User:Rajendran12452
வணக்கம்! கன்னட மொழி பேசுவோர்களான, பேசுவோர் அல்லாத கவுண்டர் இனத்தவர்களுக்கும், தெலுங்கு மொழி பேசுவோர்களான நாயுடு, ரெட்டியார் இனத்தவர்களுக்கும் தலைமை ஸ்தானமாக இருந்தவர்கள் ஒன்னம்மாள் தொட்டராயர். இவரின் நேரடி வம்சாவழியினர் சிறுவாலை சம்ஸ்தானத்து அரண்மனையார். அரண்மனையார், கம்பளி, குருக்கள், பெருமாள் கோவில் பூசாரி, ஆவுக்காரன், தின்னப்பெத்தன். மானகாரன், கட்டியக்காரன் ஆகிய 8 பதவி கொண்டு, தென்னாட்டை நீதியுடன், தெய்வீக சக்தியுடன் ஆட்சி செய்தார்கள். அனுப்பக்கவுண்டர்கள் எங்கனம் விஜய நகர பேரரசின் வம்சா வழியினராக வந்து இந்நாட்டை ஆட்சி செய்தார்கள் என்ற வரலாறு, சிறுவாலை அரண்மனையாரிடமிருந்த ஓலைச்சுவடிகளிலிருந்து காணப்பட்ட வரலாற்றை காண்போம். கம்பளத்தார்களின் தகப்பனார் ஸ்ரீ கிருஷ்ண பகவான், தாயார்கள் நாகர் இனத்தை சேர்ந்த பத்திராட்சி, கமலாட்சி. இவர்களின் வாசிசுகள், அனுராஜன், அனுபதி மூலமாக கம்பளத்தார்களின் கூட்டம் அதிகமாகிறது, இவர்கள் பசுக்களை மேய்த்து, பட்டி போட்டு வாழ்ந்து வந்தார்கள். காலச்சக்கரங்கள் உருண்டோடுகின்றன. கால தேவதைகள் மாறி மாறி காட்சியளிக்கின்றன. காலங்களும் கடக்க, அரசியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. அரசியல் மாற்றத்தின் காரணமாக, டில்லியில் மொகலாயர்கள் ஆட்சி நடத்தி வந்தார்கள். மொகலாய அரசர் ஒருவர், கம்பளத்தார்களிடம் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். கம்பளத்தார்கள், இஸ்லாமியர்களுக்கு மணமுடிக்க விரும்பாமல் நாடு கடந்து, யமுனை நதியை கடந்து, தென்னாடு வந்தடைந்தனர். விந்திய மலைத் தொடருக்கு தெற்கே, தங்கள் பட்டிக்கு ஒரு தலைவர் வேண்டும் என விரும்பி, ஸ்ரீசஞ்சீவி முனிவரின் ஆசியோடு, ஸ்ரீ அச்சுதராமர் என்ற தொட்டய்யனை தலைவராக நியமித்து, ஸ்ரீ ஒன்னம்மாள் என்ற அம்மனை அவருக்கு மணமுடிக்கின்றனர். நாளுக்கு நாளாக, பட்டி பெருகி, பசுக்களும் அதிகரித்து, கம்பளத்தார்களின் வாரிசுகளும் அதிகரித்து, கூட்டம் அதிகமாகி வர, அதற்கு தெற்கே இருக்கின்ற விஜயநகரத்து மன்னன் ராயர் அவர்களிடம் சென்று, தாங்கள் தமது பட்டிப் பசுக்களும், அந்த நாட்டு எல்லைக்குள் பட்டி போட்டு வாழ்ந்து வர, அனுமதி கேட்க, மன்னனைக் காணச் செல்லும் வழியிமேற்கேயிருந்து கிழக்கு நோக்கி ஒரு நதி, விஜய நகரத்துக்கு அருகாமையில் ரத்தமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட ஸ்ரீமதி ஒன்னம்மாள், இது ஒரு முனிவரின் சாபத்தால் நிகழ்ந்ததை அறிந்து, தனது பட்டியிலுள்ள ஒரு பசுவை வரவலைத்து, ஸ்ரீ பகவான் கண்ணபிரானை நினைத்து, தனது கணவர் அட்டிய தொட்டய்யனை தொட்டு தொழுது, கம்பளத்து பெண்களை அழைத்து, தமது குல ஆசாரப்படி, மங்கள இசை முழக்கி, பசுவின் பாலைக் கறந்து, இரத்த ஆற்றில் கலக்கவும், அந்த ரத்தம் பாலாக மாறி, பாலாறாக ஓடிக் காட்சி அளித்தது. மனனன், இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன், இப்படியும் ஓர் வரம் பெற்றுள்ள மக்கள், நமது நாட்டின் மண்ணிலே வந்து இருக்கிறார்களா? ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தார். கம்பளத்தார்களின் பசு பட்டிகள், தமது நாட்டின் வளமான பிரதேசங்களில், எங்கு வேண்டுமானாலும், எந்தவிதமான வரியும், தடையுமில்லாமல் வசிக்கவும், கம்பளத்தாரின் தலைவர் அச்சுராமனுக்கு, அரண்மனை கட்டி வாசம் செய்யவும் அதிகாரம் கொடுத்து, உத்தரவும் பிறப்பிக்கிறார். கம்பளத்தாரின் தலைவரான ஸ்ரீ அட்டிய தொட்டய்யன், மஞ்சை நாட்டு பிரதேசத்தில் வாசம் செய்யவும், இவரின் தலைமையில் கீழ் உள்ள கம்பளத்தார்கள்,விஜயநகர மன்னனிடம் படைத்தலைவர்களாகவும், வீரர்களாகவும் நாட்டை நிர்வாகம் செய்து, கண்காணித்து வாழ்ந்து வந்தமையால் இக்கம்பளத்தார்களுக்கு அல்லியரென்றும், குருஞ்சை நாட்டில், தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், காராம் பசுக்களை மேய்த்து வாழ்ந்தமையால், காப்பில்லியரென்றும்,ஆதாள நாட்டில், தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், பசுக்களை மேய்த்து வாழ்ந்தமையால், ஏர்கோல் அல்லியரென்றும், பூதாள நாட்டில் தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், செம்மறி ஆடுகளை மேய்த்து வாழ்ந்தமையால், உக்கல்லியர் என்றும், மே நாட்டில் தங்கி வாழ்ந்த கம்பளத்தார்கள், குரும்பை ஆடுகளை மேய்த்து வாழ்ந்தமையால், காட்டல்லியார்(குரும்பர்) என்றும், மஞ்சை நாடு, குருஞ்சை நாடு, பூதாள நாடு, மே நாடு இப்பிரதேசங்களைச்சேர்ந்த கம்பளத்தார்கள், கன்னட மொழி பேசுவோர்களான படியால், தங்கள் பட்டிக்கு அட்டியென்றும், குப்பி நாடும் ஆதாள நாடும் குளிர் நாடு பிரதேசங்களை சேர்ந்த கம்பளத்தார்கள், தெலுங்கு மொழி பேசுவோர்களான படியால், தங்கள் பட்டிக்கு தொட்டியென்றும் வழங்கலாயினர். ஒரு சமயம், விஜய நகரப்பேரரசும், அந்நாடும், வெள்ளத்தில் தத்தளித்தது. நாடே தண்ணீரில் அழிந்து போகுமோ, என ஐயப்பட்டு, மக்களும் சிப்பாய்களும் முழுபலம் கொண்ட்டு, கண்மாய்களில் உடைந்த உடைப்புகளை அடைக்க முடியாமல் தத்தளித்தனர். இச்செய்தி அறிந்த ஸ்ரீமதி ஒன்னம்மாள், ஸ்ரீ கண்ணபிரானை வணங்கி, தன் கையில் பட்டாக்கத்தியை எடுத்து, அத்துடன் ஒரு எழுமிச்சம் பழத்தையும் மந்தரித்து, தன் கணவர் கையில் கொடுத்து, கம்பளத்தார்கள் புடை சூழ, உடைந்த உடைப்புகள் நோக்கி புறப்பட்டு, உடைப்புள்ள ஏரிகளுக்குச் சென்று, தாங்கள் கொண்டுவந்த எழும்மிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி, அதை உடைப்பில் போட்டு, ஸ்ரீமதி ஒன்னம்மாள் தன்கையால் ஒரு உருண்டை மண்ணையும் போட்டவுடனே, கரை வளந்து, உடைப்பு அடைந்தது, வந்த வெள்ளமும் கட்டுக்கு அடங்கியது.