User:M C Rasmin
Heading text
[edit]நவீன வானொலி ஒலிபரப்புச் செல்நெறியும் இலங்கையின் ஒலிபரப்பின் போக்குகளும் Radio Asia சர்வதேச மாநாட்டிலிருந்து சில அனுபவங்கள்
எம். சீ. ரஸ்மின் நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்.
ஆசிய நாடுகளின் நவீன ஒலிபரப்புச் செல்நெறியினை ஆய்வுக்குட்படுத்தும் சுயனழை யுளயை சர்வதேச மாநாடு இலங்கையின் ஒலிபரப்புத்துறையின் சமகாலப் போக்கு தொடர்பாக ஆழமான பல கேள்விகளை எழுப்புகின்றது. இம் மாநாடு அண்மையில் டில்லியில் இடம்பெற்றது. ஆசிய ஊடக மற்றும் தகவல் நிலையம் ஆகிய ஒலிபரப்பாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
வெறும் சினிமாவையும் பொது போக்கையும் விளம்பரமயப்படுத்தி வானொலியில் ஒலிக்கச் செய்து, மக்களை சமூகமாற்றத்திலிருந்தும் அபிவிருத்தியிலிருந்தும் தொலைவில் நிற்கச் செய்யும் ஒரு விதமான ஒலிபரப்பு மாயைதான் இன்றுவரை இருந்து வருகின்றது. வாவொலி ஒலிபரப்பு தொடங்கிய காலத்தில் சமூகமாற்றத்திற்கான ஒரு ஊடகம் என்றுதான் வாவொலி அறியப்பட்டிருந்தது.
90களுக்கு முந்திய கலாத்தில் அறிவிப்பாளர்கள் அல்லது ஒலிபரப்பாளர்கள் என்கின்றவர்கள் நேயர்களை விட ஒரு படி உயர்ந்தவர்கள் என்ற கருத்தும் பல்வேறு காரணங்களால் நிலைபெற்று வந்தது. ஒலிபரப்பாளர்களுக்கு சமூகம் பெரிய அந்தஸ்தினை வழங்கியிருந்தது. நேயர்கள் வெறும் நுகர்வோர் என்ற நிலை இன்றுவரை இருந்து வருகின்றது. நேரயர்கள் என்றவகையில் பொதுமக்களுக்கு ஒரு வானொலி ஒலிபரப்பின் மீது உள்ள உரிமை பற்றிய பிரக்ஞை பூர்வமான தெளிவு அனேகமாக இருக்கவில்லை.
நேயர்கள் கடந்த இரண்டு தசாப்தங்களில் நவீன ஒலிபரப்பு பல மாற்றங்களை கண்டுள்ளது. நேயர்கள் வெறும் நுகர்வோர் என்ற நிலைமாறி இப்போது அவர்களும் அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், நெறியாளர்கள், செவிமடுப்பவர்கள், இயக்குபவர்கள் என்ற காலம் உருவாகியுள்ளது. வானொலிக்காக நேயர்கள் என்ற நிலை மாறி நேயர்களுக்காக வானொலி என்ற மாற்றம் வந்ததை போல அலைவரிசைகளுக்காக நேயர்கள் என்ற நிலை மாறி, நிகழ்ச்சிகளுக்காக நேயர்கள் எனும் நிலை உருவாகியிருக்கிறது. மலேசியா மற்றும் நியுசீலாந்து இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து அறிக்கைகளை வாசித்த ஆய்வாளர்கள் அந்நாடுகளில் நேயர் அய்வு என்பது தனியான ஒரு துறையாக வளர்ந்திருப்பதற்கான விஞ்ஞான பூர்வமான சான்றுகளை முன்வைத்தனர்.
