில் காணலாம்.

ம ப பெரியசாமி தூரன்(1908 -1987)   பிறப்பு பெரியார் மாவட்டம் மொடக்குறிச்சி மஞ்ச காட்டு வலசு என்ற சிற்றூரில் வேளாண்மை க்குடும்பத்தில் பிறந்தவர் .இவர் கவிஞர் .சிறுகதை ,கட்டுரை ,நாடகம் என்கிற பலதுறை த்திறன் உடைய படைப்பாளி .கன்னட மொழியில் தேர்ச்சி பெற்றவர்

சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ பயின்றவர்

இவர் தேசபக்தர். இதழாசிரியர் இலக்கிய ப்படைப்பாளி வனமலர்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பித்தன் என்று ஒரு இதழ் தொடங்கினார். ஒவ்வொரு இதழிலும் இவருடைய கதைகள் கவிதைகள் கட்டுரைகள் இடம்பெற்றன .கோபிசெட்டிபாளையம் வைரவிழா பள்ளியிலும் ராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆசிரியராக பணிபுரிந்தார் .

படைப்புக்கள் சிறுகதை தொகுப்புகள் பிள்ளைவரம்( 1945 )

உரிமை பெண் (1952 )

காளிங்கராயன் கொடை (1956 )

தங்கச் சங்கிலி (1956 )

இரண்டாம் பதிப்பு மாவிளக்கு( 1958 )

" நூல்கள் பாரதி தமிழ் (1953 )

பாரதியும் தமிழகமும் (1979 )

பாரதியும் பாரத தேசமும் (1979 )

பாரதியும் பாட்டும்

பாரதியும் பாப்பாவும் (1979 )

பாரதியும் பெண்மையும்( 1979 )

பாரதியின்நகைச்சுவையும் நையாண்டியும் (1980 )

பாரதியும்உலகமும் ( 1981)

பாரதியும் கடவுளும்1 981

பாரதியும் சமூகமும் 1981

பாரதி நூல்கள் ஒரு திறனாய்வு 1982

இவை அனைத்தும் வானதி பதிப்பக வெளியீடுகள்.அறிவியல் நூல்கள் 7 படைத்துள்ளார் .சிறுவர் இலக்கியத்துக்கு ஏராளமான படைப்புகள் தந்தவர் .அறிவியல் நூல்களையும் அறிமுகம் செய்தவர்

கலைக்களஞ்சியப்பணி

கலைக்களஞ்சியம் வெளியிடும் திட்டத்திற்கு இவர் முதன்மை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 19 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி தமிழில் முதல் கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார்(1968) குழந்தைகள் கலைக்களஞ்சியம் உருவாக்கினார்(1976 )இந்த சாதனையைப் பாராட்டி சாகித்ய அகாடமி இவருடைய வாழ்க்கை வரலாற்றை இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிட்டது(2000 )இந்நூலை எழுதியவர் சிற்பி பாலசுப்ரமணியம்

.மொழிபெயர்ப்பு பணி ரவீந்தர் குழந்தை இலக்கியம்(1963 )கானகத்தின் குரல்(1958 )கடல் கடந்த நட்பு(1963 )பறவைகளைப்பார் (1970 )பெரியசாமித் தூரனின் வாழ்க்கையும் இலக்கியப் பணிகளும் பற்றிய விரிவான செய்திகளை சாகித்ய அகாதமி வெளியீடான (2000 )சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ம. ப. பெரியசாமித்தூரன் நூல்வாயிலாக அறியலாம்.ம ப பெரியசாமி தூரன்(1908 -1987)   பிறப்பு பெரியார் மாவட்டம் மொடக்குறிச்சி மஞ்ச காட்டு வலசு என்ற சிற்றூரில் வேளாண்மை க்குடும்பத்தில் பிறந்தவர் .இவர் கவிஞர் .சிறுகதை ,கட்டுரை ,நாடகம் என்கிற பலதுறை த்திறன் உடைய படைப்பாளி .கன்னட மொழியில் தேர்ச்சி பெற்றவர்

சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ பயின்றவர்

இவர் தேசபக்தர். இதழாசிரியர் இலக்கிய ப்படைப்பாளி வனமலர்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பித்தன் என்று ஒரு இதழ் தொடங்கினார். ஒவ்வொரு இதழிலும் இவருடைய கதைகள் கவிதைகள் கட்டுரைகள் இடம்பெற்றன .கோபிசெட்டிபாளையம் வைரவிழா பள்ளியிலும் ராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆசிரியராக பணிபுரிந்தார் .

