User:Kathiramangalam
நம்ம ஊ௫ கதிராமங்கலம்
[edit]https://www.facebook.com/selvarajswamigal?ref=hl <gallery>
கம்பர் தான் எழுதிய இராமாயணத்தை திருவெண்ணெய் நல்லூரிலேயே (கதிராமங்கலம்) அரங்கேற்றம் செய்துள்ளதாகவும்....., அந்த ஆதாரம் 'மாலிக் கபூர் படையெடுப்பில்' அழிச்சிட்டதாக "கவிஞர் வாலி" ....MGR கிட்ட சொன்னதாக 1.2.2012 துக்ளக் வார இதழில் எழுதியுள்ளார்... அநேகமாக "மடம்பெருமாள் திடல்" அல்லது "முள்ளுகுடி" (கம்ப சேவை)யில் இருக்குமோ? சடையப்ப்ப வள்ளலை கம்பர் பத்தில் ஒரு பாட்டு, பின் நூறில் ஒரு பாட்டு, பின் ஆயிரத்தில் ஒன்றாக வைத்தாராம். இதை வாலி சொன்னதும் "ஆயிரத்தில் ஒருவன்" அருமையான படத்துக்கு பெயர்கிடைத்து விட்டதாக MGR மகிழ்ந்தாராம்!
'வெண்ணெய் நல்லூர்' கிராமம் எல்லா வளங்களுடன் மக்கள் வாழும் ஊர். அவ்வூருக்கு வணக்கத்திற்குரிய முனிவர் ஒருவர் வருகைபுரிகிறார். அவ்வூரில் அவரை யாரும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதற்கு பின்புலம் இவ்வூரில் மாதம் மும்மாரி பொழிவதால் எல்லா வளங்களுடன் மக்கள் வாழ்வதுதான் என்பதை அறிகிறார். இதற்கு மூலம் (மூலப் பெருமாள்) இவ்வூரில் உள்ள பொருமாள்...! ஒவ்வொரு ஆண்டும் இப்பெருமாளுக்கு கொண்டாடப்படும் விழா முடிவில் பெருமாள் தன் கையிலிருக்கும் சங்கை எடுத்து ஊதுவார்! அக் கணமே, மழைப் பொழிய ஆரம்பமாகும். பிறகு, மாதம் மும்மாரி பொழியும்.....என்பதை கண்டறிந்து, தன்னை மதிக்காத, அவ்வூர் மக்களை வஞ்சம் தீர்க்க நினைத்து முனிவர் சாபமிடுகிடுறார்....! "ஏ பெருமாளே, என்னை மதிக்காத, இவ்வூர் வளம் குன்ற வேண்டும், இவர்கள் பசி, பஞ்சத்தால் வாட வேண்டும்..! இதற்காக நீ உனது சங்கை இனி எக்காரணம் கொணடும் ஊதக்கூடாது! இது உன் மீது சத்தியம்! இவ்வூர் மக்கள் மீது சத்தியம்! என் தவப்பலன் உண்மையானால் இது நடக்க வேண்டும், என் தவம் மீது சத்தியம்!" என்று கோபத்தில் சாபமிடுகிறார்! அதிர்ச்சியில் பெருமாள் உறைந்து போகிறார்! ஆண்டுகள் ஓடுகிறது. கடவுளால் சத்தியத்தை மீறி சங்கை ஊத முடியவில்லே...! மழையின்றி வயல் வறண்டு, வெடித்து கிடக்கிறது, பஞ்சம் பசி....., 'சந்நியாசி சாபம்' பலிக்கிறது! மக்கள் விவசாயத் தொழிலை விட்டு, வெளி ஊர்களுக்கு செல்கின்றனர்! இந்நிலையில் அவ்வாண்டு தொடக்கத்திலும் 'பொன் ஏர்' பூட்ட, ஒரு வயதான உழவன் தன் ஏர் கலப்பையை தோளில் சுமந்து, தன் பேரப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்து வழக்கப்படி பெருமாளை வணங்கிவிட்டு வயலுக்கு செல்கிறார்! அதிர்ச்சியடைந்த பெருமாள் பின் தொடர, வயலுக்கு சென்ற உழவர் ஏரை ஓட்ட முற்படுகிறார்...! வயலுக்கு வந்த பெருமாள் சிரித்து விட்டு ச் சொல்கிறார்.... "ஏ மூடனே, யாருமே உழவில்லை. காரணம், வயல் வெடித்து கிடக்கிறதே, இதில் எவ்வாறு ஏர் ஓட்டுவாய்...? என்கிறார். இதற்கு விவசாயி, "பெருமாளே, இப்படியே போனால், விவசாயம் மறந்து போகும், ஏர் எப்படிஉழவேண்டும், கூட மறந்து போகும்' என்கிறார்! "பழக்கம் எப்படி மறக்கும்...?" என்ற கேட்ட கடவுளிடம்...... smile emoticon "ஆட மூடாப் (திறந்தவெளி) பெருமாளே! உன் கையில் உள்ள சங்கை நீ ஊதி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது உனக்கே மறந்து போயிருக்கும். அதை இப்படி (முன்புறமாக),ஊத வேண்டுமா? அப்படி (பின்புறமாக), ஊதவேண்டுமா? சரியாகச் சொல் பார்க்கலாம்?" என்றனர்! சிறுவர்களின் கேள்வியில் துணுக்குற்ற அப் பொருமாள்... "எனக்கொன்றும் குழப்பமில்லை.... இதோ இப்படித்தான் ஊத வேண்டும்", ஊதிகாட்ட மழை பெய்ய தொடங்கியது! பெருமாளுக்கு வெட்கமாயிற்று, சிறுகுழந்தைகளிடம் தான் ஏமாந்ததை நினைத்து!