இலங்கையில் வானொலி சில வானொலி நேயர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தாலும் அவை எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது இதுவரை தெரியவில்லை. முதல்தர வானொலிகள் என்ற அடையினை பயன்படுத்தும் வானொலி நிலையங்கள் பெரும்பாலும் வர்த்தக ரீதியான ஊடக ஆய்வு நிறுவனங்களின் தரவுகளையே ஆதாரமாகக் கொள்கின்றன. அத்தகைய தரவுகளின் அடிப்படையில் வானொலிகளின் தரத்தை நிர்ணயிக்க முடியாது. ஆய்வுகள் யாரை, எந்தநிகழ்ச்சியை, எந்தக் காலப்பகுதியை, எந்த மொழியை, எந்த நேரத்தை, எந்த அலைவரிசையை, எத்தகையோரை, எந்த வயதினரை, எந்தபாலாரினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன என்பது முக்கியம். அத்தோடு ஆய்வுகள் நடுநிலைமைகள் தொடர்பான பல கேள்விகள் உள்ளன. முதல்தரவானொலிகள் என்ற சொல்லை பயன்படுத்துவதில் இத்தகைய சிக்கல்கள் இருக்கின்ற போது, யார் உண்மையில் முதல்தரம் என்பது தொடர்பில் பொதுமக்களோ நேயர்களோ அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
ஒலிபரப்புத் தேற்றங்களுக்கும் விதிகளுக்கும் ஏற்ப அறிவிப்பாளர் நேயர் தொடர்பாடல் என்பது இப்போது ஒரு வழி தொடர்பாடலாக இல்லை. (One way Communication) இத் தொடர்பு இப்போது பல் வழி தொடர்பாடலாக மாறியுள்ளது. (Multi-way Communication) அறிவிப்பாளர் - நிகழ்ச்சி - நேயர் என்ற தொடர் இப்பொழுது காலாவதியாகியுள்ளது. இந்தப் பின்னணியில் டில்லியில் இடம்பெற்ற மாநாடு இலங்கையின் ஒலிபரப்புத் துறையை பலவாறு கேள்விக்குட்படுத்துகின்றது.
இந்தியா பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், நியூஸிலாந்து, ஐக்கிய ராச்சியம், அவுஸ்திரேலியா, கொரியா, ஜப்பான், சீனா, நேபாளம், நெதர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வானொலித் துறை ஆய்வாரளர்கள் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர்.
நேயர் - நிகழ்ச்சித் தொடர்பு, டிஜிட்டல் ஒலிபரப்பு, தகவல் தொடர்பாடலின், இணைய ஒலிபரப்பு மக்கள் சேவை ஒலிபரப்பு, சமூக வானொலியும், மக்கள் அபிவிருத்தியும், செய்மதி வானொலி, நேயர் நடத்தைகள், வானொலி ஆய்வு, சந்தைப்படுத்தலும், சமகால வானொலியலும், இளைய தலைமுறை ஒலிபரப்பு என பல துறைகளை ஆய்வுக அமர்வுகள் இடம்பெற்றன.
இலங்கையின் ஒலிபரப்புத் துறை தொடர்பான ஒரு தனி ஆய்வு சமர்பிக்கப்பட்டதுடன், வெளிநாட்டவர்கள் தமது ஆய்வுக் கட்டுரையில் இலங்கை தொடர்பான குறிப்புகளையும் தந்தனர். ஆவற்றை தொகுத்துத் தருவது நமது ஒலிபரப்புத் துறையின் சமகால போக்கினை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.
கல்விக்கான பொதுநலவாய நிறுவனத்தின் பணிப்பாளர்
கல்விக்கான பொதுநலவாய அமையத்தின் தலைவரான கலாநிதி ஆர் ஸ்ரீதர் தமிழ்நாட்டை சேர்ந்தவராய் இருந்தாலும் கல்வி, சமூக விருத்திக்கான ஒலிபரப்பு புத்தாக்கத்தில் தனது பெரும் பகுதியை தமிழ் நாட்டுக்கு வெளியில் கழித்து வருகின்றார். இவர் இலங்கையின் ஒலிபரப்பினை ஒலிபரப்பு தொன்மம் என்பர் (டீசழயனஉயளவiபெ ஆரதவா). ஓலிபரப்பின் மொழி, வடிவம், நிகழ்ச்சி உள்ளடக்கம், வெளிநாட்டு உத்தி என்பவற்றை அரசியலும், வர்த்தகமும் நிர்மாணிப்பதாக கூறுவார்.