படைப்புக்கள் சிறுகதை தொகுப்புகள் பிள்ளைவரம்( 1945 )

உரிமை பெண் (1952 )

காளிங்கராயன் கொடை (1956 )

தங்கச் சங்கிலி (1956 )

இரண்டாம் பதிப்பு மாவிளக்கு( 1958 )

" நூல்கள் பாரதி தமிழ் (1953 )

பாரதியும் தமிழகமும் (1979 )

பாரதியும் பாரத தேசமும் (1979 )

பாரதியும் பாட்டும்

பாரதியும் பாப்பாவும் (1979 )

பாரதியும் பெண்மையும்( 1979 )

பாரதியின்நகைச்சுவையும் நையாண்டியும் (1980 )

பாரதியும்உலகமும் ( 1981)

பாரதியும் கடவுளும்1 981

பாரதியும் சமூகமும் 1981

பாரதி நூல்கள் ஒரு திறனாய்வு 1982

இவை அனைத்தும் வானதி பதிப்பக வெளியீடுகள்.அறிவியல் நூல்கள் 7 படைத்துள்ளார் .சிறுவர் இலக்கியத்துக்கு ஏராளமான படைப்புகள் தந்தவர் .அறிவியல் நூல்களையும் அறிமுகம் செய்தவர்


.மொழிபெயர்ப்பு பணி ரவீந்தர் குழந்தை இலக்கியம்(1963 )கானகத்தின் குரல்(1958 )கடல் கடந்த நட்பு(1963 )பறவைகளைப்பார் (1970 )பெரியசாமித் தூரனின் வாழ்க்கையும் இலக்கியப் பணிகளும் பற்றிய விரிவான செய்திகளை சாகித்ய அகாதமி வெளியீடான (2000 )சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ம. ப. பெரியசாமித்தூரன் நூல்வாயிலாக அறியலாம்.○  த நா குமாரசுவாமி (1907 1982 )பிறப்பு சென்னையில் பிறந்தவர்.தந்தை தண்டலம் சங்கர நாராயண சாஸ்திரி.இவர் பல மொழி வல்லுநர்.சமஸ்கிருதம் ஆங்கிலம் தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றவர் .கீதாஞ்சலி ஆங்கில மொழிபெயர்ப்பை க்கற்ற உடன் ஆர்வ மிகுதியினால் தானே முயன்று வங்க மொழி கற்றார் .

○கல்வி 1928 இல் உளவியல், இந்திய தத்துவம் இவற்றில் பட்டம் பெற்றார் .1936 முதல் 1980 வரை வங்க மொழியிலிருந்து புகழ்பெற்ற படைப்புக்களை தமிழுக்கு அறிமுகம் செய்தார். இதனால் மொழிபெயர்ப்பு உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார் ஆனந்த விகடன் கலைமகள் கல்கி போன்ற இதழ்களில் இவர் படைப்புகள் வெளிவந்தன. நடைமுறைத் தமிழ் அகராதி ஒன்றும் படைத்துள்ளார் .

○இவர் படைப்புகள்

○சிறுகதைத் தொகுப்புகள்( 5 )

○1 -- கன்னியாகுமரி முதலிய கதைகள் (1940 )

       2. சந்திர கிரகணம் (1946 )

       3மூன்று நீலாம்பரி (1954)

       4 இக்கரையும் அக்கரையும்

       5 கற்பகவல்லி( 1968 )

        புதினங்கள் .6.  

