Jump to content

User:Kohuranthoniyar

From Wikipedia, the free encyclopedia

கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம்

கீழ்வேலூர்-நாகப்பட்டினம்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அதுபோல கோகூர் புனித அந்தோனியாரின் திருச்சொருபம் மண்ணுக்குள் இருந்து வெளிவந்து இன்று புதுமைகள் பல செய்யும் சொரூபமாக மாறிஉள்ளது ,கோகூர் புனித அந்தோனியாரின் திருச்சொருபம் அளவில் 1 அடி தான் ,ஆனால் செய்யும் புதுமையோ கோடிகணக்கான மக்களின் சந்தோசம் வாருங்கள் கோகூர் புனித அந்தோனியாரின் திருத்தலதிற்கு

நாகப்பட்டினம் அருகே கீவளூர் பங்கில் உள்ள கோகூர் புனித அந்தோனியார் தினமும் தன்னை நாடி வரும் எல்லா மத மக்களுக்கும் புதுமைகளை அள்ளி அள்ளி தருகிறார் .நேர்த்திகடன் என்னவென்றால் கையில் தீச்சட்டி எடுத்து கருப்பு நிற ஆடை அணிந்து அந்தோனியாரை வேண்டிகொள்கிறார்கள்,அந்த ஒரு நாளில் மட்டும் 1 லட்சம் மக்கள் வந்து கோகூர் புனித அந்தோனியாரை மகிமை படுத்தி செல்கிறார்கள் ,நீங்களும் ஒருநாள் கோகூர் புனித அந்தோனியார் ஆலயம் வந்துதான் பாருங்களேன் ,இடம் தஞ்சாவூர் லிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து (திருவாரூர் வழி )எல்லாம் கீவளூர் பங்கில் நிற்கும் ,அங்கிருந்து ஆ ட்டோ மூலம்(மினி பஸ் வசதியும் உண்டு ) கோகூர் புனித அந்தோனியாரை ஒருமுறை பார்த்து வேண்டி வாருங்கள் அப்பறம் புரியும் கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை .

முக்கிய வேண்டுகோள் :

கோகூர் புனித அந்தோனியாரை நம்பி வரும் பக்தர்களுக்கு தங்க இடமும் ,குடிக்க தண்ணீரும்,கழிப்பிட வசதிகளும் கிடைக்காமல் இருப்பது ஒரு குறையாகவே உள்ளது ,இந்த குறையை போக்க நன்கொடைகள் வரவேற்கபடுகிறது..

தொடர்புக்கு

பங்கு தந்தை அவர்கள் புனித வளனார் ஆலயம் கீழ்வேலூர்-நாகை 04366-275210

கோகூரில் கோயில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் வரலாறு

நாகப்பட்டினம் மறை வட்டத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு ,ஒன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலம் ,மற்றொன்று கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் ,ஜூன் மாதம் நடைபெறும் கோகூரில் கோயில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் பெருவிழாவிலும் ஆயிரகணக்கான மக்கள் கூடுவதையும் ,ஜெபிப்பதையும் பார்ப்போர் பரவசம் அடைகின்றனர் .கண்டோர் சாட்சி கூறுகின்றனர் ,நாகையிலிருந்து மேற்க்கே திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் லிருந்து வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம் உள்ளது .இந்த கிராமத்தில் தான் புனித அந்தோனியார் குடிகொண்டு அற்புதங்கள் ,அதிசயங்கள் செய்து வருகிறார்,

கோகூர் பெயர்காரணம் :

கோகூரின் பழைய பெயர் "பனந்தோப்பு ".கோவூர் கிழார் என்னும் பெரியவர் இங்கு தங்கி இருந்ததால் காலப்போக்கில் அது மருவி அவர் பெயரிலே கோகூர் என பெயர்பெற்றது .இவருக்கு பிறகு "வெள்ளை புடவை கார அம்மா " என்னும் ஒருவர் இங்கு தங்கி அறப்பணிகள் செய்து வந்தார்,ஆனால் காலப்போக்கில் இங்கிருந்து மறைந்துவிட்டார் என்பது செவிவழி செய்தி.

