User:Karthiban Harikrishnan
என் பெயர். எச். கார்த்திபன், நூலகம், தகவல் அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி நிபுணர், தகவல் மற்றும் ஆவணக் காப்பாளர், எழுத்தாளர், விக்கிப்பீடியன், வலைப்பதிவர், கல்வி ஆலோசகர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர், பயிற்சியாளர், ஆலோசகர் என பன்முக தளங்களில் இயங்கி வருபவன்.
நான் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டமும், B.C.A., M.Sc., LL.B., M.L.I.S., M.Phil., PGDLAN., ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளேன்.
உலகிலேயே தமிழ் நூல்களுக்குத் தனிச்சிறப்பு வாய்ந்த நூலகங்களில் ஒன்றான ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் எனது தொழில்முறைப் பணிவாழ்க்கையைத் தொடங்கியவன். அங்குத் எனது தொழில்முறைப் பயிற்சியை மேற்கொண்டு அங்கேயே வல்லுநராகப் பணிபுரிந்தேன் பிறகு பிரபல பன்னாட்டு நிறுவன நூலகம், கல்வி நிறுவன நூலகம், தனியார் ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம், ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளேன். சிகாகோ பல்கலைக்கழகம், முன்னணி சர்வதேச நூலகங்கள் மற்றும் பல உள்நாட்டு நூலகங்களின் திட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். சர்வதேசத் தரத்தில் ஆவணப்படுத்துதல், நூற்பட்டியலிடுதல், மின்னணுவாக்கம் செய்தல், நூல்களைப், பாதுகாத்தல் மற்றும் நூலகப் பணிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற வல்லுநர்.
தொடர் கற்றல், படைப்புணர்வு, புதுமைச் சிந்தனை, புதிய ஆக்கங்களை உருவாக்குவது எனது ஆர்வம் இது குறித்து மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டி வருகிறேன்.
கல்வி, ஆராய்ச்சி, நிறுவனம், மற்றும் தனிப்பட்டவர்களுக்கான நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், டிஜிட்டல் நூலகங்கள் அமைத்தல் நிறுவனம், தனிப்பட்டவர்களின் ஆவணங்களை ஆவணப்படுத்தல், ஆவணங்களைப் பாதுகாத்தல், நூலகப் பட்டியல், நூலக மென்பொருள், மின்னணுவாக்கம், இணையத்தளம் வடிவமைத்தல், குறிப்புதவி சேவைகள், நிகழ்ச்சிகள் மேலாண்மை, டிஜிட்டல் மார்கெட்டிங் போன்றவற்றிற்குத் தொழில் நிறுவனங்கள், நூலகங்கள், மற்றும் தனிநபர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்கி வருகிறேன்.
Tools
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் இவரின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக, "தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழ்", "சிறந்த தேசிய நூலகர் விருது" "சிறந்த சேவைக்கான விருது" ஆகியவற்றைப் பெற்றுள்ளேன்.