User:கவிஞர் தே.பிரியன்
தே.பிரியன்
கிளிநொச்சி
பாடலாசிரியர்..
முகநூலின் வருகையின் பின்னால் புதிய உறவுகளின் முகங்கள் மட்டுமல்ல அவர்களின் அகங்களும் ஆற்றல்களும் அறிமுகமாகி வருவதோடு அழகிய பந்தமும் உருவாகுதல் கண்கூடு. அந்த வகையில் ஆற்றல் படைத்த பலரை இனம் கண்டு உறவுப் பாலங்கள் நீள்வது மகிழ்ச்சியைத் தருகின்றது.சிறந்தவற்றை சீர்தூக்கி ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழும் வாய்ப்பு மகத்தானது.
கவிஞர்கள்.கலைஞர்கள் அறிஞ்ஞர்கள்.பாடலாசிரியர்கள் என எமது தேடல் விரிகின்றது.
நேற்று தே.பிரியந்தன் எனும் இளம் பாடலாசிரியரின் பக்தி இசை மாலை இறுவட்டு தாயகத்தில் வெளியானது.பாடியிருப்பவர் எங்கள் தேசிய விடுதலைக்காக அனேக பாடல்களை பாடி எழுச்சியை ஊட்டிய பாடகி திருமதி சிவபாதம் பார்வதி யாவார்.இனி எங்கள் இளம் பாடலாசிரியர் தே.பிரியந்தன் பற்றி பார்க்கலாம்.இவர் தேவராசா காந்திமதி தம்பதிகளின் புதல்வராவார்.பண்ணங்கட்டி கிளிநொச்சியில் பிறந்து அங்கேயே இ்த.க பள்ளியில் தொடங்கி பின்னர் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போது 2006 இல் யுத்த சூழலால் இடை விலகல் ஏற்படுகின்றது.இன்று இவர் ஒரு விவசாயி. மீள் குடியேற்றத்தின் பின் தனது கவிப் புலமையால் கவிஞராகி கலைஞருமாகின்றார்.சக்தி fm வானொலியில் இவரது கவிதைகள் ஜனரஞ்சமாகத் தொடங்கியது.அழகிய குரல் வளத்துக்கு சொந்தக்காரனான இவர் குரலிலேயே பல கவிதைகளை கேட்கக்கூடியதாக அமைந்தது சிறப்பு. மற்றும் நிலாச்சோறு கவிக்களத்திலும் பல கவிதைகளை யாத்தவராகின்றார்.
ஆரம்ப காலங்களில் பண்ணங்கட்டி பிள்ளையார் ஆலயத்துக்காக இவரது வரிகளுக்கு செயல் வீரர் இசை அமைத்திட ஒலிப்பதிவினை கரோலின் மலையவன் மேற்கொள்ள பாடகர் சந்திரமோகன் பாடி இருக்கின்றார்.
மற்றும் (kpl) துடுப்பாட்ட போட்டிகளுக்காக துடுப்பாட்ட பாடல் இரண்டுக்கும் வரிகளை எழுதிய பிரியந்தன் தரமான ஈழத்து பாடலாசிரியர் வரிசையில் இடம் பிடிக்கின்றார்.நேற்றைய தினம் 13.02.2018 இல் உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்காக எழுதிய பாடல்கள் எங்கள் பாடகி திருமதி சிவபாதம் பார்வதி அம்மாவாவல் பாடப்பட்டது நெகி்ழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கின்றது.
தே.பிரியந்தன் பாடல். கவிதைகள். கட்டுரைகள் .எழுதுவதோடு நின்று விடாது நடிப்புத்துறையிலும் தன்னை ஈடு படுத்தி வருகின்றார்.வேடிக்கை எனும் குறும் படத்திலும் நடித்த இவருக்கு கிளி நொச்சி பிரதேச செயலகத்தினால் நடை பெற்ற குறும்படப் போட்டியிலும்nvq சான்றிதழ் கிடைக்கப் பெற்று பாராட்டப் பட்டுள்ளார். அமுத மழை இசைக்குடும்பத்தினரால் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவி அரங்கத்தில் கவி பாடி ஔிப்பதிவாகி இணையங்களிலும் முகநூலிலும் பதிவிறக்கம் செய்திருப்பதனைக் காணக் கூடியதாக இருந்தது சிறப்பு.
கவிஞர்
தயாநிதி தம்பையா