User:தென்றல் முருகையன்
சொல்லாக்கம்
மொழியானது மாறும் இயல்பினது. அதனைப் பயன்படுத்துவோர் வாழும் கல்வி, அறிவியல், தொழில் நுட்பவியல், அரசியல், பொருளியல், சமூகவியல் , இனம், பண்பாடு, பன்மொழிச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்பவும், அவர்களுக்கு அறிமுகமாகும் புதிய பொருள்கள், கருத்தியல்கள், தேவைகளுக்கு ஏற்பவும் சொற்கள் ஆக்கம் பெறுகின்றன. தேவைக்கருதி சொற்கள் உருவாக்கப்படுகையில் மொழி, வளம் பெறுகிறது. சொல்லாக்கம் முயன்மையான 3 வகையில் அமையும். அவை,
- திரிபு (inflection) - ஆக்கம் (derivation) - சொல்லாக்கம் (word formation)
திரிபு (inflection)
- வேர் / அடிச்சொல்லோடு விகுதி சேரும். - இலக்கண மாற்றத்திற்கு வித்திடும். எ.கா: கண் (ஒருமை) > கண்கள் (பன்மை) இசை (பெ.) > இசைத்தாள் (வினை)
ஆக்கம் (derivation)
வேர் / அடிச்சொல்லின் முன் / பின் பகுதியில் ஒட்டு இணையும். சொல்லியல் செயற்பாட்டால் அமைவது.
ஒட்டாக்கம் [Affixation]
I)முன்னொட்டாக்கம் [Prefixation]
- சொல்லுக்கு முன் உருபன் சேரும்
எ.கா: அல் + திணை = அஃறிணை
அ + நீதி = அநீதி
Ii) பின்னொட்டாக்கம் [suffixation]
- சொல்லுக்குப் பின் உருபன் சேரும்
இரண்டு வகை உள்ளது:-
சொல் வகையை மாற்றும் ஆக்கம்
எ.கா: இணை(வி) + அம் = இணையம் (பெ) வாக்கு (பெ + அளி) = வாக்களி (வி)
சொல் வகையை மாற்றா ஆக்கம் எ.கா: ஆய்வு(பெ) + ஆளர் = ஆய்வாளர் (பெ) நால் (பெ) + மறை = நான்மறை (பெ)