ஓலிபரப்பிற்குரிய கல்வியூட்டல், விழிப்பூட்டல், சமூகத்துடன் ஒன்றிச் செல்தல், சமூகத்தை பிரதிபலித்தல், சமூகத்தின் தேவைகளை பிரதிபலித்தல் போன்ற அடிப்படை நியதிகளை மிக குறைந்தளவிலேயே இலங்கையில் காண்பதற்கில்லை என்றார்.
அவர் பொதுமக்கள் ஒலிபரப்பு தொடர்பான அரங்கிற்கு தலைமை தாங்கிய போது குறிப்பிட்ட கருத்துக்கள் நம்முன் சில கேள்விகளை முன்னிறுத்துகின்றன. இலங்கையில் ஒலிபரப்பும் நவீன ஒலிபரப்புப் போக்கு செயலிழந்துள்ளன. (Pசயடலணநன) என்றார் அதற்கு அவர் முன் வைத்த காரணிகள் பின்வருமாறு : ஒலிபரப்பில் கற்றல் கற்பித்தல் செயற்பாடு இல்லாதிருத்தல், பரம்பரை இடைவெளி ஒரு ஒலிபரப்பு அரசியல் வர்த்தகம் ஆகியவற்றை மாத்திரம் இலக்காக கொண்டிருத்தல். காலத்தின் சமூக மாற்றத்தினையும் பிரதிபலிக்காமை, சினிமாவிலிருந்து பிரிக்க முடியாமை, பொழுது போக்கு முதன்மை பெற்றிருத்தல், வர்த்தகம், சமூக நோக்கம் இரண்டையும் விட்டுக்கொடுக்காமல் நிகழ்ச்சி படைக்கும் ஆற்றல் அரிதாக இருத்தல், ஒலிபரப்பு கல்வியில் மாற்றம் செய்யப்படாமை என பல காரணிகளை முன் வைத்தார்.
இலங்கை தொடர்பாக அவரது ஆய்வுகளின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தாலும், அவரது தேடல் இலங்கையில் ஒலிபரப்பு கலை மீது அவருக்குள்ள ஆழமான பரீட்சியத்தை எடுத்துக் காட்டியது. டில்லியில் அமைந்துள்ள கற்றலுக்கான பொதுநலவாய நிறுவனம் (COL-CEMCA) வெளியிலிருந்து இலங்கை ஆய்வுக்குட்படுத்தினாலும் இலங்கைக்கான உதவிகளை குறைத்தே வைத்திருக்கின்றார்கள். அதற்கான காரணத்தையும் கலாநிதி ஆர் ஸ்ரீதரிடம் கேட்டோம்.
அதற்கு அவர் எமது நிறுவனத்திடம் இலங்கைக்கான நிதி இருக்கின்றது. ஆனால், பொதுநலவாய நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் குறிப்பாக கல்வியமைச்சு உரிய அங்கத்துவ பணத்தை செலுத்த வேண்டும். அங்கத்துவ பணம் 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள். ஆனால் அதனை செலுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் பெரும் நன்மை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களைவ விட அதிகம். அங்கத்துவ பணம் கிடைத்தால் நிச்சயமாக இலங்கைக்கு உதவிகளை செய்யலாம் என்றார்.
