Jump to content

User:Kamis.akk

From Wikipedia, the free encyclopedia

கமு/கமு/அல்-மனார் மத்திய கல்லூரி, மருதமுனை

அல்-மனார் என்ற அறபிப்பதத்திற்கு கலங்கரை என்பது பொருளாகும். கல்வியைத் தேடும் கண்களுக்குக் கலங்கரையாக விளங்கும் இப்பாடசாலை அகில இலங்கை ரீதியில் கல்விசார் துறையிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் முன்னணி வகித்து வருகின்றபது. இப்பாடசாலை 1910ஆம் ஆண்டு கிரமப் பாடசாலைச் சட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டது. 1911 இல் இப்பாடசாலைக்கான காணி நன்கொடையாக பெறப்பட்டு, அவ்வாண்டிலேயே தனது கல்விப்பணிக்கான முதல் அடியினை எடுத்து வைத்தது. 1912 நவம்பர் மாதத்தில் தனது பெயரைப் பதிவுனசய்துகொள்கின்றது. இதன் படிமுறை வளர்ச்சியின்னோது இப் பாடசாலையின் பெயர்மாற்றம் வருமாறு,

   1911ஆம் ஆண்டு அரச ஆண் பாடசாலை
   1920 ஆம் ஆண்டு அரச தமிழ் கலவன் பாடசாலை (பெண்கள்  1930களிலேயே  இணைக்கப்படுகின்றனர்)
   1953.06.24  ஆம் ஆண்டு மீண்டும் அரச ஆண் பாடசாலை எனப் பெயர்மாற்றப்பட்டு குறித்த காலத்துக்குள்ளே மருதமுனை வடக்கு அரசினர் பாடசாலை எனப் பெயர்மாற்றப்பட்டது.
   1958.09.26 முஸ்லிம் வித்தியாலயம்
   1974.01.01 ல் மருதமுனை அல்-மனார் மகாவித்தியாலயம் (இதன் போது 01.09.1958ல் அரசினர் முஸ்லிம் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டு 1970ம் ஆண்டு அல்-ஹிறா மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றப்பட்ட பாடசாலை,  முஸ்லிம் வித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டே  மருதமுனை அல்-மனார் மகாவித்தியாலயமாக மாற்றப்படுகின்றது.)



1911ஆம் ஆண்டுகளில் 1ம், 2ம் வகுப்புக்களுடனும் 50 மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை அகில இலங்னை ரீதியான தனது கல்விசார், இணைப்பாடவிதானம்சார் சாதனைகளினால் பல பிரதேச மக்களது கவனத்தை ஈர்த்தது. இன்று 1ஏ.பீ தரப் பாடசாலையாக பல பிரதேச மாணவர்கனளயும் உள்ளடக்கிய 2350ற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலையென்று மிளிர்கின்றது.

பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள்

   Mr. P.Sinnayyah 1912-1914
   Mr. JS. Veluppillai 1914-1920
   Mr. KS.Vairamuthu 1921-1935
   Mr.V. Samithambi 1935-1940
   Mr. U. Sinnathambi 1940-1941
   Mr. K. Ilayathambi 1941
   Mr. T. Seenithambi 1941-1943
   Mr. KS. Vairamuthu 1943-1948
   Mr. AM. Sharifudeen 1949-1950
   Mr. IMSM. Faleel Moulana 1950-1951
   Mr. E, Uthumalebbe 1951-1952
   Mr. AM. Sharifudeen 1952-1957
   Mr. UL. Iamail Marikkar 1957-1962
   Mr. A. Ahamadlebbe 1962-1969
   Mr. AH. Mohamed 1969-1976
   Mr. AH. Mohamed Majeed 1976-1992
   Mr. MH. Cader Ibrahim 1992-1994
   Mr. AL. Meera Mohideen 1994-2002
   Mr. SL. Abdul Raheem 2003-2009
   Dr. SMMS. Umar Moulana - from 2009 December



பரீட்சை தொடர்பான பதிவுகள் (இவை 1927 ஆம் ஆண்டிலிருந்தே கிடைக்கப் பெறுகின்றன)

   1927 – 1931 வரை : VSSC பரீட்சை
   1931 – 1944 வரை : SSC, JSC பரீட்சை
   1927 – 1935 வரை : மாணவ உபாத்தியாயர் பரீட்சை
   1935 – 1938 வரை : KSC பரீட்சை
   1938 – 1943 வரை : JSCபரீட்சை
   1978 : GCE (O'Level)
   1980 :GCE (A'Level)


