User:Kuddy143
இலங்கைக்கு எதிராக நேரடி போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள எதிர்ப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில் அவற்றை பகுதிப்பகுதியாக விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக யுத்த காலத்தில் வடக்கில் பெண் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு தனியான குழு ஒன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்த கால பாலியல் வன்முறை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மார்கொட் வால்ட்ரோம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
யுத்த காலத்தின் போது பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது, சர்வதேச ரீதியாக நவீன யுகத்தில் முகம் கொடுக்கப்படுகின்ற பாரிய சாவால் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக இந்த சிக்கல் முகம்கொடுக்கப்படுவதாகவும் இது நிராகரிக்கப்படும் அளவுக்கு சிறிய பிரச்சினை ஒன்று இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த காலத்தின் போது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படாத ஒரு பாதுகாப்பு நடவடிக்கை, உண்மையான பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடையும் அல்லது ஓயும் தருணங்களில், நூற்றுக் கணக்கான பெண்கள் கருதரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இது தொடர்பில் விசாரணை குழு அமைத்து சர்வதேச ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.
யுத்த காலத்தின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பின்னர் ஹிலாரி கிளிண்டன் தாம் வெளியிட்ட கருத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்த காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கம் ஹிலரி கிளின்டன் - பில்கிளின்டன் மற்றும் மோனிகா ஆகியோருக்கு இடையிலான பிரச்சினையை சுட்டிக்காட்டி, தமது உள்வீட்டு விவகாரங்களில் அவதானத்தை செலுத்துமாறு ஹிலாரி கிளின்டனுக்கு அறிவுரை வழங்கியது.
எனினும், பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தொடர்பிலான அறிக்கையிலும், யுத்த கால பாலியல் விடயங்கள் குறித்து, சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதேவேளை இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் தற்போது முறுகல்ந நிலை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு தனித்தனியான பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் மிதமாக மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது
==
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் ஆதரித்தும் சிறீலங்கா அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்யவேண்டும் எனக் கோரியும், ஐ.நா நிபுணர்குழுவை வரவேற்றும் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் முதற்தடவையாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
இலண்டன் றோஹம்டன் பல்கலைக் கழகத்தின் (Roehampton University), மனித உரிமைகள் பற்றிய குழுää மற்றும் இலண்டன் மெற்றோ பொலிற்ரன் பல்கலைக் கழக (London Metropolitan University) மாணவர் ஒன்றியம் ஆகியன விடுத்துள்ள பகிரங்க அறிக்கைகள் இத்தோடு இணைக்கப் பட்டுள்ளன.
சுமார் 34000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மெற்றோ பொலிற்ரன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 1983 ஜூலை கலவரத்தின் போது இலங்கையில் நடைபெற்றது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதைச் சுட்டிக்காட்டி அந்தக் காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 27 வருடங்கள் கடந்தும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளமை இங்கு முக்கியமானதென நாம் கருதுகின்றோம்.
சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவற்றின் ஆதரவை பெற்றதும் மனித உரிமை கற்கை நெறியினை பிரித்தானியாவில் கற்பிப்பதற்கு அரசின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரேயொரு பல்கலைக்கழகமாகவும் திகழும் இலண்டன் றோஹம்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் பற்றிய குழு தனது அறிக்கையில் இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைக்கும்ää சுயநிர்ணய உரிமைக்குமான ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தின் மீது தாம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலண்டன் றோஹம்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் குழு கருத்துச்சுதந்திரமற்ற சுழலில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளை பூகோள அரங்கில் எடுத்துச்செல்லக்கூடியதும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதுமான அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ள புலம்பெயர் தமிழர்களின் அணுகுமுறையைத் தாம் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகக் கூறியுள்ள இலண்டன் மெற்றோ பொலிற்ரின் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான நிபுணர் குழுவை அமைத்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதோடு இந்த நிபுணர் குழு இலங்கைக்குப் போய்வருவதற்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதியை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளோடு ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் இணைந்து செயற்படவேண்டும் என்றும் இந்த மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.
tamil seenu