            1.விடுதலை (1940)

             2 ஒட்டுச்செடி (1955 )

             3குறுக்குச் சுவர்( 1956 )

             4.வீட்டுப்புறா (1961)

             5.அன்பின் எல்லை (1958 )

             6.கானல் நீர் (1970 )

பக்கிம் சந்திரர் புதினங்கள்

விஷ விருட்சம் (1937) ஆனந்த மடம் (1938 )கிருஷ்ண காந்தன் உயில் (1938) மாதங்கி (1946 )கபால குண்டலா (1967 )இரண்டாம் பதிப்பு

சரத்சந்திரர் புதினங்கள்

பைரவி (1941) ஆம் ஊழியன் 1941 சௌதாமினி( 1939 )மருமகள்( 1942 )

தாராசங்கர் புதினங்கள் அக்கினி (1940 )கமலினி (1956 )கவி (1972 )ரவீந்திரநாத் தாகூரின் 11 புதினங்கள் 60க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், பயணக் கட்டுரைகள் ஆகியவற்றை ¡மொழிபெயர்த்துள்ளார் பிற வங்க மொழி ஆசிரியர்கள் நூல்களையும் காந்திஜியின் நூல்களையும் குஜராத் மூலம் மொழிபெயர்த்துள்ளார் இவர் வாழ்வும் பணிகளும் பற்றிய விரிவான விளக்கங்களை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளிவந்த த நா குமாரசுவாமி நூல் (1998 )வாயிலாக அறியலாம் இந்நூலின் ஆசிரியர் சென்னை வானொலி நிலைய உதவி இயக்குனர் த நா குமாரசுவாமியின் மகன் த கு. அஸ்வின்குமார்.


கா.சி .வேங்கடரமணி (1891 -1952 ) தஞ்சை காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவர்சிறந்த தேசபக்தர் .சுதந்திரப் போராளி. இவர் தந்தை சுங்கவரி விதிப்பு அதிகாரி.தன் மகனுக்குக்கிராமங்கள் மீதான ஆழ்ந்த பற்றுதலை உருவாக்கியவர். இவர் பள்ளியில் படிக்கும்போதே மாயவரம்  நகராட்சி யினரின் திறமையற்ற ஊழல் நிறைந்த ஆட்சி முறையை க்கண்டித்து கடிதம் எழுதியவர் .எழுத்தின் மாபெரும் ஆற்றலை உணர்ந்து செயல்பட்டவர். சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.வழக்கறிஞர் வாழ்க்கையின் எதிரொலிகளை இவர் படைப்புகளில் காணலாம்.

  படைப்புகள்

இரண்டு புதினங்கள் முருகன் ஓர் உழவன்( 1927 )தேசபக்தன் கந்தன் (1932 )ஆலவந்தி என்ற கிராமத்தை பின்புலமாகக் கொண்டது முருகன் ஓர் உழவன் புதினம் .கேதாரி ராமச்சந்திரன் என்கிற இரண்டு இளைஞர்கள் கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு மாறும் போது ஏற்படும் திணறல்கள் முருகன் என்ற இளைஞன் கிராமத்திலேயே சிக்கித் திணறுவது என்று மூன்று நண்பர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைக் காட்டுகிறது தேசபக்தன் கந்தன் .சுதந்திரப் போராட்ட வாழ்க்கையின் சோதனைகளும் சாதனைகளும் வெளிப்படும் புதினம் .இவை இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின் மொழியாக்கம் செய்யப்பட்டவை. 1922இல் தமிழ் உலகு என்னும் இதழ் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நடத்தினார் .

இதழ்ப்பணி

1938இல் என்.ரகுநாதன் துணையுடன் பாரத மணி என்னும் இதழ் தொடங்கினார் மண்ணின் மணம் கொள்கை ப்பிடிப்பு, வரலாற்றுச் சிறப்பு ஆகிய பின்புலங்களை ப்பெற்ற இந்த இதழில். வெளிவந்த பெ. நா. அப்புசாமி, பி. ஸ்ரீ போன்ற அறிஞர்கள் கட்டுரைகளும் இவருடைய போகிறபோக்கில் என்ற தொடர் கட்டுரைகளும் புகழ் பெற்றவை பாரதமணியிலும் இன்னும் சில இதழ்களிலும் இவர் எழுதிய நினைவோட்டக்கதைகள், சிறுகதைகள்,ஜடாதரன் முதலிய கதைகள் என்னும் தலைப்பில் ரகுநாதன் முன்னுரையுடன் வெளிவந்தன.  