ஏனைய ஆய்வுகளின் சுருக்கம்
ஓலிபரப்பு கேள்விக்கான நெறி என்பது இப்போது இல்லாமல் ஆகி ஒலிபரப்பு ஈடுபாட்டுக்கான நடுநெறி என்று வந்துவிட்டது. ஒலிபரப்பில் வானொலியும் நிகழ்ச்சிகளும் முக்கியம் என்ற காலம் மாறி இப்போது நேயர்கள் முக்கியம் பெறும் காலம் வந்திருக்கின்றது. கலாநிதி பினோத் அகர்வால் என்பவர் ஒருவர் சராசரியாக ஒன்றரை மணித்தியாலங்களுக்கு குறைவாகவே வானொலிக்கு செவிசாய்க்கின்றார்கள். இதனால், வானொலி நிலையங்களின் அனேகமான நிகழ்ச்சிகளை பலர் கேட்பதில்லை. எனவே, நேயர்களுக்கு எந்த நேரம் ஓய்வாக இருக்கின்றதோ அதேநேரம் அவனுக்குத் தேவையானதை கிடைக்கச் செய்யும் விதத்தில் ஒலிபரப்பு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தாலிம் ஆய்வகத்தின் தலைவர் கலாநிதி அகர்வால் அரசுக்கு வழங்கும் அபரீமிதமான பிரச்சாரத்தை தவிர்த்துப் பார்த்தால் அரசாங்க தனியார் வானொலிகளுக்கிடையில் நிகழ்ச்சி, நிகழ்ச்சி உள்ளடக்கம் என்பவற்றில் பாரிய வித்தியாசங்கள் இல்லை. சில நேரங்களில் தனியார் மற்றும் அரசாங்க வானொலியினர் பயன்படுத்தும் மொழியில் மாத்திரம் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு என்பார். இக் கருத்து இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது. இலங்கையிலும் அரச மற்றும் தனியார் வானொலிகளுக்கிடையில் உள்ள மாற்றம் மொழி மாத்திரமே. அதிலும் இப்போது இரு தரத்தாரும் தமிழ் வெகுஜன சினிமா மொழியையே பயன்படுத்துகின்றார்கள். அதனைவிட வயது வித்தியாசம் என்பது இன்னொரு விடயம். அரச வானொலி ஒலிபரப்பாளர்கள் நடைத் தள்ளாடினாலும் அவர்களை விட்டபாடில்லை. அரச வானொலி விட்டாலும் மூத்தவர்கள் ஓய்வெடுத்தப் பாடும் இல்லை. வானொலி என்று வரும் போது எமது மூதாதையர்கள் இன்றும் இளமையாகவே இருக்கின்றார்கள். தனியார் வானொலியின் வர்த்தக ரீதியான வெற்றிக்கு அதில் இளம் குரல்கள் ஒலிப்பது ஒரு முக்கியமான காரணம். அது தவிற நிகழ்ச்சியின் தரத்தால் எந்த வானொலியும் முன்னேறியதென்று சொல்வாற்கில்லை. இந் நிலையில் மூத்தவர்கள் தான் எல்லாம் தெரிந்த ஒலிபரப்பாளர்கள் என்றும் இல்லை. இளையவர்கள் விஷயம் தெரிந்தவர்கள் என்றும் கருத்துள்ளன. எம்மை பொறுத்தவரை இவை இரண்டும் தவறானவை.
சில ஆசியா சாராத ஆய்வுகள் எப்எம் ஒலிபரப்பு இன்னும் சில காலத்தில் இல்லாமல் போகும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தன. மலேசியாவிலிருந்து ஆய்வறிக்கை வாசித்த ஷேக் அப்துல்லா வெளியுலகம் எவ்வாறு சுழன்றாலும் நாம் எமக்கு தேவையானதையே ஒலிபபரப்பிற்கு அடிப்படையாக கொள்கின்றோம் என்றார். பேராசிரியர் மலிக் காஞ்சன் ஒரு வானொலியின் வெற்றியை தீர்மானிப்பது இளைஞர்கள் என்ற தன் ஆய்வுச் சுருக்கத்தை முன்மொழிந்தார். வானொலியில் காலை நேர நிகழ்ச்சிகளே அதிக வரவேற்பை பெறுவதாக சில ஆய்வுகள் கூறின. இணையத்தள ஒலிபரப்பினை சிலர் செவிக்காக-அதாவது, கேட்பதற்காக செய்கின்றார்கள். ஆனால், இணையத்தள ஒலிபரப்பு பார்வை, கேள்வி, தொடுகை, அத்தனைக்கும் உரிய ஊடகம் என நிறுவப்பட்டது. ஒலிபரப்பின் வெற்றிக்கு (Pod Casting) மற்றும் சமூக ஊடகங்கள் வலைப்பதிவுகள், வலைப்பின்னலாக்கம் (Networking )என்பன முக்கியம் என்ற கருத்தினை பிபிசி மற்றும் ரேடியோ நெதர்லாந்து ஆய்வாளர்கள் முன் வைத்தனர். வெளியுலக ஒலிபரப்பு கண்டு வரும் மாற்றங்களை நமது வானொலி நண்பர்கள் மாத்திரமல்ல நேயர்களும் தெரிந்து கொள்ளத் தானே வேண்டும்.
எம். சீ. ரஸ்மின் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் www.ldjf.org