விஜய நகர வேந்தனும், மக்களும் இதைக்கண்டு ஆனந்தம் கொண்டார்கள். ஸ்ரீமதி ஒன்னம்மாளின் இரத்த ஆறை பாலாறாக மாற்றியதும், உடைந்த ஏரிகளையும் அடைத்ததும், அரசனையும், மக்களையும் திகைப்புக்குள்ளாக்கியது.அனுப்பர்கள் மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர்கள், அருள்வாக்கு, அனல்வாக்கு உள்ளவர்கள் என்றும் நல்லவர்கள் என்றும் போற்றி, அனுப்பர்களை மிகமிக மரியாதையுடன் நடத்தினார்கள். விஜய நகரப் பேரரசையே ஆட்சி செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள் அனுப்பர்கள் என்பதை பேரரசன் உணர்ந்தாலும், மேலும் உணர்வுக்கு ஊக்கம் அளிப்பது போல, ஸ்ரீமதி ஒன்னம்மாளின் புதல்வர் ஸ்ரீ பொட்டியதொட்டய்யனின் வீரமிகு செயல்கள், அல்லிகுல அனுப்பர்களுக்கு, நாட்டையே பரிசாகக் கொடுக்க வைத்தது.ஸ்ரீ பொட்டியதொட்டய்யனுக்கு, ஸ்ரீ கண்ணபிரானின் அருளால் வரம்பெற்ற குதிரை ஒன்று, குரு சஞ்சீவி முனிவரால் கொடுக்கப்படுகின்றது. ஸ்ரீ சூரிய பகவானின் அருளாலும், மற்றொரு குதிரை ஒன்றும் கிடைக்கிறது. இக்குதிரைகளில் ஏறி, வாள் ஏந்தி, சவாரி செய்து, போர்க்களங்களில் வெற்றி வாகை சூடுகிறார் பொட்டிய தொட்டய்யன். விஜய நகர வேந்தனே அச்சங்கொள்ளும் அளவுக்கு, சக்தி வாய்ந்த பேரரசனான வானாதிராயனையே, போரில் வெற்றி வாகை சூடுகிறார் ஸ்ரீ பொட்டிய தொட்டய்யன். வானாதிராயன் தன் மகளையே பொட்டிய தொட்டய்யனுக்கு கொடுத்து, தனது வானாதிக் கோட்டையையே, ஸ்ரீ பொட்டிய தொட்டய்யனுக்கு பரிசாகக் கொடுக்கிறார். விஜய நகர வேந்தனுக்கு, பகை எனப்பட்ட அரசர்களையெல்லாம், நீதிக்கும், நேர்மைக்கும், இரக்க உணர்விற்கும், புறம்பான அரசர்களையெல்லாம், எட்டுத்திக்குகளிலும் சென்று, ஆங்காங்கே வெற்றி கொண்டு, விஜய நகரப்பேரரசுடன் பந்தப்படுத்துகிறார். விஜய நகரப்பேரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். இதுமுதல் தொட்டய்யன் என்ற நாமம் தொட்டராயர் என்றழைக்கப்படுகிறது. விஜய நகரப் பேரரசின் அமைச்சரான இருகரை மல்லன், எப்போதுமே அனுப்பரசர்கள் மீது பொறாமை கொண்டவர். தீங்கான எண்ணம் கொண்டவர். மல்லனின் துர்போதனையால், மகாராணியின் மூலமாக, ஸ்ரீ பொட்டிய தொட்டராயரின் விசுவாசம் சோதனைக்குள்ளாகப்படுகிறது. மூன்று கட்டளைகளை நிறைவேற்ற பேரரசனால் பணிக்கப்படுகிறார் தொட்டராயர். 1. விஜய நகர வேந்தனால் பொட்டிய தொட்டராயருக்குக் கொடுக்கப்பட்ட ராய கண்டன் விருதை திரும்ப கொடுக்க வேண்டும். 2. சூரிய பகவான் அருளால் பெறப்பெற்ற குதிரையை அரசுக்குக் கொடுக்க வேண்டும். 3. அக்கினிக் குண்டம் வளர்த்து, அந்த அக்கினியில் குதிரை சவாரி செய்ய வேண்டும். இரண்டு கட்டளைகளை உடனே நிறைவேற்றி, மூன்றாவது கட்டளைக்கு அக்கினிக் குண்டம் வளர்த்து, குதிரை சவாரி செய்ய, நாளைக் கணக்கிட்டு, அந்நாளில் அக்கினிக் குதிரை சவாரி செய்ய, சபதம் எடுக்கிறார்.