இதர படைப்புகள்

1 காகிதப் படகுகள் 2 .மணல் மேட்டின் மீது 3.அடுத்த நிலை 4 சாம்புவுடன் ஒரு நாள் 5 .மறுமலர்ச்சி பெறும் இந்தியா 6 .படைப்புக்கலையின் இயல்பு 7. இந்திய கிராமம்

8 .சோதிடத்தில் நேர் பாதை ஆகியன .(பார்வை தினமணி நாளிதழ் தமிழ்மணி கட்டுரை 62 2011 கட்டுரை ஆசிரியர் ஸ்ரீராம்)

.

சுவாமிநாத ஆத்ரேயர் (1919 - 2013)

பிறப்பு 1919 நவம்பர் 19

பிறந்த ஊர் தஞ்சாவூர்

இவர் தந்தை சிமிழி வெங்கடராம சாஸ்திரி புகழ்பெற்ற வேதாந்த ஆசிரியர் .ஸ்வாமிநாத ஆத்ரேயர் தன் தந்தையிடம் சகல சாஸ்திரங்களையும் ராமாயண மகாபாரத புராணங்களையும் கற்றார் .

கல்வியும் புலமையும்

மணிக்கொடி கால எழுத்தாளர் ஆகிய இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத தியாகராஜா சிரோமணி பயின்றார் .இசையில் புலமை பெற்றவர் .ஐரோப்பியஒப்பு மொழி இயலிலும் பட்டம் பெற்றவர்

இந்தியிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.

கர்நாடக சங்கீத நிபுணர் .பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பு ,துளசி ராமாயணம் தமிழ் மொழிபெயர்ப்பு ,பக்த சாம்ராஜ்யம் ,ஸ்ரீராம மாதுரி, ராம நாமம் ,தியாகராஜர் அனுபவங்கள், ஜெய ஜெய ஹனுமான் ,சமர்த்த ராமதாஸ் சரிதம் ,சிவலீலாஆணவம் தமிழாக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை . பரிசுகளும் பாராட்டும்

இவர் படைத்த சம்ஸ்கிருத நூல்களைப் பாராட்டி பெற்ற விருது ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சமஸ்தான மூலம் ,ஆசுகவி திலகம் ,ஆஸ்தான வித்வான் ,ஞானச் செம்மல் .போன்ற விருதுகளைப்பெற்றுள்ளார். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பல அரிய நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர் .இவருடைய மாணிக்க வீணை என்ற சிறுகதைத்தொகுதி தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்றது .இருமொழி படைப்பாளிகளாய் மகாகவி பாரதியும் கவி காளிதாசனும் இணைந்து பேசினால் என்ற கற்பனையில் பிறந்ததே மகாகவி  சமாகம என்ற சம்ஸ்கிருத நாடகம். சுவாமிநாதஆத்ரேயரைப் போல்அதிக எண்ணிக்கையில்  சங்கீதச்சிறுகதைகளைப் படைத்த படைப்பாளர்கள் தமிழில் குறைவு என்று பாராட்டுகிறார் திருப்பூர் கிருஷ்ணன் .

(பார்வைஉதிர்ந்த நட்சத்திரம் 20 12 2013 திமனமணி நாளிதழ் தமிழ்மணி கட்டுரையாளர் திருப்பூர் கிருஷ்ணன்)

