Jump to content

User:Muhammedabubacker

From Wikipedia, the free encyclopedia

முஹம்மது அபூபக்கர்

[edit]

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கே.எல்.டி. அஹ்மது-டி.ஒ. அஹ்மது ஆய்ஷா ஆகிய தம்பதியினருக்கு மகனாக கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 06.09.1971 அன்று பிறந்தார். ஆன்மீக செல்வர்களான செய்கு சதக்கத்துப்பா அப்பா, உமர் வலி குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு செய்யது பாத்திமா என்ற மனைவியும், அஹ்மது முஹிய்யத்தீன் என்ற மகனும் உள்ளனர்.

படிப்பு

[edit]

12ம் வகுப்பு வரை காயல்பட்டினம் முஹிய்யத்தீன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளிக்கூடத்தில் வகுப்பு தலைவராகவும், பள்ளிக் கூட அணி தலைவராகவும் இருந்ததோடு, தமிழக அரசு நடத்திய பள்ளிக் கூடங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் மண்டல அளவில் வெற்றி வீரராக விளங்கினார். நகரில் முஹம்மதன் ஸ்போர்டிங் கிளப் உருவாக்கி சிறந்த கால்பந்தாட்ட வீரராக விளங்கியுள்ளார். சென்னை புதுக்கல்லூரியில் பி.எஸ்.சி. (வேதியியல்) படித்தார்.

பொதுப்பணி

[edit]

1988ஆம் ஆண்டு காயல்பட்டினத்தில் கடும் தண்ணீர் பஞ்சம், தொடர் மின்சார தடை, சுகாதாரக்கேடு என சமூக பிரச்சினைக்களுக்கு விடியலை தேடி தன் நண்பர்களோடு ‘ காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு’ என்ற பொது நலசங்கத்தை உருவாக்கி மின்சார தட்டுப்பாட்டை போக்கிட புதிய டிரான்ஸ்பாரம், லாரிகள் மூலம் குடி தண்ணீர் வினியோகம், மயான பகுதிகளை சுத்தம் செய்தல் என்பன போன்ற பணிகளில் ஈடுபட்டு தனது பொது வாழ்க்கை துவங்கினார்.

அரசியல் பணி

[edit]

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முன்னாள் மாநில பொருளாளர், காயிதே மில்லத் அவர்களின் உற்ற தோழர் எஸ்.எம்.கே. மஹ்மூது லெப்பை இவரின் மாமா, காயல் நகர தலைவர் எஸ்.எம்.கே. தைக்கா உமர் இவரின் பாட்டனார், தியாகி பி.எச்.எம். அப்துல் காதர் இவரது உறவினர். முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்த இவர் 1986ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார்.

சென்னை கல்லூரி வாழ்க்கையில் 1990ஆம் ஆண்டு அன்றைய தலைவர் அப்துஸ் ஸமது அவர்களின் அறிமுகம், இன்றைய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுடன் தொடர்பால் முஸ்லிம் லீகில் முழுமையாக ஈடுபடலானார்.

1990ஆம் ஆண்டு சென்னை பெரியமேடு பிரைமரி கிளை செயலாளர், 23.10.1991 அன்று சென்னையில் மாணவர்களை ஒன்று திரட்டி ‘ மாணவர் பேரவை’யை தமிழகத்தில் துவங்கி அதன் மாநில அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1994ஆம் ஆண்டு முஸ்லிம் இளைஞர் லீகின் தேசிய செயல்பாட்டிற் குழு உறுப்பினர்.

1990ஆம் ஆண்டு சென்னை பெரியமேடு பிரைமரி கிளை செயலாளர், 23.10.1991 அன்று சென்னையில் மாணவர்களை ஒன்று திரட்டி ‘ மாணவர் பேரவை’யை தமிழகத்தில் துவங்கி அதன் மாநில அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1994ஆம் ஆண்டு முஸ்லிம் இளைஞர் லீகின் தேசிய செயல்பாட்டிற் குழு உறுப்பினர்.

2008ஆம் ஆண்டில் மாநில தலைமை நிலைய செயலாளராகவும், 11.07.2009 முதல் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி வருகின்றார். மணிச்சுடர் தமிழ் நாளிதழின் நிர்வாக இயக்குனர் மற்றும் வெளியீட்டாளராக 06.11.2009 முதல் பணியாற்றி வருகின்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய-மாநில-மண்டல மாநாடுகளின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

சமூகப்பணிகள்

[edit]

இவரின் பெரும் முயற்சியால் இக்ரா கல்வி சங்கத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி உதவி பெற்று வருகின்றனர். இவர் 2012ஆம் ஆண்டு மத்திய அரசின் மனித வள அமைச்சக்கத்தின் சிறுபான்மை கல்வி மேம்பாட்டு குழு தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2011ஆம் ஆண்டு காயல்பட்டினத்தில் தமிழ் இலக்கிய மாநாடுக்குழு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று வெற்றி மாநாடாக நடத்தினார்.

2011ஆம் ஆண்டு சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் விருந்தினராக இந்திய குழுவின் சென்று புதிய ஹஜ் கடமையை நிறைவேற்றும் வாய்ப்பை பெற்றார்.

இலட்சியம்

[edit]

சாதி-இன-மதங்களை கடந்த அனைவர்களும் இருக்க இடம், குடிநீர், மின்சாரம் பெற்று சுகாதாரத்தோடு வாழ வேண்டும் என்பதே இவரின் லட்சியமாகும். இதை செயல்படுத்தும் விதத்தில் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் இவரின் தூண்டு கோலால் அனைத்து சமய மக்களுக்கான பல லட்சம் செலவில் 40 கருனை இல்லங்கள் கட்டிக் கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கருனை இல்லங்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் கட்டிக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர்.

சமூக நல்லிணக்கம் தழைக்க நாளும் உழைத்து வருகின்றார். ஒழுக்கத்தோடு கூடிய கல்வியை அனைவர்களும் பெற்று உயரிய சமுதாயத்தை உருவாக்குவதே இவரின் லட்சியமாகும்.

"இறையருள்"" சேவைத் திட்டம்

"பைத்துர் ரஹ்மா" என்ற திட்டமானது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில கிளையின் சார்பில் அனைத்து சமுதாயத்திற்குமான நிலமிருந்தும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டமாகும்.

இத்திட்டம் கேரள மாநிலத்தில் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் நினைவாக இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘பைத்துர் ரஹ்மா’ இல்லங்கள் கேரளாவில் கட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தமிழகத்தில் இறையருள் இல்லம் என்ற பெயரால் நிறைவேற்ற வேண்டும் என தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வழிகாட்டி, நெறிமுறைகளை வழங்கியிருக்கிறார்கள்.

துவக்கமாக கடலூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் நாற்பது இறையருள் இல்லங்கள் கேரள முஸ்லிம் கலாச்சார மையம் (முஆஊஊ) சார்பாக கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடையநல்லூர் தொகுதியில் இறையருள் இல்லங்கள்:-

[edit]

2016ல் சட்டப்பேரவை தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., அவர்களின் முயற்சியினால் இறையருள் சேவை திட்டத்தின் கீழ் நிலமிருந்தும் வீடு இல்லாதவர்களுக்கு இறையருள் இல்லம், பள்ளிக்கூடம் , மசூதி மற்றும் வழிபாட்டு இடங்களின் விரிவாக்கத்திற்கான இறையருள் கூடங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்.

இப்பணிகள் தமிழகமெங்கிலும் தொடர்ந்திட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.