Jump to content

User:Geo Muralitharan

From Wikipedia, the free encyclopedia

புவி நடுக்க அலைகள்

[edit]

உலகில்  வருடாந்தம்  புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான புவி நடுக்கங்கள் பல்வேறுபட்ட பாதிப்புகளை புவியின் மேற்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும்  உயிரினங்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன.   புவி நடுக்கங்களை ஏற்படுத்துகின்ற அலைகள் பற்றிய கற்கைநெறி  புவியியல் துறையில் மிகவும் முக்கியமானதொன்றாக விளங்குகின்றது.

புவியின் உட்கட்டமைப்பினை  அறிவியல் ரீதியில் விளங்கி கொள்வதற்கு இப் புவிநடுக்க   அலைகள் பெரிதும் உதவுகின்றன.

புவி நடுக்க அலைகள்   பிரதானமாக இரண்டு வகையில் தொழிற்படும்.


01) Body Waves -  புவியின் உட்பகுதியில் தொழிற்படும் அலை

[edit]

P – முதன்மை அலைகள், (Primary Waves)

S –  இரண்டாம் நிலை அலைகள்/துணைஅலைகள், (Secondary Waves)

02) Surface Waves  புவியின் மேற்பரப்பில் தொழிற்படும் அலை

[edit]

L – மேற்பரப்பு அலை, (Love  Waves)  

R -  சுருள் அலை, (Rayleigh Waves)


P – முதன்மை அலைகள், (Primary Waves)

முதன்மை அலைகள் என அழைக்கப்படும் இவை புவியின் உட்பகுதியில் தொழிற்படுகின்றன. இவற்றினை அமுக்க அலைகள் எனவும் அழைப்பார். இவ்வலைகள் திண்மம், திரவம் ஆகியவற்றை ஊடுருவி செல்லக்கூடியவை. இவற்றின் வேகம் 8 km/s ஆகும்.


S –  இரண்டாம் நிலை அலைகள்/துணைஅலைகள், (Secondary Waves)

இரண்டாம் நிலை அலைகள் அதிர்வு அலைகளாகும். இவை திண்மப்பொருட்களை மாத்திரம் ஊடுருவிச் செல்லக்கூடியவையாகும். இவற்றின் வேகம் 6 km/s ஆகும்.

L – மேற்பரப்பு அலை, (Love  Waves)  

மேற்பரப்பு அலைகள் (Love Waves) மேற்பரப்பு அலைகள் கடல் அலையைப் போன்றதாகும். சுழற்சியையும்> அதிர்வையும் இவ் அலைகள் உருவாக்குகின்றன. இவை புவிமேற்பரப்பிலேயே பயணம் செய்கின்றன. இவற்றின் வேகம் 2km/s ஆகும். இந்த மேற்பரப்பு வகை அலைகளே புவிமேற்பரப்பில் நில அதிர்வை உண்டாக்குகின்றன.