    கட்டுரை எண். 7

க நா சுப்ரமணியம்(1912-1988)     இவர் கந்தாடை நாராயணசாமி மகன்.இலக்கிய உலகில்    க. நா. சு என்று அழைக்கப்படுபவர்.கந்தாடை என்பது இவருடைய குடும்பச் சிறப்புப்பெயர். சுவாமிமலையில் பிறந்தவர்.சிறந்த இலக்கியத் திறனாய்வாளர்.இளவயதிலேயே பிரஞ்சு,ஜெர்மனி,ஸ்காண்டிநேவியா ,ஸ்வீடிஷ்மொழிகளைக் கற்றவர் .தீவிரமாகப் படிக்கும் ஆர்வமும்,எழுத்தார்வமும் கொண்டஇவருடையஎழுத்துக்கள்கல்லூரியில்படிக்கின்றபோதேWestwind போன்றஆங்கில இதழ்களில்வெளிவந்தன .சிறுகதை புதினம், நாடகம் ,கட்டுரை ,திறனாய்வு  மொழிபெயர்ப்பு என்று எல்லாத்துறைகளிலும் தீவிர ஈடுபாட்டுடன் எழுதியவர் .

இவர் படைப்புகள்

சிறுகதை த்தொகுதிகள்

1 தெய்வ ஜனனம் (1942)

2 .அழகி (1955 )3.மணிக்கூண்டு (1961 )

4 .கருகாத மொட்டு( 1966 )

புதினங்கள்

பொய்த்தேவு, அசுரகணம் ,ஒருநாள் ,கோதை சிரித்தாள், அவதூதர், பித்தப்பூ போன்ற 20 புதினங்கள் .

மொழியாக்கச் சிறப்பு

உலகின் பல மொழிகளில் தோன்றிய புதினங்கள் பலவற்றைத் தமிழாக்கம் செய்து தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய இவர் பணி மிகச் சிறப்பானது

மொழியாக்கம் செய்தவற்றுள் தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தொகுப்பு நூல்கள்

1.படித்திருக்கிறீர்களா?1 (1959-1968)1,2,3..பாகங்களில

36 புதினங்களை அறிமுகம் செய்து வைக்கிறார்

உலகத்துச்சிறந்த நாவல்கள். (பத்து நூல்கள் பற்றிய அறிமுகம்)

உலகத்துச் சிறந்த நாவல்கள்( 48 நூல்களின்சுருக்கங்கள்திறனாய்வுடன்)

இலக்கியச்சாதனையாளர்கள்.   (45 எழுத்தாளர்கள்பற்றியது)

உலக  சிந்தனை வளம் (மூன்றுபாகங்கள்)

தமிழ் நாவலாசிரியர்கள்  ஆங்கிலத்தில் 10பேர் அறிமுகம்

38உலக த்தத்துவ சிந்தனையாளர்களின் வரலாறும் விமர்சனமும்.

திறனாய்வு ப்படைப்புகள்

விமரிசனக்கலை(1955)

இலக்கிய விசாரம் (1959)(உரையாடல் வடிவில் வந்தது)

கலை நுட்பங்கள்(1968)

இலக்கியத்துக்கு ஓர்இயக்கம்(1985)

நாவல்கள் இந்திய பிறமொழிவடிவங்கள் அறிமுகமும் விமர்சனமும்( 1985)

நாடகங்கள்

1.நால்வர்

2.ஊதாரி

கவிதை நாடகம்-பேரன்பு

கவிதைகள்

1.மயன் கவிதைகள் 2.க.நா.சு. கவிதைகள்

இதழ்ப்பணி

இலக்கிய  வட்டம், சூறாவளி சந்திரோதயம், ராமபாணம் ஆகிய இதழ்களை நடத்தியவர்.

பிரஞ்சு ்ஸ்விடிஷ், ஜெர்மன், போலந்து நார்வேஜியன் ,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள புதினங்களை மொழியாக்கம் செய்து பார்த்த அனுபவத்திலும் திறனாய்வு செய்த அனுபவத்திலும் அகில இந்திய அளவில் தமிழுக்கென்றுஒருதனி

ப்பார்வையும் நோக்கமும் விமர்சனப் பார்வையும் உண்டு என்பதை நிரூபித்த க .நா. சு.இந்திய இலக்கிய ச்சிற்பிகள் இடையே முதலிடம் வகிக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்கிறார் தஞ்சை பிரகாஷ்.