உடனே அரசு, ராயகண்டன் விருதையும், குதிரையையும் திரும்ப வாங்காது 3வது கட்டளையான அக்கினிக் குதிரை சவாரி செய்து நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறது.விஜய நகரத்துக்கு அருகமையில், ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, ஒரு கல் நீளம், ஒரு கல் அகலம், கொண்ட சதுரப்பரப்பில் வேலா மரங்களைக் கொண்டு அக்கினி வளர்க்கப்படுகிறது. ஓம குண்டத்திற்கு ஏற்பட்ட சாமான்களையும் இட்டு, ஒருமாத காலம் அக்கினி வளர்க்கப்படுகிறது. கம்பளத்தார்களாகிய அனுப்பர் மரபு வந்த ஆண், பெண் அவைவரும் ஒரு மாத காலம் விரத்ங் கொள்கின்றனர்.ஒருமாதம் நிறைவேறிய அந்நாளில், அந்த அக்கினியிலிருந்து அதிசய புரவி(குதிரை) ஒன்று தோன்றி, அக்கினியில் வலம் வந்து விளையாடியது. அப்பரியில் (குதிரை) சவாரி செய்யலாகாது, அது மந்திரத்தில் தோன்றியது என மல்லன் கூறி, வெண்கலக்குதிரை ஒன்றை கம்மாளார்களால் அமைக்கப்பட்டு, அதை, அந்த அக்கினியில் வைத்து, தகதகவென தணல் ஏறுவதில்தான் சவாரி செய்ய வேண்டும் என அமைச்சன் மல்லன் ஆணையிட்டான். அக்கினி வெண்கலக் குதிரையில் சவாரி செய்ய, ஸ்ரீ அருள்மிகு அட்டிய தொட்டயன், ஸ்ரீமதி ஒன்னம்மாள், ஸ்ரீ பொட்டிய தொட்டய்யன், ஸ்ரீமதி ஒன்னுக்கை ராமு இந்நால்வர்களுடன், அனுப்பர்குல மக்களாகிய பெண்டிற், அனைவரும், அருள்மிகு ஆண்டவன் மீது, இசைமிகு மங்களப்பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடவர்கள் அனைவரும் ஆதியில் ஏற்பட்ட உறுமி மேளம் முழங்க, தேவராட்டம் என்ற ஆட்டத்துடன் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டும், அந்த வேள்விக் குண்டத்தின் அக்கினிப் பொறியை வலம் வந்தனர். முதல் இரண்டு முறை, வலம் சுற்றி வந்தபோது, அங்கு கூடியிருந்த விஜய நகர வேந்தனும், அவர்களது அமைச்சர்களும், பட்டத்து மங்கையர்களும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய்பேசாது திகைத்து நின்றனர். மூன்றாவது முறைம் சுற்றி வந்ததும், அரசனும், மனைவியர்களும், மல்லனும், அனுப்பர்கள் காலில் விழுந்து வணங்கிம் அக்கினியில் இறங்க வேண்டாம்! நாங்கள் உங்களை சோதனை செய்தது போதும்! என அழுது புலம்பி, கண்கலங்கி, வேதனையுடன் தடுத்தனர். அப்போது, அருள்மிகு ஒன்னம்மாள், அரசனை நோக்கி, “அன்புள்ள அண்ணா! எங்களைத் தடுக்க வேண்டாம்! உங்களுக்கு ஓர் ஆண்மகவு உதிக்கும், அவனுக்கு, பட்டம் கட்டி, நாட்டை அவனிடம் ஒப்புவித்துவிட்டு, நீங்களும் எங்கள் இருப்பிடம் வாருங்கள்” என்றும், அருள்மிகு, ஒன்னுக்கை ராமு, அரசனிடம், “எங்களது அன்புமிக்க ஐயா! தாங்கள் எங்களுக்கு அருளிய விருதுகள் அனைத்தும், என்றும், எங்கள் குல மக்களுக்கு இந்த பூமி உள்ளவரைக்கும் நிலைத்து நிற்க, ஒரு செப்பு பட்டயம் தீட்டிக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள். இத்துடன் அனுப்பர் குல மக்கள் அழுது புலம்பி அங்கலாய்த்தனர். அவர்களை