Talk:Shree Kailasha Nathar Temple
This article is rated Stub-class on Wikipedia's content assessment scale. It is of interest to the following WikiProjects: | |||||||||||||||||||||||||||
|
Untitled
[edit]About Piramanoor
Piramanoor is on of the Village in Tiruppuvanam Taluk , Sivaganga District , Tamil Nadu State . Piramanoor is located 23.8 km distance from its District Main City Sivaganga . It is located 418 km distance from its State Main City Chennai .
Other villages in Tiruppuvanam Taluk are Tiruppuvanam , Achangulam , Allinagaram , Chellapanendal , Ilandaikulam , K.Pethanendal , ... . .
Towns Near By Tiruppuvanam (3 km), Madurai (23 km), Sivaganga(24.3 km), Manamadurai(25.2 km), Kalaiyarkoil(41.4 km), Singampunari(43.6 km)
ஊர் சிறப்பு:-
பிரம்மதேவன் பூலோகம் வந்து கைலாய மலையிலிருந்து இறைவனை ஆராதனை செய்து லிங்கம் கொண்டுவந்து வணங்கி பூஜித்தது. தன் திருநாமம் இந்த ஊருக்கு வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இந்த ஊருக்கு பிரமனூர் என பெயர் ஏற்படக் காரணமாயிற்று.
தல வரலாறு :-
இறைவன் திருவிளையாடல் பல, அதில் அடிமுடி காணும் படலத்தின் வாயிலாகைரைவனின் சிறு திருவிளையாடல். காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவிற்கும், படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவனுக்குமிடையே யார் பெரியவன் என்ற போட்டி ஏற்படுகிறது.இதை தீர்த்துவைக்க யாராலும் முடியவில்லை. அப்போது சிவபெருமான் நெருப்பு மலையாக தோன்றி காட்சி தருகிறார். இருவருக்கும் சர்ச்சை தீரவில்லை. உடனே சிவபெருமான் "யார் ஒருவர் என் சிரசையோ அல்லது பாதத்தையோ விரைவாக தரிசனம் செய்கிறாரோ அவரே பெரியவர் எனக்கூற காக்கும் கடவுளாகிய விஷ்ணு பன்றி உருவம்பூண்டு பூமியை துளைத்து பாதத்தை பார்க்க செல்கிரார். படைக்கும் கடவுள் பிரம்மன் அன்ன வாகனம்பூண்டு ஆகாயம் நோக்கி செல்கிறார். ஆயினும் அவர்களால் சிவனின் சிரசையோ அல்லது பாதத்தையோ தரிசிக்கமுடியவில்லை. பிரம்மதேவன் செல்லும் வழியில் தாழம்பூவை சந்திக்க நேர்கிறது. உடனே பிரம்மன் தாழம்பூவிடம் தாம் சிவனின் சிரசை பார்த்ததாக பொய் சொல்லச் சொல்கிறார். தாழம்பூவும் சம்மதிக்கிறது. அதே சமயம் விஷ்ணுவோ எவ்வளவு முயன்றும் தம்மால் சிவனின் பாதத்தை காணமுடியாதது கண்டு தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைகிறார். பிரம்மதேவனோ தனக்கு சாட்சியாக தாழம்பூவை வைத்து சிரசை பார்த்ததாக கூற இறைவன் கோபம் கொண்டு பிரமனுக்கும் தாழம்பூவுக்கும் சாபம் கொடுக்கிறார். எனவே தான் பிரம்மதேவனை மூலவராகக் கொண்டு கோவில்களில் வழிபடும் பழக்கமில்லை.
சாப விமோசனம்:-
சாபவிமோசனம் வேண்டி நீ என்னை பூலோகம் சென்று வழிபட வேண்டும் எனவும், தாழம்பூ இனி சிவபூஜைக்கு ஆகாது எனவும் சிவபெருமான் கூறுகிறார். பிரம்மதேவன் கைலாயமலை சென்று அம்மை அப்பனை வணங்கி லிங்கம் கொண்டுவந்து வைத்து ஆராதனை செய்கிறார். ஆதலால் மூர்த்தி கைலாசநாதர் எனப்படுகிறார்.
ஆலயச்சிறப்பு:-
இங்கு இறைவனுக்கு இரண்டு கால பூஜை நடைபெறுகிறது மற்றும் எல்லா விஷேட காலமும் பூஜை நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று தாழ மரத்தை நடுவில் ஊன்றி சொக்கப்பன் ஏற்றுவது இங்கு தனிச்சிறப்பு.
- Stub-Class India articles
- Low-importance India articles
- Stub-Class India articles of Low-importance
- Stub-Class Tamil Nadu articles
- Low-importance Tamil Nadu articles
- Stub-Class Tamil Nadu articles of Low-importance
- WikiProject Tamil Nadu articles
- WikiProject India articles
- Stub-Class Hinduism articles
- Low-importance Hinduism articles
- Stub-Class Shaivism articles
- Low-importance Shaivism articles