பரிசுகள்

இவருடைய 'இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்' என்னும் திறனாய்வு நூல் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது .தஞ்சை

பிரகாஷின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளிவந்த க.நா. சுப்ரமணியம் என்கிற நூலில்( சாகித்திய அகாதமி வெளியீடு) (2001 )க நா சு வாழ்க்கையும் எழுத்துப் பணியும் பற்றிய விரிவான விவரங்களைக் காணலாம்.

  கட்டுரை எண் 8 கரிச்சான் குஞ்சு( 1919 1992 )பிறப்பு தஞ்சை மாவட்டம் சேதனீபுரம் . இயற்பெயர் ரா. நாராயணசாமி. தமிழும் வடமொழியும் பயின்று வித்துவான் சிரோமணி ஆனார் .பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணி செய்தவர் .தி ஜானகிராமனின் உறவினர்

இலக்கியப்பணி

.கு ப ரா வின் தொடர்பு இவரை முழுமையான எழுத்தாளர் ஆக்கியது.கு ப ரா.கரிச்சான் என்ற புனைபெயரில் கதைகளும் கட்டுரைகளும் எழுதியவர். கரிச்சான் என்னும் கரிக்குருவி பரத்வாஜ ம்என்று வடமொழியில் வழங்கப்பெறும்.பரத்வாஜ கோத்திரத்தில்பிறந்தவர் கு. ப. ரா. எனவே கரிச்சான் என்றுபுனைபெயர் வைத்துக் கொண்டவர் கு. ப. ரா.வின் எழுத்தாற்றலால் ஈர்க்கப்பட்டு கரிச்சான் குஞ்சுஎன்று புனைபெயர் வைத்துக் கொண்டார். 1940இல் இவருடைய முதல் கதை 'மலர்ச்சி' கலைமகளில் பிரசுரமானது.அக்காலகட்டத்தில் வெளிவந்த சிவாஜி முதலிய பல இதழ்களில் இவர் படைப்புகள் வெளிவந்தன.

படைப்புகள்

புதினம் -பசித்த மானிடம்

சிறுகதைத் தொகுதிகள்11

1. காதல் கற்பம்2 .குபேர தரிசனம் 3.வம்ச ரத்தினம்4. தெய்வீகம்5.அன்றிரவே.

6.கரிச்சான் குஞ்சு கதைகள்7.சுகவாசிகள் 8 .தெளிவு 9 .கழுகு 10.ஒரு மாதிரியான கூட்டம் 11 .அம்மா இட்ட கட்டளை

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

1சங்கரர் 2.கு ப ரா 3 .பாரதி தேடியதும் கண்டதும் .

கு.ப. ராவின்சிறுகதைகளை விமர்சனம் செய்துஇவர் 190 பக்கங்களில் எழுதியுள்ளார். கு ப ரா என்ற இந்த நூல் கரிச்சான்குஞ்சு சிறந்த திறன் ஆய்வாளரும் கூட என்பதை உணர்த்தும். கரிச்சான் குஞ்சுவின் படைப்புக்களும்அவர்  வாழ்க்கையும் பற்றி கே.ஜி .சேஷாத்திரி தன்னுடைய கரிச்சான் குஞ்சு (இந்திய இலக்கிய சிற்பிகள் சாகித்திய அகாதமி வெளியீடு 2007)என்ற நூலில் விரிவாக காணலாம்.கட்டுரை எண் ஒன்பது அநுத்தமா (1922 -2010)இவருடைய இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மநாபன்.

பிறப்பஆந்திரா.நெல்லூர்

இந்தி,தெலுங்கு ,பிரெஞ்சு மொழி கற்றவர் .22 வயதில் எழுதத்தொடங்கியவர்

ஆங்கிலப் புலமை பெற்றிருந்தமையால் சிறந்த மொழிபெயர்ப்பாளராக விளங்கினார்.

இவருடையபடைப்புகள்

சிறுகதைகள் 300

புதினங்கள் 22

15க்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஆகியவற்றைப்படைத்துள்ளார். பறவை இனங்களைப் பற்றிய ஆய்வுடன்நான்கு புதினங்கள் குழந்தை இலக்கியத்திற்குநல்கியவர்.'சேவைக்கு ஒரு சகோதரி'இசையரசிசுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.