நோக்கி ஸ்ரீமதி ஒன்னம்மாள், “எங்கள் குல மாணிக்கங்களே! அனுப்பர் மரபு வந்த என் மக்களே! நீங்கள் யாவரும், சொல்லிய வாக்கு தவறாதீர்கள், நல்லது செய்யுங்கள். அந்த ஆதி சத்தியப்படி, ஸ்ரீ கண்ணபிரான் திருவருளால் நீங்கள் தொட்டது துலங்கும். உங்களுக்கு வந்த இடையூறும், அடுத்தவன் இட்ட சூதும் வாதும் விலகும். நீங்கள் நீடுழி வாழ்க!” என ஆசி கூறி, அருள்மிகு ஸ்ரீமதி ஒன்னம்மாளும், அருள் மிகு ஸ்ரீ அட்டிய தொட்டராயரும் அக்கினியில் வந்த குதிரையில் ஏறியும், சூரிய பகவானால் அருளப்பட்ட குதிரையில், அருள்மிகு பொட்டிய தொட்டராயரும், அரசனால் வெண்கலத்தால் செய்யப்பட்டு, அக்கினியில் காய்ச்சி திப்பொறி பறக்கும் அக்கினிக் குதிரையில் அருள்மிகு ஸ்ரீமதி ஒன்னுக்கைராமுவும் ஏறி, சவாரி செய்து, அவைவரின் கண்முன் ஆகாயத்தில் பறந்து ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தனர். இச்சமுதாயத்திற்கு, நல்லது செய்வதையே, நாட்டை நிர்வாகம் செய்வதையே, தொழிலாகக் கொண்டு, சொல்லிய வாக்குத் தவறாத, உத்தமர்களாக வாழ்ந்து, மறைந்த, அல்லிகுல கம்பளத்தார்கள்தான், இன்று நாட்டில் வணக்கப்படும் சிறுசிறு தெய்வங்கள் ஆகும். மதுரை சித்திரைத் திருவிழாவில், மதுரை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் மதுரை கள்ளழகர் அல்லிகுல கம்பளத்தாரே! உலகமே போற்றி வணக்கும் மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மனும் அல்லிகுல கம்பளத்தாரே! பக்திச் சிரத்தையுடன் வணங்கப்படும் சங்கையா சுவாமியும், சுந்தர வள்ளியம்மனும், உத்தண்டராய சுவாமியும் அல்லி குல கம்பளத்தாரே! ஆட்சிமுறை விஜய நகரப் பேரரசுக்கு தலைமை தாங்கி, ஆட்சி செய்த கம்பளத்து அல்லியர்கள் அரண்மனைப் பற்றி கணக்கெடுக்கும் போது, 60 மேற்பட்ட அரண்மனை கொண்டு ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. அரண்மனைகளுக்கு தலைமை ஸ்தானமாக, சிறுவாலை சமஸ்தானம், மதுரை மாவட்டத்திலிருந்து கொண்டு ஆட்சி செய்திருக்கிறது. கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் அல்லிகுல கம்பளத்தார்கள் (ராயர்கள்) ஆட்சி செய்திருக்கிறார்கள். 1. சிறுவாலை சமஸ்தானம் (பேரரசு) 2. கவுண்டன்கோட்டை அரண்மனை -மேலக்கோட்டை, நடுக்கோட்டை,கீழக்கோட்டை 3. நிலக்கோட்டை அரண்மனை 4. காளப்பன்பட்டி அரண்மனை 5. வதுவார்பட்டி அரண்மனை 6. கூத்திப்பாறை அரண்மனை 7. கவுண்டன்பட்டி அரண்மனை 8. பந்தல்குடி அரண்மனை 9. வெள்ளியங்குன்றம் அரண்மனை 10. புல்லணக்கவுண்டன்பட்டி அரண்மனை 11. வரதராஜபுரம் அரண்மனை 12. செக்காரக்குடி அரண்மனை – மேலச்சொக்காரக்குடி,நடுச்சொக்காரக்குடி,கீழச்சொக்காரக்குடி 13. போடுரெட்டியபட்டி அரண்மனை 14. சங்கரபாண்டியாபுரம் அரண்மனை 15. சன்னாசிபட்டி அரண்மனை 16. மாரனேரி அரண்மனை 17. திம்மராஜபுரம் அரண்மனை - இப்படி அரண்மனைகள் ஆட்சி செய்திருக்கின்றன. நமது இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு, நமது அனுப்பக் குல மக்களின் சிறப்பு கருதி, மேற்சொன்ன மாவட்டங்களில் எல்லாம் (விசாரனை) ஸ்தல அதிகாரிகளாக, ஒவ்வொரு கிராமங்களிலும் அனுப்பக் கவுண்டர்களையே நியமணம் பண்ணின.