பரீட்சைப் பெறுபேறுகளில் மீட்கப்படுபவை

   1941இலேயே அல்-ஹாஜ் SZM. மசூர் மௌலானா, ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் MAM. மஜீத் ஆகிய இருவரும் புலைமைப்பரிசிற் பரீட்சையில் சித்தியடைந்தனர். மேலும், 1946 - 5 பேரும் 1948 - ஒருவரும் 1949 - ஒருவரும் என அக்காலகட்டங்களிலே இப்பாடசாலை தனது புலமையை வெளிப்படுத்தியுள்ளது. இப்போது 1989 - 2011 வரையான காலப்பகுதிக்குள் புலைமைப்பரிசிற் பரீட்சையில் சித்தியடைந்தோர் 335டபேர் எனக் குறிப்புகள் கூறுகின்றன.
   1978ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த.(சா.த) பரீட்சைக்கு தோற்றி சிறந்த பதிவுகளைப் பேணியுள்ள இப்பாடசாலை 1999ல் இப்  பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 85.5% ஆன மாணவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகைமை பெற்று மாகாண மட்டத்தில் முதன்மை பெறச்செய்து ஆளுநர் விருதையும் பெற்றுக்கொண்டது.
   2007ம் ஆண்டு சிறந்த அடைவுச் சுட்டிகளுடன் வலய மட்டத்தில் முதலிடத்தில் தன்னைத் தக்கவைத்துக்கொண்ட இப் பாடசாலை எப்போதும் க.பொ.த.(சா.த) பரீட்சைப் பெ றுபேற்றில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றவாறே உள்ளது.
   1980 ஆகஸ்ற் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த. (உயர் தர)ப் பரீட்சைக்கு 11 மாணவர்களை முதன்முறையாக அனுப்பிய இப்பாடசாலை ‌வைத்தியர், பொறியியலாளர், விஞ்ஞான, முகாமைத்துவ, வர்த்தக, கலைப்பட்டதாரிகளெனவும் இன்னும் பல துறைகளிலும் பல்க‌‌லைக்கழகம் சென்றோர் 1500க்கும் மேல். 2004ம் ஆண்டு உயர் தர கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் 1ம் நிலையைப் பெற்று CWW. கன்னங்கரா விருது பெற்றவரும் இப்பாடசாலை மாணவரே.

கமு/கமு/அல்-மனார் மத்திய கல்லூரி சாதனைகளும் சரித்திரங்களும் பற்றிய தகவல்கள் பெறக்கூடிய நூல்கள்:

   கலங்கரை : வெளியீடு 1986ல் 75ம் ஆண்டு நிறைவு மலர்
   இமயம் : வெளியீடு 2003ல் சேவை நலன் பாராட்டு - முன்னாள் அதிபர் AHM. மஜீத்
   பசுமை : வெளியீடு 2003ல் சேவை நலன் பாராட்டு - முன்னாள் அதிபர் AL. மீரா முகையதீன்
   புலமை : 2001 முதல் இன்று வரை
   கலங்கரை : 2007 சிறப்பு வெளியீடு
   A/L தின விஷேட மலர் 2007 முதல் இன்று வரை
   இலக்கு : O/L தின விஷேட மலர் 2007 முதல் இன்று வரை
   ஜீனியஸ் : தரம் 9 க்குரிய சஞ்சிகை - 2007 முதல் இன்றுவரை
   செழுமை : வெளியீடு 2010ல் சேவை நலன் பாராட்டு - முன்னாள் அதிபர் SLA. றஹீம்


தொடர்புகளுக்கு:

SMMS. உமர் மௌலானா SLEAS அதிபர் கமு/கமு/அல்-மனார் மத்திய கல்லூரி மருதமுனை தொலைபேசி: 0672229332,0773464766 இணையத்தளம்: www.kmalmanarcc.com

                               www.almanarcentralcollege.webs.com                                www.kmalmanarcc.tk 

மின்னஞ்சல்: almanar1911@yahoo.com

                               almanar1911@gmail.com


மேலும் தகவல்கள் பெற: மருதமுனை வரலாறு - புலவர்மணி ஷரிபுத்தீன் அல்-மருதமுனை - சஞ்சிகைகள் புதுயுகம் - வீரகேசரி வெளியீடு