மூடாப் பெருமாள் கோயில் இன்றும் கோவிலின்றியே உள்ளது! இப்பெருமாளுக்கு இருமனைவி இடது,வலதாக! இப்பெருமாள் சிலை, ஆறுமாதம் இந்த பக்கம், ஆறுமாதம் அந்த பக்கம் சாய்ந்திருக்கும். சில ஆண்டுகளுக்கு முன், திருடர்கள் இரு மனைவிகளையும் கடத்திவிட்டார்கள்....? இப்போது முன் பக்கம் சாய்ந்திருக்கிறார் வெட்கப்பட்டு.... மூட் அவுட் பெருமாள்! குறிப்பு:- கதிராமங்கலத்தின் முற்பெயர் "வெண்ணெய் நல்லூர்". ஆதாரம் "கம்பராமாயணம்" (10491) . "அரியணை அனுமன் தாங்க, ...அங்கதன் உடைவாள் ஏந்த, ....... வெண்ணெயூர் சடையன் (சடையப்பவள்ளல்) தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி. smile emoticon தொடரும்..... பகுதி II [சடையப்பர் வள்ளல், கம்பர் தொடர்பு ஆதாரங்கள் அழிக்கப்பட்டது ஏன்? அழித்தது யார்?]
command no 1 ஆமாம் திரு.கணேஷ்! ஆதி மூலப்பெருமாள் என்றும் அழைப்பார்கள்! (ஆனால் மூடாததிறந்த வயல்வெளியில் கோவில் இல்லாமல்) மூடாப் பொருமாள், மருவி மூடப்பெருமாள்! வள்ளலின் மாடத்தில் இருப்பதால் மாடப் பெருமாள் என்றும் அழைக்கப்பார்கள்!
command no 2 கம்பர் உத்தமசோழன் ஆட்சிக் காலத்திலும் (கி.பி.970 - 985), இருந்தவர்கள் என்பது ஆராய்ச்சியால் புலப்படுகிறது. கம்பனுக்கு அந்தக்காலத்திலேய ஒரு ஸ்பான்சர் கிடைத்தார். அவர் தேரழுநதூருக்கு சில மைல்கள் தொலைவில் இருந்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் அவர் கம்பரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வைணவ நாயகனான ராமனைப் பற்றி ராமகாதை எழுதப் பொருளுதவி வழங்கியுள்ளார். இதைக் கம்பனே பின்வருமாறு கூறுகிறார். “தோமறு மாக்கதை சடையன் வெண்ணை நல்லூர் வியின் தந்ததே ” ( சடையப்ப வள்ளல் வாழ்ந்த வெண்ணை நல்லூரில் தங்கி இருந்து, குற்றமற்ற இப்பெருங்காப்பியத்தைப் பாடி முடித்தேன் ) சடையப்ப வள்ளல் சிறந்து வாழ்ந்த வெண்ணெய் நல்லூரிலே இருந்து கம்ப நாடன் எழுதிய ராமகாதை, எண்ணப்பட்ட நூற்றாண்டு எண்ணூற்றேழிலே , பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரம் நிறைந்த நாளில் அரங்கன் முன் அரங்கேறியது ). திருமங்கையாழ்வார் பாடிய பாசுரத்தில், ""தொண்டையர்கோன் வணங்கு நீள்முடிமாலை வயிரமேகன் என வருவதால், நந்திவர்மனது பட்டப்பெயர் வயிரமேகன். இவனது காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு. கம்பர் இயற்றிய இராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டதை விளக்கும்,
""எண்ணிய சகாப்தம் எழுநூற்று ஏழின்மேற் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்பநாடன் பண்ணிய ராமகாதை பங்குனி அத்தநாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே
என்பதுவாம். சாலிவாகன சகாப்தம் 807 பங்குனி மாதம் 8-ஆம் நாளிலே (அட்டமியில்) திருவரங்கத்தில் அரங்கன் முன்னால் அரங்கேற்றினான். ஆதலால், திருவரங்கத்தில் கம்பனுக்குத் தனியாக சந்நிதி ஒன்றுண்டு. மேற்கண்ட பாடலில், "வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன் பண்ணிய ராமகாதை என்றுள்ளதே தவிர, வெண்ணெய்நல்லூரில் அரங்கேற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை இராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும் கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், கம்பனுக்கு கட்டளையிட்டாராம் . ÷கவிச்சக்கரவர்த்தி என்று "நாதமுனிகளால்' (கி.பி-9) கம்பர் சிறப்பிக்கப்பட்டதாலும், திருவரங்கத்தில் கம்பர் தம் இராமகாதையை அரங்கேற்றம் செய்ததாலும், வயிரமேகன் எனும் நந்திவர்மன் பெயரை திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுக் கூறியுள்ளதாலும் (நந்திவர்மன் காலம் கி.பி.9) கம்பரது காலம் கிபி. 9-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். கேள்வி ---- எம்.ஜி.ஆர் சடையப்ப வள்ளலாக நடித்தப் படத்தின் வில்லன் நடிகர்கள் யார் யார்?
command no 3
கடலூரைச் சேர்ந்த திரு. " கிளமண்ட் ஈசுவர்" என்ற நூலாசிரியர் தனது நூலான (கம்பர்) "இராமயணம் அரங்கேற்ற பட்ட பாடு"- என்ற நூலில் இதுபற்றிய விவரங்களை ஆராய்ந்து எழுதியுள்ளார். இதற்கு முன்பே,
ககிராமங்கலத்தை சேர்ந்த 'சைவப் புலவர்' திரு. இரா. இராமகிருஷ்ணன் அவர்களும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை செய்யுளாக எழுதியுள்ளார்!~~~~https://www.facebook.com/selvarajswamigal?ref=hl[1]