சிறுவாலை அரண்மனையாளர்களின் பாரம்பரிய (கொடிவழிஜாப்தா) வாரிசுகள் பற்றிய விபரத்தினை 1823-ஆம் ஆண்டிலிருந்து கெஜட்டில் வைத்திருக்கின்றன வெள்ளைக்கார அரசு.ஆட்சி செய்த திருமலை நாயக்கருக்கு முன்பு, விஜய நகர பேரரசு தான், தெய்வ ஆலயங்களை நிர்மாணித்து சிறு தெய்வ வழிபாட்டிற்கு உறுதுணையாகவும் இருந்தது, நாட்டை நீதியுடனும், தெய்வீக சக்தியுடனும் ஆட்சி செய்தன. “கம்பளத்தார்கள் இறந்தால் தெய்வமாக வருவார்கள்! மாண்டால் மருளாடியாக வருவார்கள்! – என்பது ஒரு ஐதீகமாம். இதைச்சான்றாக்க, நினைவுச் சின்னமாக, நினைவுக்கல் அதாவது வீருகல் ஊன்றுகிறோம். உயிரோடு இருக்கும் போது தெய்வமாக வாழ்ந்தவர்கள், கம்பளத்தார்-இறந்த பின்பும் தெய்வமாக இருக்கிறார்கள் என்பதை உலகத்தாருக்கு காட்டும்முகமாகத்தான் ‘வீருகல்’ ஊன்றுகிறார்கள். இருக்கும் ஜாதி அமைப்புகளிலேயே, அனுப்பக்கவுண்டர், அனுப்பச்சக்கிலியற், கம்பளத்து நாயக்கர் – இம்மூன்று ஜாதிகளுக்கு மட்டும்தான் ‘வீருகல்’ நடப்படுகிறது. 21 பந்தி – 64 சேனை சிறு தெய்வ வழி பாட்டின் உயிர் முடிச்சு இவைதான். இதை மையமாக வைத்துத்தான் ஆட்சி செய்திருக்கிறார்கள் ராயர்கள் என்றழைக்கப்படும் கம்பளத்தார்கள். இதைக் குறிக்கவே, ‘தெய்வீக இராஜாங்க அதிபதி’ என்ற பட்டமும் சிறுவாலை சமஸ்தானத்து அரண்மனையாளருக்கு உண்டு. சிறுவாலை பட்டத்து ராஜாவுக்கு ‘ ஸ்ரீ அனுதொட்டராயன், அக்கினி பரிநகுலன், அனுமக்கொடி, கெருடக்கொடி, விருதுடையோன், பகல்தீவர்த்தி, திக் விஜய பிரதாப தெய்வீக இராஜாங்க அனுப்பரசு அல்லிகுல இராஜ மகுடாதிபதி ராஜ ராய ராகுத்த கண்டன், இம்முடி வல்லவெட்டு அச்சுதராம்’ – என்ற பட்டங்களும், இளவரசருக்கு, மதுரை அழகரின் திருநாமங்களையும், அழகர் கோவிலின் விமானத்தின் திருநாமத்தையும் தாங்கி அச்சுதராம (அழகரின் புகழ் பாடும் நாமம்) சோமச்சந்திர (அழகர் விமானத்தின் பெயர்) சுந்தர ராஜ மூர்த்தி (அழகரின் உற்சவ மூர்த்தியின் பெயர்) பாண்டியர் என்ற பட்டங்களும் உண்டு. அரண்மனையாரின் பரிவாரங்கள் இரண்டு விதமாக, நாட்டுக்கு ஒன்றும், ஜாதிக்கு ஒன்றுமாக இரண்டு பரிவாரங்கள் உண்டு. சிறுவாலை சமஸ்தான இராஜாங்க பரிவாரம் மஹாராஜா இளைய மஹாராஜா யுவராஜா மாப்பிள்ளைக்கவுண்டர் நாட்டாண்மைக்காரர் கணக்குப்பிள்ளை தானாபதிப்பிள்ளை சம்பூதிரிப்பிள்ளை பேஷ்காரப்பிள்ளை பெருந்தனக்காரர் ,மணியக்காரர், காவல்காரர் தண்டல்காரர் சேர்வை வகையறா- தேவர் வகையறா தச்சர் – கொல்லர் வண்ணான் – குடிமகன் மடையன் தோட்டி மாதாரி சிறுவாலை சமஸ்தான அல்லிகுல