இவருடைய முதல் கதை 'ஒரே ஒரு வார்த்தை'

இவருடைய இரண்டு சிறுகதைகள் ஒரே ஒரு வார்த்தை ,வேப்பமரத்து பங்களாஆகியனகன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .மோனிகா பெல்ட் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை  ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார்

பரிசுகள்

இவருடைய 'பிரேம கீதம் 'புதினம் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது .மணல்மேடு புதினம் கலைமகள் பரிசு பெற்றது .தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று இவரை ப்பாராட்டுகிறார் பரிபூர்ணா. இங்கிலாந்தில் பிறந்த பெண் எழுத்தாளர் ஜேன்ஆஸ்டினின் படைப்புகள் ஆங்கிலப்பெண்கள் சமூகத்தில்முன்னேறவும் பொருளாதார ஆதாயத்திற்காக ஆண்களையும்திருமணத்தையும் சார்ந்து இருந்ததை சுட்டிக்காட்டினார். சென்ஸ்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி, பிரைட் அன் பிரஜ்டிஸ் ,மான்ஸ்பீல்டு பார்க், எம்மா ஆகிய புதிய நான்கு புதினங்கள் ஜேன்ஆஸ்டினுக்குப்பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன. இவருக்கும் அநுத்தமாவிற்கும்  நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்கிறார் பரிபூர்ணா .(ஆதாரம்--

கட்டுரை 22 .5. 11 .'தமிழ்மணி 'தினமணி கட்டுரை எண் 10 ந பிச்சமூர்த்தி(1900 -1976)

பிறப்பு  -கும்பகோணம்

கல்வியும் பணியும்

தத்துவத்தில் பட்டம் பெற்றவர் .சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து 13 ஆண்டுகள்    வழக்கறிஞராகப்பணியாற்றியவர் பின்னாளில் இவர் இந்து அறநிலையத் துறை அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார் .   ரேவதி என்ற புனைபெயரில்  இவர் சிறுகதைகள் எழுதினார் .

படைப்புகள்

சிறுகதைத் தொகுதிகள்- 6 .

மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை    117

1 .பதினெட்டாம் பெருக்கு (1944 )பதினைந்து கதைகள்

2 ஜம்பரும் வேஷ்டியும்( 1947 )எட்டு கதைகள்

3 மோகினி( 1951) 18 கதைகள்

4 பிச்சமூர்த்தி கதைகள்( 1960 )20 கதைகள்

5 .மாங்காய்த்தலை( 1961) 25 கதைகள்

6 இரட்டை விளக்கு (1967 )23 கதைகள்.   இச்சிறுகதைகள் தவிர நூல் வடிவம் பெறாத 19 சிறுகதைகள் உள்ளன.

ந. பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழாவில் இவருடைய கதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து

ந. பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள் ,கவிதைகள் என்ற தலைப்புக்களில் இரண்டு நூல்களை சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது.

படைப்பின் சிறப்பு

இவருடைய பெரும்பாலான கதைகளில் தத்துவமும் ஞானமும் வெளிப்படக் காணலாம். ஆண் பெண் மன இயல்புகளை நயம்பட உரைப்பதில் வல்லவர் .கலைமகள் சிறுகதைப்போட்டியில் 1935இல் பரிசு பெற்றவர்

.ந.பிச்சமூர்த்தியின்                          வாழ்க்கையும் படைப்புகளும் பற்றியவிரிவான பார்வையை கீழ்க்கண்ட நூல்களில் காணலாம்

1ந.பிச்சமூர்த்தி ஆய்வடங்கல். மீனா குமாரி மீனாட்சி புத்தக நிலையம்.மதுரை( 1982)

2.ந.பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனிதநேயமும் -சுந்தரராமசாமி (வானதிபதிப்பகம் சென்னை (1991)

3.அசோகமித்திரன் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் ந. பிச்சமூர்த்தி பற்றி எழுதியுள்ளார் .(சாகித்ய அகாதமி வெளியீடு 2002.). . ஆசிரியர் பரிபூரணா.)