கோகூரில் கோயில் வந்தது எப்படி

கி.பி 1837 ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுகொண்டு இருந்தார்,அவ்வேளையில் புனித அந்தோனியார் சொருபம் ஒன்று நீரில் மிதந்து துண்டிலை சுற்றி சுற்றி வந்தது ,அந்த முதியவர் அதை ஒதுக்கிவிட்டு தூண்டில் போட்டார்,ஆனால் மீண்டும் மீண்டும் அந்த அந்தோனியார் சொருபம் தூண்டிலை சுற்றி வர வியப்படைந்த அவர் சொருபத்தை தன் வீட்டுக்கு கொண்டுவந்தார் ,அன்று இரவு அவர் தூங்கும் போது ,கனவில் அவர் பெயரை சொல்லி கோகூரில் தனக்கு ஒரு கோவில் கட்டவும் ,நான் அந்தோனியார் என்றும் கூறியது .கண் விழித்த அவர் காலையில் ஊர் மக்களிடம் நடந்ததை சொல்லி ,எல்லோரின் உதவியுடன் முதன்முதலில் கீற்று கோவில் கட்டி புனித அந்தோனியார் சொருபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர் ,அந்த புதுமை வழங்கும் புனித அந்தோனியார் சொருபம் இன்று ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது


கோகூர் புனித அந்தோனியார் செய்த புதுமைகள் ..



கோகூர் புனித அந்தோனியாரின் புதுமை 1:


சலவை தொழிலாளி ஒருவர் கோகூர் புனித அந்தோனியாருக்கு நேர்த்தி கடன் வேண்டி,நிறைவேறியதால், கோகூர் புனித அந்தோனியாருக்கு சமைத்து போடணும் என்ற எண்ணத்தில் ,சமைத்துவிட்டு எல்லா மக்களையும் சாப்பிட வருமாறு அழைத்தார் ,ஆனால் மக்கள் அவரை தாழ்ந்தவர் என்று சொல்லி சாப்பிட வர முடியாது என்று அவமானபடுத்திவிட்டனர்,சலவை தொழிலாளி மனம் நொந்தவாறு அந்த சாப்பாடு எல்லாத்தையும் ஒரு குழி தோண்டி புதைத்து விட்டு சென்று விட்டார்.அடுத்த ஆண்டு அதே இடத்தில் சமைக்க அடுப்பு தோண்டிய போது சூடான ஆவி வெளிவர ,மக்கள் பயந்து போய் குழி தோண்டி பார்த்தபோது சென்ற ஆண்டு சமைத்த சாதமும் குழம்பும் அன்று சமைத்தது போலவே இருந்தது கண்டு அனைவரும் வெட்கத்தால் வியந்தார்கள் .தங்கள் தவறை உணர்ந்தார்கள் ,கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை எண்ணி எல்லோரும் அந்த உணவை உண்டார்கள். அனைவரும் கடவுளின் மக்கள் என்று கோகூர் புனித அந்தோனியார் புரிய வைத்தார்.இந்த புதுமைக்கு கோகூர் மக்களே சாட்சி .



கோகூர் புனித அந்தோனியாரின் புதுமை 2:

தவிடுபொடியாகும் செய்வினை,ஏவல்,பில்லி,சூனியம் எல்லாம் கோகூர் புனித அந்தோனியார் ஆலயத்திற்க்கு வந்தவுடன்

கோகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தீய ஆவியின் பிடியில் சிக்கி நோயுற்று ஒரு பெண் இருந்தாள்.அவள் செவ்வாய் தோறும் கோகூர் புனித அந்தோனியார் ஆலயத்திற்க்கு வந்து ஜெபித்து உறங்குவார்,அப்போது கோகூர் புனித அந்தோனியார் கனவில் தோன்றி பின்வருமாறு சொன்னார் :மகளே நீ நாளை வந்து கோயில் பிள்ளையை பார் ",இதை கோயில் பிள்ளையும் கேட்டு அந்த பெண்ணுக்காக ஜெபித்து ,நாளை வாம்மா என்று கூறி சென்று விட்டார்,அடுத்த நாள் அந்த பெண் வந்தவுடன் கோகூர் புனித அந்தோனியார் சொருபத்தின் பாதத்தில் இருந்து செய்வினை செய்த சீட்டை எடுத்து கொடுத்தார்,உடனே அந்த பெண்ணின் உடம்பில் இருந்து அசுத்த ஆவி வெளியேறியது ,இப்போது நலமுடன் வாழ்கிறாள் அந்த பெண் பூலங்குடி என்ற கிராமத்தில் -அந்த பெண்ணே சாட்சி கூறி இருக்கிறாள்.




கோகூர் புனித அந்தோனியாரின் புதுமை3:

குழந்தை வரம் தருகிறார் -கோகூர் புனித அந்தோனியார்

தீர்த்தம்பேட்டை என்ற ஊரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைபேறு இல்லை,கோகூர் புனித அந்தோனியாரை நம்பி வந்து செபித்து ஆலயத்தில் உறங்கினார்,கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையால் குழந்தை பாக்கியம் பெற்றாள் .


குழந்தை வரம் தருகிறார் -கோகூர் புனித அந்தோனியார்.




கோகூர் புனித அந்தோனியாரின் புதுமை3:

காணாமல் போகும் எல்லாவற்றையும் கண்டு பிடித்து தருபவர் கோகூர் புனித அந்தோனியார்

ஒரு குடும்பத்தார் கோகூர் புனித அந்தோனியாருக்கு வேண்டிக்கொண்டு ஆடு ஒன்று வளர்த்தார்கள்,வேண்டுதல் நிறைவேறும் நாள் வந்தபோது அந்த ஆடு காணாமல் பொய் விட்டது,அந்த குடும்பம் எங்க தேடியும் ஆட்டை காணவில்லை,பிறகு வருத்ததுடன் வேறொரு அட்டை வாங்கி வேண்டுதலை நிறைவேற்றபோகும்போது ,காணமல் போன அதே ஆடு அந்த இடத்தில் வந்து நின்றது ,அந்த குடும்பம் கோகூர் புனித அந்தோனியாருக்கு நன்றி சொல்லி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்,காணாமல் போகும் எல்லாவற்றையும் கண்டு பிடித்து தருபவர் கோகூர் புனித அந்தோனியார்


கோகூர் புனித அந்தோனியாரின் புதுமை :

1952 ஆண்டு கோகூரில் பெரும் புயல்,வெள்ளம்,வந்து மக்கள் தனக் இடமில்லாமல் மிகவும் துன்ப பட்டார்கள் ,மக்கள் எல்லாரும் கோகூர் புனித அந்தோனியாரை நம்பி ஆலயத்திற்குள் வந்து தங்கினார்கள்,வெள்ளம் அதிகரித்தாலும் ஆலய படிக்கட்டை தாண்டி உள்ளே ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை,இது ஒரு பெரும் புதுமை என கோகூர் மக்கள் இன்றும் கூறுகின்றனர்








கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை சொல்லிக்கொண்டே போகலாம் நீங்களும் ஒருநாள் கோகூர் புனித அந்தோனியார் ஆலயம் வந்துதான் பாருங்களேன்,பிறகு நீங்களும் கோகூர் புனித அந்தோனியாரின் சாட்சியாய் வாழ்வீர்கள். மரியே வாழ்க

ஏசுவுக்கே புகழ்

வளர்க கோகூர் புனித அந்தோனியாரின் புகழ்.

This Blog is created by

M.RAJARAM.ME.MCA(Eng).MBA(S)., Asst Professor.

This Blog is Co-ordinates by

Rev.Fr.S.David Selvakumar.MA.MA.,

Parish Priest.St Joshep's Church. Keelvelur-Nagapattinam.04366-275210