பரிவாரம் அரண்மனையார் கம்பளிகள் குருக்கள் பெருமாள்கோவில் பூசாரி ஆவுக்காரன் தின்னப்பெத்தன் மானகாரன் கட்டியக்காரன் 64 குலங்கள் அல்லிகுல கம்பளத்தார்களின் ஒழுக்கமும், பக்தியும், சமுதாய உணர்வும் நாட்டை நல்லதொரு சூழ்நிலையில் வைந்திருந்தது. செழிப்பினையும், நீதியையும், நேர்மையையும், இரக்க உணர்வினையும் தழைத்தோங்கச் செய்தது. மேலும், கம்பளத்தார்கள், தங்களுக்குள்ளேயே பக்தியையும், ஒழுக்கத்தையும், நீதியினையும் சீராக பராமரிக்க, தமது அல்லிகுலத்தினரை 64 பிரிவுகளாக்கி, அப்பிரிவு ஒவ்வொன்றுக்கும் பெயரிட்டு, பிரிவு ஒவ்வொன்றுக்கும் தலைமைதாங்கி அருள்பாலிக்க தெய்வங்களையும் பிரித்து, சகோதர உறவினையும், சம்பந்த உறவினையும் மேம்படுத்தி, தங்களைச்சீர்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்கள். 64 குலங்கள் 1. Govoru கோவோரு 2. Phottioru பொட்டியோரு 3. Kondioru கொண்டியோரு 4. Keyppathoru கெப்பதோரு 5. Konnaioru கொன்னையோரு 6. Katioru கட்டியோரு 7. Angathoru அங்கதோரு 8. Avinjoru அவிஞ்சோரு 9. Unakaioru உனைக்கையோரு 10. Sakkinoru சக்கினோரு 11. Surukioru சுருகியோரு 12. Pholioru போழியோரு 13. Palloru பள்ளோரு 14. Prinjoru பிரிஞ்சோரு 15. Pikkaloru பிக்கலோரு 16. Poochioru பூச்சியோரு 17. Beyrinioru பெரினியோரு 18. Bhocioru போசியோரு 19. Phokkithoru பொக்கிசோரு 20. Bellathoru பெல்லதோரு 21. Manthoru மந்தியோரு 22. Mannioru மன்னியோரு 23. Muppichoru முப்பிச்சோரு 24. Thumikiloru துமிக்கிலோரு 25. Thundathoru துண்டதோரு 26. Edanoru எடனோரு 27. Eymaioru எம்மையோரு 28. Thudikaloru துடிக்கலோரு 29. Thonnaioru தொன்னையோரு 30. Thombilioru தொம்பிலியொரு 31. Nannioru நன்னியோரு 32. Nonathoru நொனந்தோரு 33. Soloru சோளோரு 34. Santhanoru சந்தனோரு 35. Svudioru சவுடியோரு 36. Salakioru சலக்கியோரு 37. Sannoru சன்னோரு 38. Saanioru சானியோரு 39. Sallioru சல்லியோரு 40. Sangioru சங்கியோரு 41. Cikkaloru சிக்கலோரு 42. Kaalijoru காளிஜோரு 43. Kadijoru கடிஜோரு 44. Gonioru கோணியோரு 45. Akkalathoru அக்கலதோரு 46. Aavinoru ஆவினோரு 47. Aanaioru ஆனையோரு 48. Ulloru உள்ளோரு 49. Uraloru உரலோரு 50. Thuruvinoru துருவியோரு 51. Thupnathoru துப்ணதோரு 52. Thottioru தொட்டியோரு 53. Tharioru தாரியோரு 54. Egadoru எகடோரு 55. Eyrioru ஏரியோரு 56. Pannaioru பண்ணையோரு 57. Bhanoru பாணோரு 58. Patjoru பாட்ஜோரு 59. Maarijoru மாரிஜோரு 60. Edukkaloru இடுக்கலோரு 61. Omjoru ஓம்ஜோரு 62. Ramjoru ராம்ஜோரு 63. Nakkalathoru நக்கலதோரு 64. Dhasanoru தாசனோரு இவை யனைத்தும் கன்னட மொழிச் சொற்களாகும். அல்லிகுல கம்பளத்தார்களின் வாய் மொழிச் சொற்கள், கன்னடச்சொற்கள். சகோதர உறவு 1 முதல் 32 முடிய மற்றும் 33 முதல் 64 முடிய உள்ளபிரிவினர்கள் சகோதர உறவு கொண்டவர்கள். சம்பந்த உறவு 1 முதல் 32 முடிய உள்ள பிரிவினர்கள், 33 முதல் 64 முடிய உள்ள பிரிவினரோடு சம்பந்த உறவு கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளது. 64 பிரிவினில் உள்ள தாசனோரு தங்கள் நேரடி திருமண உறவில் (பெண் எடுத்த/கொடுத்த உறவுகள்) சகோதர உறவுகளை தவிர்த்து மற்ற எல்லா பிரிவினர்களுடனும் சம்பந்தம் செய்யலாம். குலதெய்வங்கள் கோவோரு குலதெய்வங்கள் காமாட்சி, கொண்டம்மாள், சின்னம்மாள், வெள்ளையம்மாள், ரமாதேவி, நல்லம்மாள் சோளோரு குலதெய்வம் சென்னம்மாள் சன்னோரு குலதெய்வம் கோணியம்மாள் உள்ளோரு குலதெய்வம் மல்லம்மாள் முப்பிச்சோரு குலதெய்வம் பையம்மாள் பாணோரு குலதெய்வங்கள் சங்கம்மாள், சின்னம்மத்தாய், வீரகாளி காளிஜோரு குலதெய்வம் மாலைமுத்து பெள்ளோரு குலதெய்வம் தொட்டிச்சி, தேவம்மாள் ஏரியோரு குலதெய்வம் படமனத்தாய் தாரியோரு குலதெய்வம் வேலம்மாள் துருவியோரு குலதெய்வம் காளம்மாள் அவிஞ்சோரு குலதெய்வம் கெப்பம்மாள் நொனத்தோரு குலதெய்வம் பொம்மியம்மாள் இடுக்கலோரு குலதெய்வங்கள் ஒல்லியம்மாள், பண்ணம்மாள் எகடோரு குலதெய்வம் வீரவையம்மாள் போழியோரு குலதெய்வம் கொண்டத்துக்காளி, கொண்டு நல்லம்மாள், கொண்டம்மாள், பொன்னுசங்கர் வணங்கப்பட்டு வருகின்றன.இப்படி மற்ற பிரிவுகளுக்கும் குலதெய்வங்கள் இருக்கின்றன. மேலும், மொத்தமுள்ள 64 பிரிவினர்களடங்கிய அல்லிகுல கம்பளத்தார்கள் அனைவரும் குப்பிட வேண்டிய தெய்வம் கன்னிமார். தட்ஷிணாயணம் முடித்து, உத்தராயணம் தொடங்கும் தை மாதத்தில், தைப்பொங்கலன்று, பட்டத்தரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்துகன்னி, அகஜா கன்னி, வன கன்னி மற்றும் சுமனி கன்னி எனப்பட்ட கன்னிமார்களை வணங்க வேண்டுனம். அவரவர் இல்லத்தில் தைப்பொங்கலன்று மாலை 6 மணிக்கு மேல், வீட்டின் வாசற்புரம் ஒரு மூலையில், ஒரு சிறு குளம் தோண்டி 1அடி நீளம், 1அடி அகலம், 1அடி ஆழம் உள்ள குளம் தோண்டி, தோண்டிய மண்ணை கரையாக அமைத்து, கரைக்கு மேலே 7 கன்னிமார் சிலையை (6 கன்னிமார் சிறு சிறு கல்லினாலும், 1 கன்னிமார் மஞ்களினாலும் சிறிதாக பிடித்து) வடக்குப்பக்கம் பார்த்தோ, அல்லது கிழக்குப்பக்கம் பார்த்தோ வைக்கவேண்டும். குளத்தில் தண்ணீர் விட்டு, நவதானியம் போட்டு, பால் ஊற்றி மஞ்சள் கொத்தும், கரும்பும் வைத்து, பொங்கலிட வேண்டும். வீட்டில் பிறந்த மகளை அழைத்து வந்து, பொங்கலிட்டு கன்னிமாரை கும்பிட வேண்டும். பச்சை அரிசி (அவியலிடாத அரிசி) சாதமிட்டு, சாம்பார் வைத்து, பூசணிக்காயை கறியாக்கி வைத்து படையலிட வேண்டும். படையலிட்டு கும்பிடும் வரை யாருடனும் பேசக்கூடாது. கன்னிமாரை படையலிட்டு கும்பிட்டபிறகு, அந்த குளத்திலேயே கன்னிமாரை போட்டு மூடி விட வேண்டும். - இச்செய்தி(கன்னிமார் பற்றி) கெளாங்கொண்டு கம்பளி மேட்டு அதிபதியிடமிருந்து பெறப்பட்டது.